இந்த வலையில் தேடவும்

Monday, November 22, 2010

இருபத்து ஒன்று, பன்னிரண்டு -3

மாயன் காலண்டரில் பூஜ்ஜிய நாள் என்பது (0 .0 .0 .0 .0 ) இதற்கு முன் இருந்த உலகம் அழிந்து இப்போதைய உலகம் தோன்றிய நாளாம்..அந்த நாள் 11 ஆகஸ்ட் 3114 (கி.மு) என்கிறார்கள்...இந்த நாளில் இருந்து எவ்வளவு நாட்கள் கழிந்து விட்டன என்ற கணக்கில் இந்த காலண்டர் ஒரு குறிப்பிட்ட நாளை அடையாளம் காண்கிறது...எனவே இது மறுத்திரும்பாத நேர்கோட்டு நாட்காட்டி (non -repeating linear calendar ) என்று அழைக்கப்படுகிறது...இந்த காலண்டர் எண் 20 ஐ அடிமானமாக (பேஸ்) உபயோகிக்கிறது (மனிதனின் விரல்கள் இருபது என்பதால்)


11 ஆகஸ்ட் 3114 ..இந்த நாள் தான் உலகத்தின் ஆரம்பம் என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை..இருந்தாலும் மாயன் இனத்தவரின் ஜோதிட, வானியல் கணிப்புகள் எல்லாம் அறிவியல் முடிவுகளுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன என்கிறார்கள்...இந்த மக்கள் தங்களின் நகரங்களையும் வீடுகளையும் வானில் உள்ள கிரகங்களின் நிலைகளின் படி நிர்மாணம் செய்தார்களாம்... இவர்கள் பூமி சூரியனை சுற்றி வர மிகச் சரியாக 365.24 நாட்கள் ஆகின்றன என்று ஆயிரம் ஆண்டுகள் முன்பே கணித்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது...

இந்த காலண்டரில் ஒரு நாள் 'கின்' (k 'in ) என்று அழைக்கப் படுகிறது...இருபது நாட்கள் சேர்ந்து ஒரு 'யூனல்' (uinal ) ஆகின்றன..பதினெட்டு யூனல்கள் சேர்ந்து ஒரு 'துன்' (tun ) (இது நம் காலண்டரில் கிட்டத்தட்ட ஒரு வருடம் 20x18 =360 )இருபது துன்கள் ஒரு காதுன்(k'atun ) இருபது காதுன்கள் ஒரு 'பக்தூன்' ( b'ak'tun ) உதாரணமாக மாயன் காலண்டரில் 4 .5 .1 .10 .15 என்ற குறியீடு உலகப் படைப்பில் (?) இருந்து 4 பக்தூன்கள் 5 காதுன்கள் 1 துன் 10 யூனல்கள் மற்றும் ஒரு நாள் கடந்து விட்டது என்ற அர்த்தத்தை தருகிறது..

மாயன் கல்வெட்டுகளின் படி ஒவ்வொரு பதிமூன்று பக்தூன்களுக்கு பிறகும் ஒரு பிரளயம் தோன்றி உலகம் அழிகிறது...இப்போது நடப்பது பதிமூன்றாவது பக்தூன் ...அதாவது உலகம் அழியப் போவது 13 ஆவது யுகத்தின் முடிவில் (13 . 0 .0 .0 .0 ) இது நம் காலண்டரில் 2012 டிசம்பர் 21 அன்றுடன் ஒத்துப் போகிறது... கீழே மாயன் குறியீடுகளையும் அவற்றுடன் ஒத்த நாட்களையும் காண்க

13 . 0 .0 .0 .0 -ஆகஸ்ட் 11 , 3114 யுக பிறப்பு

1 . 0 .0 .0 .0 - நவம்பர் 13 2720

2 . 0 .0 .0 .0 -மே 21 , 1931

3. 0 .0 .0 .0

"
"
13 . 0 .0 .0 .0 - டிசம்பர் 12 , 2012 யுக முடிவு

(ச்சே, இந்த பதிமூனுக்கு நம்மளை எல்லாம் பயமுறுத்துவதே வேலையாப் போச்சுப்பா)

விரல்கள் இருபது என்பதால் 20 ஐ அடிமானமாக மாயன் மக்கள் எடுத்துக் கொண்டார்களாம்....(நாம் ஏனோ கை விரல்களை மட்டும் எடுத்துக் கொண்டு 10 ஐ அடிமானமாகக் கொண்ட கணிதத்தை உருவாக்கி விட்டோம்) ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என்பதால் அதனுடன் ஒத்து வருவதற்கு இருபதை 18 ஆல் பெருக்கினார்கள்...(மீதியிருக்கும் ஐந்து நாட்களை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவற்றை 'ராசியில்லாத' நாட்கள் என்று ஒதுக்கி விட்டார்கள்)

குகுல்சான் கோயிலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? (the Temple of Kukulkan ) தங்கள் காலண்டருடன் ஒத்து வரும் படி மாயன் இனத்தவர்கள் கட்டிய பாம்புக் கடவுளுக்கான கோவில் அது...(மெக்சிகோவில் உள்ள ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான சிச்சேன் இட்சாவில் உள்ளது) இந்த கோவில் மாயன் இனத்தவர்களின் புனித இடமாகும்...சூரியனை சுற்றி பூமி செல்லும் நிலைகளை ஒத்து கட்டப்பட்ட கலையமைப்பை உடையது...இது ஒரு பிரமிடின் வடிவில் இருக்கிறது...பிரமிடின் நான்கு பக்கங்களிலும் 91 படிகள் அமைந்துள்ளன...(4 x 91 =364 ) உச்சியையும் சேர்த்து 365 , அதாவது வருடத்தின் 365 நாட்கள் ... பிரமிடின் உள்ளே ஆராய்சியாளர்களைத் தவிர சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் படுவதில்லை...(இதன் உள்ளே சில ரகசியங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்)


நம் முன்னோர்கள் ஒரு வருடத்தை உத்தராயணம் மற்றும் தட்சிணாயணம் என்று இரு பிரிவுகளாகப் பிரித்தனர்...உத்தராயணத்தை தேவர்களின் பகல் காலம் என்றும் தட்சிணாயணத்தை தேவர்களின் இரவுக்காலம் என்றும் கூறினார்கள்..(மேலும் உத்தராயணத்தில் இறப்பவர்கள் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்வார்களாம்) அறிவியல் ரீதியாக உத்தராயணம் என்பது பூமியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை நோக்கி சாய்ந்திருக்கும் ஆறு மாத காலம் (பூமியின் சாய்ந்த அச்சின் காரணமாக) இந்த ஆறு மாதங்களில் சூரியனின் கதிர்கள் வடக்கு அரைக் கோளத்தில் செங்குத்தாக விழுவதால் பூமி வெப்பமாகவும் பகல் பொழுது அதிகமாகவும் இருக்கும்... தட்சிணாயணம் என்பது பூமியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை விட்டு விலகி இருக்கும் ஆறு மாத காலங்கள்...இந்த நாட்களில் சூரியனின் கதிர்கள் மிகவும் சாய்வாக பூமியின் மீது விழுவதால் குளிராகவும், இரவுப் பொழுதுகள் அதிகமாகவும் இருக்கும்...


மேலும் உத்தராயணத்தின் போது சூரியன் வானத்தில் வடக்குப் பக்கமாக கொஞ்சம் நகர்ந்திருக்கும் (நடு வானில் இல்லாமல்) ...(தட்சிணாயனத்தின் போது வானில் தெற்குப் பக்கமாக) ஆங்கிலத்தில் Solstice என்று அழைக்கப் படும் இந்த கதிர்-திருப்ப நாளின் போது சூரியன் வானத்தில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரும்...இந்த நாள் எல்லா நாடுகளிலும் ஒரு முக்கியமான உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது...(அந்தந்த கால நிலைகளுக்கு ஏற்ப,...கிறிஸ்மஸ் கூட ஒரு Solstice festival தான் ) இந்தியாவில் இந்த நிகழ்வானது சூரிய பகவான் தன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்குப் பக்கமாக நகர்த்தும் 'ரத சப்தமி' என்ற விழாவாகக் கொண்டாடப் படுகிறது...இன்றும் ஹிந்துக்களின் வீடுகளில் இந்த நாளின் போது சூரியனின் ரதத்தை கோலம் போட்டு அதற்க்கு பூஜை செய்து , பொங்கல் வைத்து, பால் பொங்கி அதை தேவர்களின் உஷத் காலமாகக்(dawn ) கொண்டாடுகிறார்கள்...(மார்கழியின் போது பாடப்படும் திருப்பாவை போன்ற பள்ளி எழுச்சிகள் தேவர்களின் இரவு முடிந்து விட்டதை அறிவித்து அவர்களை துயில் எழச் செய்யவே பாடப்படுகின்றன)



சரி இதற்கும் குகுல்சான் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இந்த பிரமிடு ஒரு 'மினி சூரிய குடும்பம்' போன்றதாம்...இதைப் பார்த்தே வானில் எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று கூறி விடலாமாம்...(நமக்கெல்லாம் மேலே பார்த்தால் கூட தெரிவதில்லை :-( )

இந்த பிரமிடின் நான்கு பக்கங்களில் பெரிய பாம்புத் தலைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.. இந்த பாம்புகளுக்கு வேண்டுமென்றே உடலும் வாலும் அமைக்கப்படவில்லை...இது ஏன் என்றால் சூரியத் திருப்பம் ஏற்படும் வருடத்தின் அந்த இரண்டு நாட்களில் சூரிய ஒளி இந்த பிரமிடின் மீது விழுமாம்...அப்போது அதன் பக்கவாட்டுச் சுவர்களின் நிழல்கள் பிரமிடின் மீது விழுமாம்..அப்போது அந்த நிழல் பாம்புத் தலையுடன் கச்சிதமாகப் பொருந்தி அந்த பாம்பு உடல் பெற்று உயிர் பெற்று விட்டது போலத் தோன்றுமாம்...அதாவது பாம்பு சொர்க்கத்தில் இருந்து கீழே இறங்கி வந்து 'அறுவடை' நேரம் வந்து விட்டது என்று கூறுகிறதாம்.... இந்த நிழலில் ஏழு முக்கோணங்களும் ஒரு பாம்பும் இருப்பதால் இது ஏழு சக்கரங்கள் வழியே எழும் குண்டலினியையும் குறிக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள் (பார்க்க படம், இந்த சூரியத் திருப்ப நாளின் போது பிரமிடைப் பார்ப்பது ஒரு புண்ணியச் செயல் என்பதால் அந்த நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது...)



இந்த ஒரு அபாரமான கட்டிடக் கலை மற்றும் வானியல் திறமை மாயன் மக்களை ஒரு பேரறிவு வாய்ந்த சமூகமாக அடையாளம் காட்டுகிறது...தொலைநோக்கி, இயந்திரங்கள் எல்லாம் இல்லாத காலத்தில் எப்படி இவ்வளவு சரியாக பூமியின் ஓட்டத்தைக் கணித்து அதை தங்கள் பிரமிடில் வடிவமைத்தார்கள் என்பது ஆச்சரியம்... மேலும் மழை நீரை சேமிக்க மாயன் மக்கள் ஓர் அருமையான திட்டத்தை செயல்படுத்தினார்கள்...தங்கள் நகரத்தின் தரையை முழுவதும் ஒருவித limestone பூச்சால் பூசினார்கள்...இந்த பூச்சு மழை நீரை மண்ணுக்குள்ளே செல்லாமல் தடுத்தது..அதோடு நகரத்தின் ஒட்டு மொத்த தளமும் 0 .76 டிகிரிகள் சாய்ந்திருக்கும் படியும் சாய்வின் இறுதியில் ஒரு பெரிய நீர்த்தேக்கம் இருக்கும் படியும் அமைத்தனர்...எனவே மழை நீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் அந்த அணையில் தேங்கியது..











இதனால் தான் மாயன் மக்கள் 2012 டிசம்பரில் உலகம் அழியும் என்று கூறிச் சென்றது உண்மையாகி விடுமோ என்று சிலர் பயப்படுகிறார்கள்


சமுத்ரா

1 comment:

B!Ng0 said...

Quiet informative... Keep writing anna ..