இந்த வலையில் தேடவும்

Friday, February 18, 2011

கடைசிப் பதிவு! Good Bye from Samudra

இது நீண்ட நாட்களுக்கு முன்பே எடுத்த முடிவு தான்!
Yes இது சமுத்ராவின் கடைசிப் பதிவு..:)


இந்த முடிவுக்குப் பெரிதாக எதுவும் காரணம் இல்லை...நான் முதலிலேயே சொன்னபடி வார்த்தைகளுடன் விளையாடுவதில் எனக்கு விருப்பம் இல்லை...

'சமுத்ரா - வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு ' என்று பெயர் வைத்ததற்கான பொருளையும் சந்தோஷத்தையும் இன்று தான் முழுமையாக அனுபவிக்கிறேன்...

இது வரை எனக்குப் பதிவுலகில் ஆதரவு தந்த அனைவருக்கும் சமுத்ராவின் இதயப்பூர்வமான நன்றிகள்! கடைசிப் பதிவு என்பதால் இந்த கடைசிக் கவிதையை மட்டும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்..

'எனது
கவிதை-இன்னும்
எழுதப்படவில்லை

நான் எழுதியவற்றை
திரும்பிப் பார்க்கும் போது
அவை முதிர்ச்சி இன்றி
குழந்தைத் தனமாய்க்
காட்சியளிக்கின்றன...

எனது
கவிதை-இன்னும்
எழுதப்படவில்லை

எனது கவிதை
இறந்து போன
வார்த்தைகளால்
எழுதப் பட்டிருக்காது!

எனது
கவிதை-இன்னும்
எழுதப்படவில்லை

ஒருவேளை
நான் இறக்கும் வரை
அது எழுதப்படாமலேயே போகலாம்
அல்லது அதை எழுதிய
மறுகணம்
என் உயிர்
பிரிந்து விடலாம்!

எனது
கவிதை-இன்னும்
எழுதப்படவில்லை

உங்களிடமிருந்து பிரியா விடை பெறும்

முத்ரா

GOOD BYE

35 comments:

சக்தி கல்வி மையம் said...

கவிதை அருமை..

Katz said...

Gud bye...

சென்னை பித்தன் said...

உனது கவிதை எழுதப்படும்!
காலம் வசப்படும்,கவிதையும்தான்!
அதுவரை சென்றுவா!அனுபவம் பல கண்டு வா!

ஷர்புதீன் said...

இது ஏன்????

மொக்கை போடும் நானெல்லாம் பதிவிடும் போது ., நீங்க ஏன்....?

ஒரு சிறிய இடைவேளை என்று வேண்டுமானால் இருக்கலாமே தவிர , வெளியேறுவது ..... its not good for (us or me )

Unknown said...

என்னாச்சு?

ஆனந்தி.. said...

ஹாய்...சமுத்ரா..என்ன ஆச்சு? ஒழுங்கா பதிவை தொடருங்க...குட் bye எல்லாம் eraser வச்சு அழிச்சுட்டு சீக்கிரம் புது பதிவு போடுங்க..கூல் அண்ட் cheer up சமுத்ரா..

சமுத்ரா said...

@ஆனந்தி! உங்க அன்புத் தொல்லை தாங்க முடியலையே?

என்னமோ தெரியலை எழுதிட்டேன்...:)

ஆனந்தி.. said...

mm...good..good..:))

ஆனந்தி.. said...

நாளைக்கே திருப்பி வந்துட்டேன்னு ஒரு கவிதை போடுறிங்க..tit for tat ..:)))

சமுத்ரா said...

@ஆனந்தி! actually இந்த வீக் மட்டும் மூணு interview fail :(
அந்த பீலிங் ல ஏதோ ஒரு emotion -ல எழுதிட்டேன்..என்ன பண்றது?

ஆனந்தி.. said...

அட விடுங்க சமுத்ரா..அவங்களுக்கு கொடுத்து வைக்கலன்னு நினைச்சுக்கோங்க..உலகம் ரொம்ப பெருசு...நம்பிக்கையை விடாதிங்க..இணையம் நல்ல நட்புக்களையும்..காயம் படும் மனதுக்கு நல்ல ஆறுதலாகவும் இருக்கும் சமுத்ரா..depress ஆகாதிங்க..தொடர்ந்து முயற்சி பண்ணுங்க...

பத்மநாபன் said...

சமுத்திரா... எழுத படாத கவிதையை எழுதும் வரை எழுதுங்கள் ..
மௌனத்தின் அர்த்தம் வார்த்தையில் உள்ளது...வார்த்தைகளின் நடுவில் மௌனம் உள்ளது....

தொடர்ந்து மௌனமும் வேண்டாம்...கட்டாய வார்த்தைகளும் வேண்டாம்...வாழ்வியலுக்கு ஒத்துழைக்கும் அளவில் வலைப்பூ சுகம்...

Sugumarje said...

பசியெடுத்தவனுக்கெல்லாமே உணவு கிடைபதில்லை... உணவுவைக்கொண்டிருப்பனெல்லாம் பசியோடு இருப்பதில்லை. முடிவுகள் உங்கள் வசமே :)
எனினும் வாழ்த்துக்கள் :)

Chitra said...

பதிவுலகம் என்பது, நமக்கு மூச்சு வாங்கி கொள்ளும் இடம்... பெருமூச்சு விட்டு கொள்ளும் இடம்..... புது மூச்சு பிறக்கும் இடம்...
மனதில் இருப்பதை கொட்டும் diary போல... தொடர்ந்து எழுதுவதும், ஆறுதலாக இருக்கும் - உற்சாகமாக இருக்கும். வேண்டுமானால், ஒன்றிரண்டு வாரங்கள் பிரேக் எடுத்துக் கொண்டு மீண்டும் வாருங்கள்.
உங்களுக்கு நல்ல வேலை விரைவில் கிடைக்க எங்களது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்!

Cheer up!

Ramesh said...

இனி மெளனத்திலிருந்து வார்த்தை வரட்டும்... தலைப்பை மாத்துங்க போஸ்..
பதிவுகள் தொடரட்டும்

Unknown said...

நல்ல படியா போய்ட்டு வாங்க.. இல்ல.. போய்சேருங்க.....

ரஹீம் கஸ்ஸாலி said...

விரைவில் திரும்பி வாருங்கள் சார்.

சுரேஷ் சீதாராமன் said...

விரைவில் திரும்ப வாருங்கள்...

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அன்பின் சமுத்ரா,

உங்கள் முடிவில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அதற்குப் பின் இருக்கும் காரணம் உண்மையில் பாராட்டுக்குரியது. தரமற்ற ஒன்றை தருவதை விட தராமலிருப்பதே மேல் என்பதே உங்கள் வாதமானால், முயற்சியைக் கைவிட்டு ஒதுங்கிப் போவதைக் காட்டிலும் நின்று போராடலாமே. யாருமே பிறக்கும் போதே புலவர்களாகப் பிறப்பதில்லை என்பது என் எதிர்வாதம்.

நிறையப் படியுங்கள். எழுத்துக்கள் உங்கள் வசமாகும். விரைவில் உங்களின் புதுப்பதிவை எதிர் நோக்கி.

கணேஷ் said...

எல்லாமே உண்மை மாதிரி எதார்த்தமாக இருந்தது..நானும் உண்மை என்றே நம்பிவிட்டேன்..))

யாருக்காவும் எழுத வேண்டாம்..இப்போதைக்கு உங்களுக்காக எழுதுங்கள்..போக போக எல்லோரும் அதை எடுத்து கொள்வார்கள்..அதுக்காக உங்களைபோன்ர திறமைசாலிகள் போவது எங்களுக்கு ஒருபக்கம் இழப்பு இருந்தாலும்..அதிக இழப்பு உங்களுக்குத்தான்...உங்களின் திறமை வெளியில் வராமலே போகும்..

நான் தொடர்ந்து சொலவதுதன் தயவு செய்து எழுதுங்கள் நான் படிக்கிறேன்...

அடுத்த பதிவு அணு அண்டம ஆக இருந்தால் சந்தோசம்.

எல்லாம் சரியாகும்...எழுதுங்கள்..கவலை வேண்டாம்.

ஆயிஷா said...

கவிதை அருமை.மீண்டும் வாருங்கள்.

bandhu said...

எண்ணி மூன்று வாரம். அதற்குள் உங்களுக்கு மாறுதல் தெரியும் என்று தோன்றுகிறது! தொடர்ந்து எழுதுங்கள்!

test said...

//actually இந்த வீக் மட்டும் மூணு interview fail//
இதெல்லாம் ஒரு பிரச்சினையா பாஸ்?
வேலை கிடைக்குமட்டும் தான் நீங்க அலையணும்! கிடைச்சப்புறம் உங்ககிட்ட வேலை வாங்க அவங்க கெஞ்சுவாங்க இல்ல! அத நினைச்சு சந்தோஷப்படுங்க! :-)
நீங்க எழுதுறதே உங்களுக்கு ரிலாக்ஸா, மன அமைதியா இருக்கும்ல! தொடர்ந்து எழுதுங்க பாஸ்!

ரேவா said...

சமுத்திரம் ஒருபோதும்
வற்றிப் போகாது நண்பா.எதாவது ஒரு நிலையில் மீண்டும் மீண்டும்
பிரவேசித்து கொண்டுதான் இருக்கும்.
நீங்கள் நினைத்த பணியில் அமர அன்பெனும் ஆண்டவன் உங்களுக்கு துணையிருப்பான்...
நம்பிக்கையை கைவிடாதீர்கள்... உங்கள் மன சஞ்சலம் குறைய வேண்டுகிறேன்.. மீண்டும் வாருங்கள்.... உங்கள் அடுத்த பதிவிற்க்காய்
காத்திருக்கிறோம்...

Unknown said...

நண்பா கவிதைகளில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. நன்றாகவும் இருக்கிறது இடைவேளிவேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் அனால் தொடர்ந்து எழுதுங்கள். எழுதுபவர்கள் எழுத்தை விட நினைத்தாலும் எழுத்து அவர்களை விடுவதில்லை. உங்களால் அது முடியாது எழுத்து ஒரு உண்மையான காதலி நீங்கள் நேசிக்கும் அதே அளவுக்கு உங்களையும் அது நேசிக்கும் உங்களை அது விடாது. இதெல்லாம் சிறு ஊடல்கள்தான். மிகச்சிறந்த படைப்புகளை, பதிவுகளை உருவாக்குகிற சிந்தனைவளம் நிரம்ப தங்களிடம் இருப்பதாகவே எனக்கு தெரிகிறது .தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

எல் கே said...

erkanave comment potten athai kanom ???


sari boss bloga oru relax panrathukunu vachikonga. ok cheerup u will succeed in interview

நெல்லி. மூர்த்தி said...

நேற்று உங்களிடம் அலை பேசியில் தொடர்புக்கொள்ள முயற்சித்தேன். இரவு நேரமானதாலோ என்னவோ தங்களைத்தொடர்புக் கொள்ள இயலவில்லை. பிடிப்பும் சலிப்பும் நிறைந்தது தான் வாழ்க்கை. தங்களின் மிகுதியான நேரத்தினை வலைப்பூ ஆட்கொண்டமையால் தான் தாங்கள் நேர்முகத்தேர்வில் தவறியதாகக் கருதினால், சற்று இடைவெளி விடலாம். மனந்தளர வேண்டாம். நற்செயல் சில புரியும் போது எதிர்மறையானக் கருத்துக்கள் நம் நெருங்கிய வட்டத்திலிருந்து எழுவது இயல்பே! எவருக்காகவும் நம் நல் இயல்பினை மாற்றிக்கொள்ளவேண்டாம். சிந்தனை சிதறலுக்கான வழிகளை அடைத்து விட்டு காண்பீர் நீர் பெரும் வெற்றி! நம்பிக்கையுடன்... மூர்த்தி.

சமுத்ரா said...

பதிவுலகில் எழுதத் தொடங்கி சொற்ப காலத்தில் இவ்வளவு (உண்மையான) நண்பர்கள் கிடைத்திருப்பதும்
அவர்களின் ஆதரவும் அக்கறையும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது..OK i will start writing again :)
நம்மை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று டெஸ்ட் செய்யவோ, ஹிட்ஸ் வாங்கவோ இப்படி கடைசிப்
பதிவை எழுதவில்லை..இதற்கான காரணத்தை அடுத்த கலைடாஸ்கோப்- இல் சொல்கிறேன்..
எழுதுவதை நிறுத்த வேண்டாம் என்று என்னை ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும்
எனது தனிப்பட்ட நன்றிகள் பல...I will continue WRITING as usual ..:)

ஆனந்தி.. said...

Good :)))))))

vasu said...

நான் தொடர்ந்து விரும்பி படிக்கும் தளம்
(உங்களுடைய ஆன்மீக கருத்துகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும்....) நீகள் எழுதுவதை நிறுத்தினால் நான் நிச்சயம் miss பண்ணுவேன். மீண்டும் எழுத ஒப்புக்கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.... தொடர்ந்து எழுதுங்கள்......... மீண்டும் இது போன்ற முடிவிற்கு வர மாட்டீர்கள் என்று நம்புகிறேன்........... நன்றி.........

feroz said...

hi samudra
pl keep writing. we are missing your golden blogs

SUNDARAN said...

உங்கள் ஆன்மீக வேட்கையும், அறிவியல் வேட்கையும் ஒரே சத்தியத்தின் இரு பக்கங்கள். எல்லாம் சரியாகத்தான் போகிறது. ஒய்வு முடித்து எழுதுங்கள். நேரம் கிடைக்கும்பொழுது இந்த வலைப்பக்கத்திற்கு கொஞ்சம் வாருங்கள்.
வணக்கத்துடன், சுந்தரம்.
http://vaalkaivilakkam.blogspot.com/2010/07/blog-post_01.html

Dr.Dolittle said...

//actually இந்த வீக் மட்டும் மூணு interview fail :(
//

சமுத்ரா சார் , B.V.Sc முடிச்ச உடனே , சென்னைல ஒரு கிளினிக்ல வேலைக்கு போனேன் , முதல் interview வே சக்சஸ் , சம்பளம் ஆறாயிரம் ( முதல் மூணு மாசம் ட்ரைனிங் பீரியாடாமாம் ,ஆறாயிரம் தான் தருவாங்களாம் ) , வைத்தியம் பாக்கணும் , accounts பாக்கணும் . அப்புறமா ஒரு B .Sc படிச்சா பொண்ண accounts பாக்க வேலைக்கு வச்சாங்க , அதுக்கு சம்பளம் எட்டாயிரம் . அப்புறம் தான் P .G சேர்ந்தேன் . now i have confidence that i can start my own clinic and i can overcome them by my skills . (பட் அது என்னோட aim இல்லை ). நமக்கான கதவுகள் நிச்சயம் எங்கயாவது திறந்து இருக்கும் சார் .

Hammons said...

பசியெடுத்தவனுக்கெல்லாமே உணவு கிடைபதில்லை... உணவுவைக்கொண்டிருப்பனெல்லாம் பசியோடு இருப்பதில்லை. முடிவுகள் உங்கள் வசமே :) எனினும் வாழ்த்துக்கள் :)

Lynnxvai said...

நான் தொடர்ந்து விரும்பி படிக்கும் தளம் (உங்களுடைய ஆன்மீக கருத்துகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும்....) நீகள் எழுதுவதை நிறுத்தினால் நான் நிச்சயம் miss பண்ணுவேன். மீண்டும் எழுத ஒப்புக்கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.... தொடர்ந்து எழுதுங்கள்......... மீண்டும் இது போன்ற முடிவிற்கு வர மாட்டீர்கள் என்று நம்புகிறேன்........... நன்றி.........