இந்த வலையில் தேடவும்

Thursday, February 17, 2011

கலைடாஸ்கோப்-8

லைடாஸ்கோப்-8 உங்களை வரவேற்கிறது

டாக்டர்
========

டாக்டர்கள் இனிமேல் ப்ரெஸ்கிரிப்ஷனில் 'பிரம்ம லிபி' போல கிறுக்குவதற்கு அனுமதி இல்லையாம்..தெளிவாக Capital லெட்டர்களில் எழுத வேண்டும் அல்லது கம்பியூட்டர் பிரிண்ட்-அவுட் கொடுக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறி இருக்கிறது.. மருந்து கடைக்காரர்கள் கையெழுத்து புரியாமல் அனுமானத்தின் பேரில் ஏதோ ஒரு மருந்தைக் கொடுத்து அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்குத் தான் இந்த ஏற்பாடு..

இப்போது நான் அவசர அவசரமாக வரைந்த இந்த இரண்டு கார்டூனையும் (வேறு வழியின்றி) பார்க்கவும்







ஆறுதல்
=======

எழுதுவதை நிறுத்தி விடுகிறேன் என்று சொன்னால் வேண்டாம் என்று சொல்வதற்கு ஒரு மூன்று பேரையாவது (அவர்கள் பேரை இங்கே சொன்னால் அவர்களுக்கு மற்ற பதிவர்களிடம் இருந்து உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் சொல்வதற்கில்லை) பதிவுலகில் சம்பாதித்து (?) வைத்திருக்கிறேன் என்று நினைக்கும் போது ஆறுதலாக இருக்கிறது...எனவே இப்போதைக்கு நிறுத்தும் எண்ணம் இல்லை..சமுத்ராவின் அமெச்சூர் எழுத்துக்களை இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீங்கள் படிக்க வேண்டியிருக்கும்

எதை எழுதித் தொலைப்பது?
=========================

'பல்சுவைப் பதிவு' 'கலைடாஸ்கோப்' என்றெல்லாம் தலைப்பு வைத்து விட்டால் ஒரு சௌகரியம்..எதை வேண்டுமானாலும் எழுதலாம் (இன்னொரு பெயர் குப்பைத் தொட்டி !?) என்றெல்லாம் நீங்கள் நினைத்தால் அது தப்பு..நிறைய எழுத வேண்டும் என்றால் நிறைய ஊர் சுற்ற வேண்டும்..நிறைய அனுபவங்கள் கிடைக்க வேண்டும்..ஐ.டி. கம்பெனியின் அடைக்கப்பட்ட சுவர்களுக்கு உள்ளே அமர்ந்து கொண்டு 'ஆபீஸ் விட்டால் வீடு, வீடு விட்டால் ஆபீஸ்' என்று குண்டுச் சட்டிக்குள் டைட்டானிக் ஒட்டிக் கொண்டிருந்தால் எதை எழுதுவது? இருந்தாலும் எல்லாருக்கும் எழுதுவதற்கு எப்படியோ ஒரு மேட்டர் கிடைத்து விடுவது ஓர் அதிசயம்.(நகைச்சுவைக்கு தான் சொல்கிறேன்) பச்சைப்பயிறு சப்பாத்தி , கடுக்காய் பிரபாவ போதினி, பன்றிக் குட்டியை ஈன்ற பசு, என்று தமிழ் மணத்தில் தான் எத்தனை விதம் விதமான பதிவுகள்? உலகம் அழியும் வரை நமக்கு ஏதாவது எழுதுவதற்கு இருந்து கொண்டே இருக்கும் என்பது உண்மை தான்!

குளோபல் வார்மிங்
=================

உலகம் கொஞ்சம் கொஞ்சமாக சூடாகிக் கொண்டிருக்கிறது...ஒரு நாள் கடல் பொங்கி நம் எல்லாரையும் சுவாகா செய்து விடும் என்று ஒரு கோஷ்டியும் GW என்பதெல்லாம் வெறும் 'உடான்ஸ்' பூமி, இயற்கை இவையெல்லாம் மிகப் பெரியவை ...SELF HEALING ..அதாவது நாம் என்ன செய்தாலும் சமர்த்தாகப் பொறுத்துக் கொண்டு தானே சரி செய்து கொண்டு விடும் என்று இன்னொரு கோஷ்டியும் சொல்கிறார்கள்..ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டை கூட தானாகவே அடைத்துக் கொண்டு விட்டதாம்! என்ன தான் சொன்னாலும் நாம் நம்முடைய அன்னை பூமிக்கு நிறைய வெப்பத்தைப் பரிசளிக்கிறோம்..
இயற்கையிடமிருந்து ஆற்றலை எடுத்துக் கொண்டு பதிலுக்கு வெப்பத்தை அதற்கு அளிக்கிறோம்..நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் டார்ச் லைட்டில் இருந்து தொடங்கி விமானம் வரை ஆற்றலை மாற்றும் Process களில் by -product ஆக வெப்பத்தை வெளியிட்டு பூமியை சூடு செய்கின்றன. அது மட்டும் இல்லை..நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் தயாரிக்கப்படும் போது நிகழும் MANUFACTURING PROCESS வேறு வெப்பத்தை வெளியிடுகிறது
அதனால் தான் சூழியல் நலமிகள் (environmentalists ?) REDUCE ,RECYCLE ,RE -USE என்றெல்லாம் அலறுகிறார்கள்..அதாவது ஒரு ஷேவிங் ரேஷர் மொன்னையாகி நம் அரசியல் வாதிகள் மூளை மாதிரி
மழுங்கிப் போகும் வரை திரும்பத் திரும்ப உபயோகியுங்கள் ..சீரியல்களுக்கு இடையே 'ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் வஸ்திர கலா' போன்ற 'பயனுள்ள'(?) விளம்பரங்கள் வரும் போது தயவு தாட்சண்யம் பார்க்காமல் டி.வியை அணைத்து விடுங்கள் என்றெல்லாம்..எனக்கு ஒரு சந்தேகம் இந்த பஸ் டிரைவர்கள் வண்டி கிளம்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரேயே இன்ஜினை 'ஆன்' செய்து விட்டு பஸ்ஸை டொர்-டொர் என்று ஏன் உறும விடுகிறார்கள் என்று தெரியவில்லை..

ஊடகம்
=======

உலகின் தலை சிறந்த கலைஞர்களின் ஒருமித்த அனுபவம் என்ன என்றால் அவர்களின் தலைசிறந்த படைப்புகள் அவர்கள் இல்லாத போது உருவாக்கப் படுகின்றன என்பதாகும்..அதாவது அவர்கள் தன்னை இழந்து ஒரு தயார் நிலையில் , இறைத்தன்மை தன் மீது இறங்கி வெளிப்படுவதற்கு ஒரு ஊடகமாக இருக்கும் போது..
அது ஓவியமாகட்டும், நடனமாகட்டும் இசையாகட்டும் , கவிதையாகட்டும் அவர்களின் தலைசிறந்த படைப்புகள் 'நான்' என்ற உணர்வு மறைந்து விடும் போது ஏற்படுகின்றன என்கிறார்கள்..உதாரணமாக தெய்வீகப் பாடகர்கள் ஒரு ராகத்தைப் பாடும் போது தாங்கள் அதைத் தொடங்க மட்டுமே செய்கிறோம்..பின்னர் அந்த ராகம் தன்னைத் தானே
Develope செய்து கொள்கிறது என்கிறார்கள்..'நான் செய்கிறேன்' என்ற உணர்வு இருக்கும் வரை நம் படைப்புகள் அசிங்கமானதாகவும், ஏதோ ஒரு முக்கியமான 'அழகு' மிஸ் ஆவதாகவும் இருக்கும்..


இங்கே நாம் என்னடா என்றால் ஒரு மொக்கைக் கவிதையை நாலு நாள் யோசித்து எழுதி விட்டு, பாருங்கள் நான் எழுதி இருக்கிறேன் என்று திரட்டிகளில் இணைத்து, எல்லாருக்கும் மெயில் செய்து தம்பட்டம் அடிக்கிறோம்..

ஒரு சந்தேகம்
=============

தமிழ்ப் பதிவுலகில் நிறைய 'group ' கள் இயங்குவதாகத் தெரிகிறது..அவர்களின் குரூப்-களுக்குள் ஒரு சிறிய வட்டத்தில் இயங்கி அவர்களுக்குள் (அஹா ஒஹோ அருமை, உங்களிடம் அந்தத் தாகூரே பிச்சை எடுக்க வேண்டும் என்றெல்லாம்) கமெண்டுகள் போட்டுக் கொள்கிறார்கள் ..(mutual agreement ?) எனக்குத் தெரிந்து திருமதி.சித்ரா ஒருவர் மட்டும் தான் எல்லாப் பதிவுகளுக்கும் சென்று கமெண்டு போட்டு உற்சாகப் படுத்துகிறார்..இந்த மனப்பான்மை ஏன் என்று தெரியவில்லை..நாம் எல்லாரும் ஒரே வலைப் பூவின் மகரந்தங்கள் அல்லவா? NO EGO ப்ளீஸ்...

லீவு போச்சே
============

இங்கே (கர்நாடகாவில்) கர்நாடகா உதயமான தினத்தை 'கன்னட ராஜ்யோத்சவா' என்ற பெயரில் ஒவ்வொரு நவம்பர் ஒன்றாம் தேதியும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள் (ஐ.டி. கம்பெனிகள் உட்பட) ஆட்டோக்கள் சிவப்பும் மஞ்சளும் கொண்ட கொடிகளைத் தாங்கிப் பறக்கின்றன..கன்னட இலக்கியத்தில் பெரும் எழுத்தாளர்களை, கவி
ர்களை அன்றைய தினம் கௌரவிக்கிறார்கள்..அங்கங்கே மேடை போட்டு பொது மக்கள் " கன்னட விளக்கு ஏற்றுவோம்" என்று அரசியல் கலக்காமல் பாடுகிறார்கள்..ஒரு நாள் விடுமுறை வேறு அறிவிக்கிறார்கள்..நமக்கு தமிழ் நாடு உருவான தினம் ஞாபகம் இருக்கிறதா என்பது தெரியவில்லை..தமிழ் புத்தாண்டுக்கு இருந்த ஒரு விடுமுறையையும் அதை பொங்கலுடன் இணைத்து நீக்கி விட்டார்கள்..இன்னொரு விஷயம் பெங்களூருவில் எனக்குத் தெரிந்த வரை சுவர்களில் "அவர் வாழுக, இவர் வாழுக, தங்கத் தமிழ்(கன்னட) சிங்கம் வாழுக, புரட்சித் தலைவர்/ தலைவி, புரட்சி ஞாயிறு வாழுக" என்றெல்லாம் தலைவர்கள் மெகா சைஸ்களில் சிரிக்கும் ஒரு போஸ்டர் கூட கண்ணில் படவில்லை..


ஒரு ஓஷோ ஜோக்
================

எனக்கு இதற்கு மேல் எதுவும் மண்டைக்கு வரவில்லை..வழக்கம் போல ஓர் ஓஷோ ஜோக்குடன் முடித்துக் கொள்வோம்..

அந்தக் கணவனும் மனைவியும் ரயில்வே ஸ்டேஷனுக்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்த போது அவர்களின் டிரெயின் அப்போது தான் கிளம்பி விட்டிருந்தது..

கணவன் கோபத்தில் கத்தினான் : " நீ ரெடியாறதுக்கு அவ்வளவு நேரம் எடுக்காம இருந்திருந்தா நம்ம வண்டிய மிஸ் பண்ணாம ஏறியிருக்கலாம் "

மனைவி பதில் சொன்னாள் " நீங்களும் என்னை அவசரப் படுத்தாம இருந்திருந்தா இப்ப அடுத்த வண்டிக்கு நம்ம ரொம்ப நேரம் வெயிட் பண்ணற அவசியம் இருந்திருக்காது"

முத்ரா

8 comments:

Nagasubramanian said...

osho joke superb!

Chitra said...

Osho joke.. வாசித்து விட்டு ரொம்ப சிரிச்சேன்... ஒரு வாட்டி, நாங்க flight மிஸ் பண்ணப்போ - அந்த கணவர் சொன்னதை நானும், அந்த மனைவி சொன்னதை சாலமனும் சொல்ல, flight மிஸ் பண்ண டென்ஷன் போய் சிரிச்சிக்கிட்டு இருந்தேன்.

கணேஷ் said...

மூன்று பேர்கள் இல்லை நிறையா இருக்கிறார்கள்...தொடர்ந்து நிறையா எழுதுங்கள்..

Philosophy Prabhakaran said...

நிறைய கலர் தெரிஞ்சது...

ஆனந்தி.. said...

/தமிழ்ப் பதிவுலகில் நிறைய 'group ' கள் இயங்குவதாகத் தெரிகிறது..அவர்களின் குரூப்-களுக்குள் ஒரு சிறிய வட்டத்தில் இயங்கி அவர்களுக்குள் (அஹா ஒஹோ அருமை, உங்களிடம் அந்தத் தாகூரே பிச்சை எடுக்க வேண்டும் என்றெல்லாம்) கமெண்டுகள் போட்டுக் கொள்கிறார்கள் ..(mutual agreement ?) எனக்குத் தெரிந்து திருமதி.சித்ரா ஒருவர் மட்டும் தான் எல்லாப் பதிவுகளுக்கும் சென்று கமெண்டு போட்டு உற்சாகப் படுத்துகிறார்..இந்த மனப்பான்மை ஏன் என்று தெரியவில்லை..நாம் எல்லாரும் ஒரே வலைப் பூவின் மகரந்தங்கள் அல்லவா? NO EGO ப்ளீஸ்...//

அப்போ அந்த டோக்சா மேனியா???..:)))))))))

ஆனந்தி.. said...

/
//இங்கே (கர்நாடகாவில்) கர்நாடகா உதயமான தினத்தை 'கன்னட ராஜ்யோத்சவா' என்ற பெயரில் ஒவ்வொரு நவம்பர் ஒன்றாம் தேதியும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள் (ஐ.டி. கம்பெனிகள் உட்பட) ஆட்டோக்கள் சிவப்பும் மஞ்சளும் கொண்ட கொடிகளைத் தாங்கிப் பறக்கின்றன..கன்னட இலக்கியத்தில் பெரும் எழுத்தாளர்களை, கவிஞர்களை அன்றைய தினம் கௌரவிக்கிறார்கள்..அங்கங்கே மேடை போட்டு பொது மக்கள் " கன்னட விளக்கு ஏற்றுவோம்" என்று அரசியல் கலக்காமல் பாடுகிறார்கள்..ஒரு நாள் விடுமுறை வேறு அறிவிக்கிறார்கள்//

ஆமாம் சமுத்ரா..ரொம்பவே நல்லா கொண்டாடுவாங்க..நானும் கர்நாடகாவில் இருந்திருக்கேன்...ஆனால் இந்த மாதிரி மொழி பற்று தான் அங்கே நம்ம தமிழர்களை பார்த்தால் விரட்டி அடிக்கனும்னு தோணுதான்னு தெரில...மொழி பற்றை விட நாட்டு பற்று தான் முக்கியம் இல்லையா சமுத்ரா...நம்ம ஊருக்கு இதெல்லாம் வேண்டாம்...பொதுவாய் நாமெல்லாம் இந்தியன் அப்டிங்கிற நினைப்பு இருந்தால் போதும்...சரிதானே...:))

எனக்கு இந்த கலைடாஸ்கோப் என்ற தலைப்பு ரொம்ப பிடிச்சது...

ஷர்புதீன் said...

//முத்ராவின் அமெச்சூர் எழுத்துக்களை இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீங்கள் படிக்க வேண்டியிருக்கும்//

you deserve as a writer than me

Unknown said...

ஹஹஅஹா ஜோக் அருமை..
தெரிவு செய்த விடயங்கள் சூப்பர் பாஸ்..
வாழ்த்துக்கள்.

http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_18.html
என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!!