கலைடாஸ்கோப் -108 உங்களை வரவேற்கிறது.
போன கலைடாஸ்கோப்பில் பாதத்தைப் பற்றிப் பேசினோம். இன்று தலை!
"A good head and a good heart are always a formidable combination"
சிவாவின் 112 தியானப் பயிற்சிகள் பற்றி ஓஷோ விரிவாகப் பேசி இருக்கிறார். அதில் ஒரு தியானத்தை இப்போது பார்ப்போம்.
"உங்களைத் தலையற்றவராக உருவகித்துக் கொள்ளுங்கள்"
இந்த தியானம் மிகவும் உபயோகமானதாகும். ஏனென்றால் நாம் எப்போதும் நம் மையம் நம் தலையிலேயே இருப்பதாக (தவறாக) நினைத்துக் கொண்டிருக்கிறோம். மூளைக்கு மிக அதிக முக்கியத்துவம் தந்து விடுகிறோம். இந்த உணர்ச்சி நம்மை மேலும் மேலும் இறுக்கமானவர்களாகவும் பதட்டப்படுபவர்களாகவும் வைத்திருக்கிறது. ஒரு மாறுதலுக்காக சில நாட்கள் உங்கள் தலை மறைந்து போய் விட்டதாகவும் உங்கள் மையம் இதயத்துக்கு இறங்கி வந்து விட்டதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் பார்ப்பவை, கேட்பவை, நினைப்பவை இவையெல்லாம் இதயத்தில் இருந்தே செய்வதாக உருவகியுங்கள்.
இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினை தலையில் இருந்து இதயத்துக்கு வர முடியாதது தான்.24 x 7 நாம் தலையிலேயே வாழ்கிறோம். ஒரு வக்கீல் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பின்னும் வக்கீலாகவே இருக்கிறார். ஒரு ஆசிரியர் வீட்டுக்கு வந்த பின்னும் ஆசிரியராகவே இருக்கிறார். ஒரு மேனேஜர் ஆபீசில் இருந்து வீடு திரும்பினாலும் கூட மேனேஜராகவே வலம் வருகிறார். இதயத்துக்கு இறங்கி வர முடிவதில்லை. ஈகோ வை, இமேஜை விட்டுக் கொடுக்க முடிவதில்லை. ஹை கோர்ட் நீதிபதி, ஒரு ஜெனரல் மேனேஜர், வீட்டில் குழந்தைகளுடன் உப்பு மூட்டை விளையாடுவதா??? வெங்காயம் நறுக்குவதா? கடைக்கு சென்று கால் கிலோ உளுந்தம் பருப்பு வாங்குவதா?????
தலை இல்லாதவராக நம்மை உருவகித்துக் கொள்வதால் இந்த அடையாளம் அழிந்து விடுகிறது. தலை இல்லாவிட்டால் இஞ்சினியர் என்ன, டாக்டர் என்ன, கவிஞர் என்ன, எல்லா அடையாளங்களும் அறுந்து விடுகின்றன. இதயம் மையமாகி விடும் போது மட்டுமே உண்மையான அன்பு மலர்கிறது. ஏனென்றால் மூளையால் அன்பு செலுத்த முடியாது. மூளையால் ஒருவரை கவனித்துக் கொள்ள (care ) முடியமே தவிர அன்புக்கு இதயம் மட்டுமே மையமாக உள்ளது. நீங்கள் வீட்டுக்கு வந்த பின்னும் கூட டாக்டராகவோ, விஞ்ஞானிவாகவோ இருந்தால் உங்களால் அன்பு செலுத்த முடியாது.. இதயம் மையமாகி விடும் போது மட்டுமே இது சாத்தியமாகிறது. மேலும் எல்லையிலாத அமைதி உங்களுக்குள் நிறைகிறது.
ஓஷோ மேலும் சொல்கிறார்: தியானத்தில் மேலும் ஆழ்ந்து செல்லும் போது இதயம் கூட உங்கள் உண்மையான மையம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.அறிவு (intellect ) , உணர்வுகள் (emotions ) இவை இரண்டையும் கடந்த ஒரு மையம் உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். தொப்புளுக்கு அருகே அது இருக்கிறது. இந்த மையத்தின் மீது தான் ஜப்பானில் தியானம் செய்கிறார்கள். இதயத்தின் மீது தியானம் செய்வது சிறந்தது என்றாலும் சில சமயம் அது உங்களை உணர்சிகளில் இருந்து மீள இயலாமல் செய்து விட வாய்ப்புள்ளது.
சரி.,,,,,, change topic ..
இப்போது சாப்பிடுவதைப் பற்றி ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
பொதுவாக நாம் சாப்பிடுவதை மிக வன்முறையுடன் செய்கிறோம். விலங்கின் உள்ளுணர்வு இன்னும் நமக்குள் இருக்கிறது. மிருகங்கள் எந்த ஆயுதங்களையும் உபயோகப்படுத்துவதில்லை.அவை தம் பற்களையும் நகங்களையும் பயன்படுத்தியே இரையைக் கொன்று தின்கின்றன. அதே போல நாம் உணவு உண்பதை ஒரு கொலை போலவே செய்கிறோம். அது சைவ உணவாகவே இருந்த போதிலும். மிருகங்கள் உணவை அவசர அவசரமாக உண்கின்றன. எதிரிகளிடம் இருந்து, போட்டி விலங்குகளிடம் இருந்து ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தில். மனிதனும் காடுகளில் வாழ்ந்த போது இந்த அவசரத்துடனேயே சாப்பிட்டான்.அந்தப் பழக்கம் இன்னும் நமக்குள் unconscious ஆகத் தொடர்கிறது. இன்று நமக்கு எந்தத் தலை போகிற அவசரமும் இல்லை.ஆற அமரச் சாப்பிடுவதற்குள் எவனாவது வந்து மனைவியையோ மகளையோ கடத்திக் கொண்டு போய் விடுவான் என்ற பயமும் இல்லை. உணவை அனுபவித்து உண்பது எப்படி என்று நமக்குத் தெரிவதில்லை.இது நமக்குள் சென்று ரத்தமாகி, சதையாகி நம்மை வாழ வைக்கிறது என்ற உணர்வுடன், மதித்து நாம் உண்பதில்லை.ஏதோ குப்பைத் தொட்டியில் குப்பையை வீசுவது போல உள்ளே தள்ளுகிறோம்.
ஆற அமர, பந்தியில் அமர்ந்து எல்லாருடனும் சேர்ந்து சாப்பிடுவதை நாம் தாழ்வாக நினைக்கிறோம். நின்று கொண்டு ஸ்டைலாக இரண்டு நிமிடங்களில் சாப்பிட்டு விட்டு டிஸ்யூ பேப்பரில் கை துடைத்துக் கொள்கிறோம். பந்தியில் அமர்ந்ததும் சாதம் வரை எல்லா அயிட்டங்களும் பரிமாறி முடிக்கும் வரை இலையில் கை வைக்கக் கூடாது என்பது புராதனமான பண்பாடு. சபை நாகரிகமும் கூட. மிருகங்கள் மட்டுமே போடப் போட அவசரத்துடன் பிடுங்கி சாப்பிடும்.
சத்குரு :
உங்கள் உடலை கவனித்தால் 40 லிருந்து 48 நாட்களுக்குள் ஒரு சுழற்சிக்கு உள்ளாவதை உங்களால் உணர முடியும். இந்த காலத்தை ஒரு 'மண்டலம்' என்கிறோம்.ஒவ்வொரு மண்டலத்திற்கும் உடலுக்கு 3 நாட்களுக்கு உணவு தேவைப்படுவதில்லை. சிரமமில்லாமல் அந்த நாட்களில் நீங்கள் உணவைத் தவிர்க்க முடியும்.வளர்ப்புப் பிராணிகள் கூட சில நாட்களில் உணவைத் தவிர்ப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். குழந்தைகளும் இதை செய்யும். ஆனால் இன்றோ பெற்றோர் தங்கள் குழந்தைகளை உணவு உண்ணச் சொல்லி திணிக்கின்றனர்.
விரதம் என்பது உங்கள் உடல் உங்களிடம் கேட்கும் இடைவேளை. இதனைப் புரிந்து கொள்ளும் சூட்சுமம் பலருக்கும் இல்லாததால் இந்தியாவில் ஏகாதசி என்னும் ஒரு நாளைக் குறிப்பிட்டு வைத்தனர். இப்படிக் குறிப்பிட்டாலாவது மக்கள் இதைத் தவறாமல் கடைபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதைச் செய்தனர். ஆனால் உடலை வருத்தி, கட்டாயப்படுத்தி உணவில்லாமல் செய்வது சரியல்ல.
சரி. தியானம், யோகம் என்று போர் அடிக்க விரும்பவில்லை.
"மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா"
“What hath night to do with sleep?”
― John Milton, Paradise Lost
“Whoever thinks of going to bed before twelve o'clock is a scoundrel.”
― Samuel Johnson
உங்களுக்கு பகல் பிடிக்குமா? இரவா? எனக்கு இரவு தான் பிடிக்கும்.
இரவு பயம் தருவதாக, துன்பம் தருவதாக எப்போது இருக்கும்?
1. தீராத நோய் இரவில் அதிகமாகும் போது
2. காதலன்/ காதலியின் பிரிவுத் துயர் இரவில் அதிகமாமும் போது
(காதலும் நோய் தான் என்றால் பாயிண்ட் (2) அனாவசியம்!)
மற்றபடி இரவு ஒரு gift !
இரவு வருகிறதே, காதலன் அருகில் இல்லையே என்று ஏங்கும் டைப்பில் பாடல்கள் அக இலக்கியத்தில் ஏராளம். குறுந்தொகையை எடுத்துக் கொள்வோம். ஒன்றிரண்டு பாடல்கள்:
குறிஞ்சி
வரவேண்டிய நேரத்தில் வராமல் அதென்ன பொருள் சேர்க்கப் போவது? மார்கழி வாடை வீசுகிறது! மாலை வருகிறது. இப்போது அவர் கூட இல்லை.இளைமையும் தனிமையும் இருக்கும் போது அனுபவிக்காமல் எப்போது அனுபவிப்பது??
பெருந் தண் வாடையும் வாரார்;
இஃதோ தோழி நம் காதலர் வரவே?
* புதுப்புது விளையாட்டுகளை யோசித்து குழந்தைகளுடன் விளையாடுங்கள்.
சில creative விளம்பரங்கள் :-
ஓஷோ ஜோக்.
ஹென்றி தன் நண்பனுடன் சலிப்பாக சொல்லிக் கொண்டிருந்தான்.
"ஹ்ம்ம்..எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. கல்யாணம் ஆன புதிதில் என் மனைவி வாசலில் இருந்து நியூஸ் பேப்பர் கொண்டு வருவாள். என் நாய் இடைவிடாமல் குறைக்கும். இப்போது என் நாய் பேப்பர் கொண்டு வருகிறது, மனைவி குரைக்கிறாள் " ,,
நண்பன், " இதில் கவலைப்பட என்ன இருக்கிறது? எப்படி இருந்தாலும் இன்றும் உனக்கு அதே சேவைகள் கிடைக்கின்றனவே " என்றான்.
Wish you a happy new year!!!
சமுத்ரா

-Nelson Mandela

முல்லை
இரவு தூக்கம் வரவில்லை. என்னடி செய்வேன்? எருமை தன் கொம்பை அசைக்கும் போதெல்லாம் அதன் கழுத்து மணியோசை அவர் வரும் தேர் மணியோசை போலக் கேட்கிறதே!
திரிமருப்பு எருமை நிற மை ஆன்
வருமிடத்து யாத்த பகுவாய்த் தெண் மணி
நெய்தல்
நான் தான் இரவு தூங்காமல் புலம்புகின்றேன். நீயும் இரவு முழுவதும் ஒலிக்கிறாயே ! கடலே! யாரால் நீ துன்பமுற்றாய்?
யார் அணங்குற்றனை - கடலே ! பூழியர்
..
வெள் வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலம் கேட்கும், நின் குரலே?
இன்னொரு பாடல்
எல்லை கழிய முல்லை மலர
கதிர் சினம் கழிந்த கையறு மாலை
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்
எவன்கொல் வாழி ?-தோழி!
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே
இரவு வருகிறதே என்று அஞ்சும் தலைவியின் பாடல் . அகராதி இல்லாமலேயே எளிதாகப் புரியும் ...
வார்த்தைப் பிரயோகங்களைக் கவனிக்கவும்.
"கதிர் சினம் தணிந்த கையறு மாலை"!!
இரவு, வெள்ளம் போல நான்கு பக்கங்களில் இருந்தும் என்னை மெல்ல மெல்லச் சூழ்கிறது என்கிறாள்.'கங்குல் வெள்ளம்'; இந்தத் தொடராலேயே இந்தப் பாடலை எழுதியவருக்கு கங்குல் வெள்ளத்தார் என்று பெயர் ஏற்பட்டு விட்டது! இரவை கொஞ்சம் unusual ஆக வெள்ளத்துடன் ஒப்பிட்டதால்!
கவிதை என்றால் சும்மா, மானே தேனே கண்ணே மணியே நீயில்லாமல் நானில்லை காபியில் சக்கரை இல்லை என்றெல்லாம் எழுதாமல் இப்படிப்பட்ட catching lines ஒன்றிரண்டு இருக்க வேண்டும். படிப்பவர்கள் 'அட' என்று வியக்கும் படி!
சங்க இலக்கியங்களில் புலவர்கள் சிலர் அவர்கள் பாடிய catching lines மூலம் அறியப்படுகிறார்கள்.
*அணிலாடு முன்றிலார்
*கல்பொரு சிறு நுரையார்
*குப்பைக் கோழியார்
*மீன் ஏறி தூண்டிலார்
அணில் கொஞ்சம் பயந்த சுவாபம் கொண்ட பிராணி. கொஞ்சம் தனித்தே இருக்கும். அந்த அணில் சும்மா இறங்கி வந்து முற்றத்தில் ஜோராக பயமின்றி விளையாடுகிறது என்றால் அங்கே பொதுவாக மனித நடமாட்டம் இல்லாத தனிமை நிலவுகிறது என்று நினைக்கத் தோன்றும். காதலனைப் பிரிந்து அப்படிப்பட்ட அமானுஷ்யத் தனிமையில் தவிக்கிறேன் என்கிறாள் தலைவி. மேலோட்டமாகப் பார்த்தால் அணிலாடு முன்றில் என்றால் ஏதோ சந்தோஷமாக அணில்கள் விளையாடும் முன்றில் கொண்ட மகிழ்ச்சியான வீடு என்று தலைவி பாடுகிறாள் என்று நினைக்கத் தோன்றும். அப்படி இல்லை!
கல்பொரு சிறு நுரை என்றால் என்ன உவமை என்று குறுந்தொகையில் தேடிக் கொள்க!
அந்தக் காலத்தில் குறிஞ்சி, முல்லை போன்ற நிலங்களில் இயற்கை வளம் செறிந்திருந்தது . புலவர்கள் சுற்றுப் புறங்களில் தாங்கள் பார்த்த மான், மயில், குரங்கு, புன்னை மரம் இவற்றை தங்கள் பாடல்களில் பாடினார்கள். மானுண்டு எஞ்சிய நீர், குரங்கு உருட்டும் மயில் முட்டை என்றெல்லாம். இப்போதெல்லாம் முதலில் யாரும் காதல் கடிதம் எழுதுவதில்லை. எழுதினாலும் எதைக் குறிப்பிடுவது? எங்கே பார்த்தாலும் பிளாட்டுகள் , அபார்ட்மெண்ட் கள் , கார்கள், சூப்பர் மார்க்கெட்டுகள்..!! இதை வைத்து என்ன catching lines எழுத முடியும். உங்களுக்கு எழுத முடிந்தால் சொல்லுங்கள்.
சரி.
"இரவில்" ஏதோ ஒரு வசீகரம் இருப்பதாகத் தோன்றுகிறது. இரவு பற்றி ஒரு கவிதை
சூரியக் காதலன்
போனதும்
பூமிப் பெண் நாணம் கொண்டு
போர்த்தும்
கறுப்பு மேலாடை! ஹி ஹி நான் எழுதியது!
முன்பு சொன்ன அந்த catching lines மூலம் இரவு பற்றி ஒரு கவிதை எழுத முயற்சி செய்யுங்கள். catching lines என்பது எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.
சரி. கவிதை போதும்.
பூமியின் அதிசயங்களில் ஒன்று அதன் பகல் பொழுதும் இரவும் கிட்டத்தட்ட 12 மணி நேரமாக இருப்பது. மிகக் குறைவான பகல் பொழுது தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான ஒளியைத் தராமல் போகலாம். அதே சமயம் மிக அதிகமான பகல் அவைகளை கருகச் செய்து விடலாம்.
இருள் தான் பிரபஞ்சத்தின் இயற்கை என்பதை கவனித்திருக்கிறீர்களா? ஒளி செயற்கை! சராசரியாக பூமியில் இரவுப் பொழுதை ஒப்பிடும் போது பகல் சற்றே அதிகம் என்கிறார்கள்.Equinox எனப்படும் பகலும் இரவும் சமமாக இருக்கும் நாட்களிலும் கூட பகல் ஒருசில நிமிடங்கள் அதிகமாகவே உணரப்படுகிறது. இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் ஒளிவிலகல் காரணமாக சூரியன் தொடு வானத்தில் உதிக்கத் தொடங்கும் முன்னரேயே அதன் ஒளி நம்மை வந்தடைந்து விடுகிறது!
டெக்னிகலாக இரவு என்பது பூமியின் own நிழல் தான். பூமி சுழல்வதால் ஏற்படும் தற்காலிக ஒளி மறைப்பு! பிரபஞ்சத்தில் தன் அச்சை மையமாகக் கொண்டு சுழலாத (rotation ) கிரகங்கள் இருப்பது மிக மிக அரிது என்கிறார்கள். தூக்கி எறியப்படும் எந்த ஒரு பொருளும் சிறிது சுழலவே செய்கிறது. அது கோள (spherical) வடிவில் இருந்தால் சுழலும் சாத்தியக்கூறு இன்னும் அதிகரிக்கிறது. சூரியனிடம் இருந்து தூக்கி வீசப்பட்ட நெருப்புக் கோளமானது தன் முதல் angular momentum (சுழற்சி)ஐ இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. நாம் ஒரு பந்தை தரையில் சுழல வைத்தால் அது இரண்டு காரணங்களுக்காக நின்று விடுகிறது. ஒன்று காற்றின் தடை இன்னொன்று தரையுடன் உராய்வு. இந்த இரண்டும் இல்லாததால் பூமி தன் சுழற்சியை இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. (பூமியின் காற்று மண்டலம் அதனுடன் சேர்ந்தே சுழல்கிறது!)
நம் காலின் கீழே பூமி சுழல்வதால் நாம் குதிக்கும் போது வேறு ஒரு இடத்தில் ஏன் land ஆவதில்லை என்பதையும் இதுவே விளக்குகிறது. நாம் அனைவரும் பூமியுடன் சேர்ந்து ஒரே சுழற்சி வேகத்தில் இருக்கிறோம்.!!
பூமி சுழல்வதாலேயே இரவு வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
இரண்டு சாத்தியங்கள் பூமி சுழன்றாலும் இரவு ஏற்படாமல் வைக்க முடியும்.
ஒரு கிரகம் அதன் தாய் நட்சத்திரத்துடன் phase lock எனப்படும் நிலையில் இருந்தால். அதாவது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் (rotation ) காலமும் நட்சத்திரத்தை சுற்றும் காலமும் (revolution )ஒன்றாக அமைந்தால். (நம் நிலா போல!) இப்படி phase lock இல் இருந்தால் கிரகத்தின் ஒரு பகுதி எப்போதும் சூரியனை நோக்கிக் கொண்டிருக்க மற்ற பகுதி நிரந்தர இருளில் இருக்கும். ஒரு பேச்சுக்கு நாம் சூரியனுடன் லாக்கில் இருந்தால் (பூமி சூரியனை ஒரு நாளில் சுற்றினால் அல்லது தன்னை 365 நாட்களில் சுற்றினால்) சூரியனை நோக்கிக் கொண்டிருக்கும் சூடான பகுதியில் கடல்கள் எப்போதோ ஆவியாகி இருக்கும். சூரிய வெளிச்சம் தீண்டாத பகுதியில் -70 டிகிரி வெப்பம் நிலவலாம். அது நீரையும் ஏன், காற்றைக் கூட உறைய வைத்து விடும். பூமி கிட்டத்தட்ட வெள்ளியைப் போல ஆள் இல்லாமல் மின்னிக் கொண்டிருக்கும்!
இன்னொன்று Olber's paradox என்னும் ஒரு concept .
நாமாக இருந்தால் சனிக்கிழமை இரவு எந்த பார்ட்டிக்குப் போவது என்று யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் ஆல்பெர்ஸ் இரவு ஏன் இத்தனை இருட்டாக இருக்கிறது என்று யோசித்தார். காலம் காலமாக பிரபஞ்சம் என்பது என்றுமே மாறாத , முடிவில்லாத(infinite ) ஒன்று என்று நம்பப்பட்டு வந்தது. (Static universe ). பிரபஞ்சம் அப்படி இருந்தால் காலம் காலமாக எரியும் நட்சத்திரங்களால் இரவு வானம் (வெளி) எப்போதோ ஒளியூட்டப்பட்டிருக்கும். இந்த ஒளியை இடையில் உள்ள ஹைட்ரஜன் வாயுத்திரள்கள் தடுக்கும் என்றாலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஆற்றலின் காரணமாக அவையும் கடைசியில் எரியத் தொடங்கி பிரபஞ்சத்தில் ஒளியை இன்னும் அதிகரிக்கும். ஆனால் பிரபஞ்சத்தில் பெரும்பாலும் குளிராகவும் கும்மிருட்டாகவும் இருக்கிறது.
பிரபஞ்சத்தின் இரண்டு பண்புகள் இந்தப் புதிருக்கு விடையளிக்கின்றன.
ஒன்று ஒளியின் வேகம். ஒளி முடிவில்லாத வேகத்துடன் உடனே பரவுவதில்லை. எனவே சில நட்சத்திரங்களின் ஒளி இன்னும் நம்மை வந்தடையவில்லை. இன்னொன்று பிரபஞ்சம் விரிவது. பிரபஞ்சம் விரிய விரிய அது அதிக ஆற்றல் கொண்ட ஒளியை நீட்டித்து குறைந்த ஆற்றல் கொண்ட, கண்களுக்குப் புலனாகாத மைக்ரோ அலைகளாக மாற்றி விடுகிறது.
மேலும் எந்த ஒரு விண்மீனும் முடிவில்லாமல் எரிவதில்லை. குறிப்பிட்ட காலம் எரிந்து முடித்து ஓய்வெடுத்துக் கொள்கிறது!
எனவே இரவு நமக்கு எதுவும் நிரந்தரமல்ல, சாசுவதம் அல்ல, பிரபஞ்சம் உட்பட என்று நினைவுபடுத்துகிறது!!
உலகில் நீண்ட தூரப் பயணங்கள் பெரும்பாலும் இரவில்தான் நடக்கின்றன.
நாம் தினமும் வெளியில் இடைவிடாமல் பயணித்துக் கொண்டிருக்கிறோம். சூரியனை சுற்றிய பயணம். இந்தப் பயணத்தில் நாம் பகலில் அதிக தூரம் செல்கிறோமா இரவிலா என்று யோசித்துப் பார்த்தால், இயற்பியல் இரவில் என்று பதில் தருகிறது. இரவில் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் தூரமும் சூரியனை சுற்றும் தூரமும் கூடுகின்றன. பகலில் பூமி தன்னைத் தானே சுற்றும் தூரம் சூரியனை சுற்றும் தூரத்தில் இருந்து கழிக்கப்படுகிறது.
சுழலும் சக்கரம் ஒன்றின் மேற்பரப்பில் பொருத்தப்பட்ட காகிதத்தை கவனியுங்கள். காகிதம் சக்கரத்தின் முன் பக்கத்தில் இருக்கும் போது அது மிக விரைவாக கண்களில் இருந்து மறைந்து கீழே வந்து விடுகிறது. பின் பக்கம் கொஞ்சம் மெதுவாக மேலே ஏறுவது போலத் தோன்றுகிறது. இதே விளைவு தான் பூமிக்கும்!
இரவைப் பற்றிய ஒரு கவிதை.....மொழிபெயர்ப்புடன்!
Hymn to the night- Henry Wadsworth Longfellow
இரவுக்கு ஒரு பாடல்
I heard the trailing garments of the Night
Sweep through her marble halls!
I saw her sable skirts all fringed with light
From the celestial walls!
இரவுப் பெண்ணின் சரியும் ஆடை
இசைக்கும் ஒலியைக் கேட்டேன்
கறுத்த உடைகள் ககன ஒளியால்
கதிரென மின்னுதல் கண்டேன்!
I felt her presence, by its spell of might,
Stoop o'er me from above;
The calm, majestic presence of the Night,
As of the one I love.
நான் இரவினை உணர்ந்தேன்
என்னை சுற்றிச் சூழ்ந்ததவள் கறுப்பு
என் அன்பின் காதலி போல
எத்தனை இதம் அவள் இருப்பு!
I heard the sounds of sorrow and delight,
The manifold, soft chimes,
That fill the haunted chambers of the Night,
Like some old poet's rhymes.
சோகமும் சுகமும் கலந்து
எத்தனை விதம் அவள் சத்தம் -அது
தனித்த இடங்களை இனித்து நிறைக்கும்
மூத்த கவிஞனின் சந்தம்!
O holy Night! from thee I learn to bear
What man has borne before!
Thou layest thy finger on the lips of Care
And they complain no more.
புனித இரவே உன்னால் நான்
பொறுமையின் இலக்கணம் அறிந்தேன்
உதட்டின் மீது விரலை வைத்து -நீ
உலகை அடக்குதல் வியந்தேன்!
Peace! Peace! Orestes-like I breathe this prayer!
Descend with broad-winged flight,
The welcome, the thrice-prayed for, the most fair,
The best-beloved Night!
விரிந்த சிறகுகள் கொண்டேன்மீது
இறங்கு இரவே இறங்கு
உன்னையே நான் ஆராதிப்பேன் -நீயே
உயிர்மை தந்த இரவு!
**************
Creativity என்பதைப் பற்றிப் பேசி விட்டு முடித்துக் கொள்வோம்.

நம் எல்லோருக்குள்ளும் படைப்புத் திறன் இருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் நாம் அதை வெளிப்படுத்துவதில்லை. ஒவ்வொரு குழந்தையும் அதீதமான படைப்புத் திறனுடனேயே பிறக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்த நாம் வாய்ப்புகளை உருவாக்கித் தருவதில்லை. எனவேதான் அது சாமான்களைப் போட்டு உடைக்கிறது. destructive ஆக மாறுகிறது.
creativity என்பது மாஸ்லோவின் தேவைகளின் படிநிலைகளில் (hierarchy of needs ) மேலே உச்சியில் இருக்கிறது. அதாவது மற்ற கீழ்நிலைத் தேவைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்ட பின் , ஒரு relaxed மன நிலையில் நம் படைப்புத் திறன் வெளிவருகிறது. ஆதிமனிதன் உணவுக்கும் இருப்பிடத்துக்கும் அலைந்து கொண்டு இருந்த போது கவிதை எழுதி இருப்பான் என்று எதிர்பார்க்க முடியாது. creativity , மனிதனின் எல்லாத் தேவைகளும் நிறைவேற்றப்பட்ட பின் மேலும் மேலும் refinement ஐ விரும்புகிறான் என்று காட்டுகிறது. விலங்குகள் creative ஆக இல்லை. படைப்புத்திறன் மனிதனுக்கே உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று என்று தோன்றுகிறது. ஒரு விதத்தில் இந்த creativity மனிதனைக் கடவுளுக்கு அருகில் கொண்டு வருகிறது என்று கூட சொல்லலாம்.
நம் வேலை creative ஆக இல்லையே , செய்ததையே செய்கிறோமே , ஒரே script ஐயே எழுதுகிறோமே வாழ்க்கை ரோபோட்டிக் ஆக இருக்கிறதே என்ற ஆதங்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. வேலையில் தான் நம் படைப்புத் திறனைக் காட்டவேண்டும் என்பது இல்லை. சின்னச் சின்ன விஷயங்களில் கூட காட்டலாம்.
இன்று டெக்னாலஜியின் வளர்ச்சியால் நாம் creative ஆக இருப்பதன் வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. அதாவது ஏதோ ஒருவரின் அதீத creativity மற்ற பல பேர்களின் படைப்புத் திறனைக் குறைத்து விடுகிறது.
அந்தக் காலத்தில் பெண்கள் creative ஆக இருக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன. இப்போது எல்லாமே ரெடிமேட் ஆகி விட்டது. வீட்டில் தோட்டம் போட்டு காய்கறிகள் விளைவித்தார்கள். அதை வைத்து முற்றிலும் கையாலேயே சமையல் செய்தார்கள். மத்தியான வேளைகளில் பூ கட்டினார்கள். கோலம் போட்டார்கள். பாட்டு பாடினார்கள். ஏன் , காப்பிப்பொடி கூட வீட்டிலேயே செய்தார்கள்.இப்போது காய்கறிகள் கட் செய்யப்பட்டு பேக்கட்டுகளில் வந்து விட்டன. சாதம் மட்டும் செய்து வைத்தால் போதும் . லெமன் ரைஸ், வாங்கி பாத் என்று எல்லாப் பொடிகளும் கடைகளில் கிடைத்து விடுகிறது. கோலம் போட்ட டைல்ஸ்கள் வந்து விட்டன. யாருக்கோ கட்டிய வீட்டில் குடியேருகிறோம் . யாருக்கோ தைத்த துணிகளை அணிந்து கொள்கிறோம். யாருக்கோ சமைத்த உணவை உண்ணுகிறோம். யாருக்கோ விளைவித்த காய்கறிகளை பழங்களை சாப்பிடுகிறோம்!
ஆனாலும், நாம் நம் creativity யை அவ்வப்போது வெளிப்படுத்தலாம்.
* மாதம் ஒருநாள் முற்றிலும் கையாலேயே சமையுங்கள். மிக்ஸி , கேஸ் இப்படி எதுவும் இல்லாமல். மசாலா வகையறாக்களை நீங்களே அரையுங்கள் ! இப்போது மால்களில் மினி சைஸ் அம்மிகள் கூடக் கிடைக்கின்றன. எப்போதும் இட்லி, உப்புமா, நூடுல்ஸ் என்று செய்யாமல் புதுப்புது அயிட்டங்களை முயற்சி செய்யுங்கள்.
* நேரம் கிடைக்கும் போது ஏதேனும் புதிதாகக் கற்றுக் கொள்ளுங்கள். புதிய பாஷை , ஸ்விம்மிங் , கேட்டரிங் , டைலரிங், சங்கீதம், நடனம் இப்படி
* கவிதை எழுத முயற்சி செய்யுங்கள். ஏதேனும் ஓவியம் வரையுங்கள். தனியாக இருக்கும் போது பாடுங்கள்....(ஒரு safety க்கு தனியாக இருக்கும் போது என்று சொன்னேன்!) சேக்ஸ்பியர் தான் கவிதை எழுத வேண்டும் பிக்காஸோ தான் ஓவியம் வரைய வேண்டும், பிதோவான் தான் சிம்பனி செய்ய வேண்டும் என்றில்லை. சுருக்கமாக, ஏதேனும் ஒன்றை படைக்க முயற்சி செய்யுங்கள்.
* குழந்தைகளுக்கு ரெடிமேட் பொம்மைகள் வாங்கித் தராமல் நீங்களே ஏதேனும் செய்து தர முடியுமா என்று யோசியுங்கள்.பேப்பரில் கூட எத்தனயோ art செய்யலாம். கரண்ட் போனால் உடனே யு.பி.எஸ். ஸுக்கு ஓடாமல் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து குழந்தைகளுடன் நிழல் உருவங்கள் உருவாக்கி விளையாடுங்கள்.பார்க்க
https://www.youtube.com/user/arvindguptatoys

பெர்மனெண்ட் மார்க்கர்! |
3D TV |
ஆப்ரிக்கன் சபாரி |
Electro recycling robot |
ஓஷோ ஜோக்.
ஹென்றி தன் நண்பனுடன் சலிப்பாக சொல்லிக் கொண்டிருந்தான்.
"ஹ்ம்ம்..எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. கல்யாணம் ஆன புதிதில் என் மனைவி வாசலில் இருந்து நியூஸ் பேப்பர் கொண்டு வருவாள். என் நாய் இடைவிடாமல் குறைக்கும். இப்போது என் நாய் பேப்பர் கொண்டு வருகிறது, மனைவி குரைக்கிறாள் " ,,
நண்பன், " இதில் கவலைப்பட என்ன இருக்கிறது? எப்படி இருந்தாலும் இன்றும் உனக்கு அதே சேவைகள் கிடைக்கின்றனவே " என்றான்.
Wish you a happy new year!!!
சமுத்ரா
10 comments:
எதை சொல்வதென்றே தெரியவில்லை... ஒன்றை சொல்ல விரும்புகிறேன்... எனது சில பதிவுகளை நீளமோ நீளம்...
intelect emotions இவை தோன்றும் இடம் மூளை என்று நினைக்கிறேன் ஆனால் எப்படியோ உணர்வுகள் சம்பந்தப் பட்ட விஷயங்களை இதயத்துடன் இணைக்கிறோம் இதையும் மீறி தொப்புள் பிரதேசம் என்பது கேள்விப்படாதது. அது சரி உங்கள் பதிவுக்குப் பின்னூட்டம் எழுத வேண்டுமென்றால் ஒரு பதிவே எழுத வேண்டி இருக்கும் என்ன எழுதினாலும் அந்த பௌதிக விஷயங்கள் இடம் பெறாத உங்கள் பதிவு ஏதேனுமுண்டா. இவ்வளவு நீஈஈண்ட பதிவு எழுதினால் am not able to do justice to that.
Dear Samudra .. Pls make a collection of ur writings (better topic wise) into a PDF or equivalent for us to preserve it offline .. Can u pls do it for us .. Thanks in advance
@ முனுசாமி ..
PDF ஆ இல்ல .. Book ஆவே போடவேண்டியது கலைடாஸ்கோப்.
permanent marker & robotic - புரியலையே .. என்ன சொல்ல வர்றாங்க ..
ஆபிரிக்கன் சவாரி - Awesome ..!
(ஒரு safety க்கு தனியாக இருக்கும் போது என்று சொன்னேன்!)
:)
//அணிலாடு முன்றிலார்//
//அமானுஷ்யத் தனிமையில் தவிக்கிறேன் //
சீரியல் சத்தமில்லா வீடு - :)
அருமை / பகிர்வுக்கு நன்றி
காகிதம் சக்கரத்தின் முன் பக்கத்தில் இருக்கும் போது அது மிக விரைவாக கண்களில் இருந்து மறைந்து கீழே வந்து விடுகிறது. பின் பக்கம் கொஞ்சம் மெதுவாக மேலே ஏறுவது போலத் தோன்றுகிறது. இதே விளைவு தான் பூமிக்கும்!
-இது புரியவில்லை ..
iravum unnai pola
ellathaiyum thanakkul moodi maraithukolkiathu.
nano pakali pola velipathiyapadiye irukkiren.
:)
ellaame nallayiukku
vaazhthukal
super ji
Post a Comment