லைட் ரீடிங் -கேள்வி
“Most of the successful people I’ve known are the ones who do more listening than talking.”
― Bernard M. Baruch
― Bernard M. Baruch
இறைவனை எப்படி அடையலாம் என்ற கேள்விக்கு ஏகப்பட்ட பதில்கள் கிடைக்கும்.இப்போது நிறைய ஆன்மீக க்ரூப்புகள் மலிந்து விட்டன. உங்களைப் பிடித்து அப்படியே அமுக்கி உள்ளே போட ரெடியாக இருக்கிறார்கள்.இறைவனை அடைய ஒரு எஸ்.எம்.எஸ். ஐ பத்து பேருக்கு forward செய்தால் போதும் என்ற நிலைக்கு கீழிறங்கி வந்து விட்டார்கள்! அமிர்தமே என்றாலும் வலுக் கட்டாயமாக ஊட்டினால் இனிக்குமா?
நீ
இலவசமாகத் தரும்
சொர்க்கம்
எனக்கு வேண்டாம் என்கிறான் ஒரு கவிஞன் .
BTW ,இந்த 'ஒன்பது வித பக்தி' என்ற கான்செப்ட் என்னைக் கவர்ந்தது.
எல்லாவற்றையும் சொன்னால் ஹரிகதை ஆகி விடும்.( நான் ஓர்
agnostic என்பதால் இந்த கடவுள், பக்தி, மோட்சம், இத்யாதிகளை ஒரு நெருடலுடனேயே எழுதுகிறேன்.)
ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
இறைவனைப் பற்றிக் கேட்பது கூட ஒருவகை பக்தி என்கிறார்கள்.
in fact அதுதான் முதலில் வருகிறது. இப்போது நாம் கேட்கும் (listen ) கலையை மறந்து விட்டோம். வள வளா என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறோம்.அடுத்தவரை listen செய்வது போல் நடிக்கிறோம். அவர் பேசும்போது அடுத்து நாம் என்ன பேசலாம் என்று திட்டம்தான் போட்டுக் கொண்டு இருக்கிறோம். நன்றாகக் கேட்பவரே நன்றாகப் பேச முடியும்; நன்றாகப் படிப்பவரே நன்றாக எழுத முடியும் என்று சொல்வார்கள்.மிகத் தேர்ந்த சங்கீத வித்வான்கள் சொல்லும் சூத்திரம் 'ஒரு பாட்டு பாடனும்னா ஆயிரம் பாட்டு கேட்கணும்'...!
நீ ஒண்ணுமே செய்ய வேண்டாம். முதலில் கேளு என்கிறார்கள். முத்துக் கடலு மூடியா கெடக்கு என்பது போல காது சதா திறந்தே இருக்கிறது. hear ! காதைத் திறந்து வை.. அட, இது என்னமோ நல்லாருக்கே என்று நீ listen செய்தாலும் செய்யலாம் ;நம்மை சுற்றி சதா கேட்டுக் கொண்டிருக்கும் ஒலிகள் unconscious ஆக நம்முள் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அந்தக் காலத்தில் அவளை நல்ல சத்விஷயங்கள், சங்கீதங்கள் கேட்க வைத்தார்கள். இந்தக் காலத்தில் எந்த சேனலைத் திருப்பினாலும் சீரியல்கள் என்ற பெயரில் கீழ்க்கண்ட சுமங்கல ஒலிகள் கேட்கக் கிடைக்கின்றன
அவ குடும்பத்த அடியோட நாசமாக்கிருவேன்
அவனை நடுத்தெருவுல பிச்சை எடுக்க வைக்கலன்னா நான் பிரபா கிடையாது.
கோபி ஒண்ணுமில்லாம மண்ணோடு மண்ணா போயிரனும்
அவ இதை நெனச்சு உருகி உருகி அணு அணுவா சாகணும்
இப்படிப் பட்ட ஒலிகளை கர்பிணிகள் கேட்டால் பிரகலாதனா பிறப்பான்?
பிரகலாதன் கர்ப்பத்தில் இருந்த போது நல்ல விஷயங்களை நாரதர் தினமும் சொல்கிறார்
சர்ப்பத்தில் படுத்தவன் சீர்த்தியை
லீலாவதி
கர்ப்பத்தில் படுத்தவன் காதுகளில்
ஓதியவன் என்று நாரதரை வர்ணிக்கிறார் வாலி.
கற்றிலன் ஆயினும் கேட்க என்கிறார் வள்ளுவர். புத்தகம் படிக்க வேண்டும் என்றால் உனக்கு படிப்பறிவு வேண்டும். அனால் கேட்பதற்கு நீ educated ஆக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.மேலும் படிப்பது நேரம் பிடிக்கும். கேட்பது quick . பரீட்சித்து ஏழு நாளில் இறந்து விடுவான் என்று தெரிந்ததும் அவன் சாமார்த்தியமாக ஸ்ரவண பக்தியைத் தேர்ந்தெடுக்கிறான். கொண்டு வா கீதையை நான் படிக்கிறேன் என்று சொல்லவில்லை. கொண்டு வா தம்பூரா நான் இறைவனைப் பாடுகிறேன் என்று குதிக்கவில்லை . தியானம் செய்கிறேன் என்று பிலிம் காட்டவில்லை . போடு பாயை நான் உட்கார்ந்து கேட்கிறேன் என்கிறான். கேட்பது தான் எளிது. குறைந்த நேரத்தில் நிறையக் கேட்கலாம். எல்லாம் சரி..நாம் கேட்பதற்கு யாராவது ஒருவர் சொல்ல வேண்டுமே என்கிறீர்களா? அதுவும் சரி.
நீங்கள் கேட்கத் தயார் என்றால் சொல்பவர் கிடைத்து விடுவார். ஏனெனில் இப்போது கேட்பவர்கள்தான் குறைவு:) நீங்கள் கேட்கத் தயார் என்றால் ஒட்டு மொத்த பிரபஞ்சமே உங்களுக்கு பாடம் நடத்தும்.
ஜென் குரு ஒருவரை உங்கள் குருமார்கள் யார் யார் என்று கேட்டதற்கு அவர்
நாய் ,காகம்,மாடு இவர்கள் என்கிறார்.
நாய் தான் படுத்திருந்த இடத்தை திரும்பிப் பார்க்காமல் எழுந்து போகிறது. பற்றற்ற தன்மையை அதனிடம் கற்றேன்
காகம் பகிர்ந்து கொள்ளாமல் தனக்கென சேர்த்து வைப்பதில்லை. பகிர்தலை அதனிடம் கற்றேன்
மாடு தான் தின்றதை மீண்டும் அசை போடுகிறது. என்னை நானே மீண்டும் திரும்பிப் பார்த்து மேம்படுத்துவதை அதனிடம் கற்றேன்.
என்கிறார்.
நல்ல சீடனுக்கு சிலை கூட ஆசானாகிறது.
கண்களை நேர்க்கோட்டில் வைத்த இயற்கை காதுகளை பக்கவாட்டில் வைத்துள்ளது. 360 டிகிரியில் எல்லாப் பக்கங்களில் இருந்தும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
~சமுத்ரா
5 comments:
//நன்றாகக் கேட்பவரே நன்றாகப் பேச முடியும்; நன்றாகப் படிப்பவரே நன்றாக எழுத முடியும் என்று சொல்வார்கள்//
இது என்னவோ உண்மைதான்...
கோபி (!?) - சீரியல் பயங்கரமா பாப்பபீங்க போல...
கலைடாஸ்கோப்: ஒரு பதிவில் பல்வேறுபட்ட விஷயம் இருக்கும்.
லைட் ரீடிங்: ஒரு விசயத்த எடுத்துகிட்டு பல்வேறுபட்ட சிந்தனை.
அட்டகாசம் பண்றீங்க... :)
தொடருங்கள்....
காணும் பொருட்களில் எல்லாம் ஆசான். ரசித்தேன்.
:)
nice
/கண்களை நேர்க்கோட்டில் வைத்த இயற்கை காதுகளை பக்கவாட்டில் வைத்துள்ளது. 360 டிகிரியில் எல்லாப் பக்கங்களில் இருந்தும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
~சமுத்ரா/
nallaayirunthuchu
//அடுத்தவரை listen செய்வது போல் நடிக்கிறோம். அவர் பேசும்போது அடுத்து நாம் என்ன பேசலாம் என்று திட்டம்தான் போட்டுக் கொண்டு இருக்கிறோம்.//
//நீங்கள் கேட்கத் தயார் என்றால் ஒட்டு மொத்த பிரபஞ்சமே உங்களுக்கு பாடம் நடத்தும்.//
//கண்களை நேர்க்கோட்டில் வைத்த இயற்கை காதுகளை பக்கவாட்டில் வைத்துள்ளது. 360 டிகிரியில் எல்லாப் பக்கங்களில் இருந்தும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.//
ஊசி பட்டாசு போல வெடிக்கும் வரிகள்!
Post a Comment