இந்த வலையில் தேடவும்

Monday, October 24, 2011

கலைடாஸ்கோப்-42

லைடாஸ்கோப்-42 உங்களை வரவேற்கிறது.

ஒன்று
=======

போன வாரம் சன்.டி.வி யில் Bruce Almighty என்ற ஹாலிவுட் படம் போட்டிருந்தார்கள். சாதாரண மனிதன் ஒருவன் , சாதாரண என்றால் மிகச்சாதாரண மனிதன், கண்டக்டர் இரண்டு ரூபாய் பாக்கி தரவில்லையே என்று வருத்தப்படும், மனதுக்குள் ஆயிரம் தடவை மாத பட்ஜெட் போடும், உள்ளே அழுகை வந்தாலும் வெளியே பல்லைக் காட்டி சிரிக்கும், சம்பளமெல்லாம் இ.எம்.ஐ.யில் போவதை பரிதாபமாக வேடிக்கை பார்க்கும் ஒரு சாதாரண மனிதன்! அவன் திடீரென்று கடவுளாக மாறி விட்டால் எப்படி இருக்கும்?

இந்த திடீரென்று கடவுளாக மாறுவது, எங்கிருந்தோ சக்தி பெற்று சூப்பர் மேனாக மாறுவது இவையெல்லாம் சினிமாக்களில்
புதிது அல்ல. பக்த பிரகல்லாதா வில் இருந்து எந்திரன் வரை இதே கான்செப்ட் தான்.இந்த 'வட்டத்துக்குள் வாழும்
வாழ்க்கையில்'
நம் எல்லாருக்கும் கடவுளாக அல்லது சூப்பர் மேனாக மாறும் ஆசை எப்போதாவது மனதில் வந்து போகிறது என்பது உண்மை தான்.நேற்று நம்மை கண்டபடி திட்டிய மேனேஜரை வெறிநாய் துரத்தும்படி செய்ய, நம்மை நீ ஒரு ஆம்பிளையா என்று கேட்டவனை ரத்தவாந்தி எடுக்க வைக்க, நம் நிலத்தை அபகரித்தவனை நம் காலில் விழவைக்க, நம் சகோதரியை அவமானப்படுத்தியவனின் (some text omitted ) இதையெல்லாம் செய்ய நாம் சூப்பர் மேனாக மாறிவிடக் கூடாதா என்று சிலசமயம் தோன்றும்.

ஆனால் கடவுளாக இருப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. கடவுளின் 'Possessing enormous power ' என்ற ஒரு முகத்தை மட்டும்தான்
நாம் பார்க்கிறோம். What about his other faces ?கடவுளுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி மறந்து விடுகிறோம்.It's easy to take authority. It's very difficult to take responsibility என்று சொல்வார்கள் .ஹிரண்யகசிபு தவம் செய்த போது கடவுளின் Authority யை நினைத்துப் பார்த்தானே தவிர அவரின் அவரின் Responsibility யை நினைத்துப் பார்க்கவில்லை.

தன் எதிரியை வெறிநாய் துரத்தும்படி செய்யும் விஷயம் அல்ல கடவுளாக
இருப்பது.'மழை வரவேண்டும்' என்று பிரார்த்திக்கும் விவசாயியையும் 'மழை வரக்கூடாது' என்று பிரார்த்திக்கும் குயவனையும் ஒரே சமயத்தில் Handle செய்யவேண்டி இருக்கிறது கடவுளுக்கு.உடலெல்லாம் துப்பாக்கியாக மாறி எல்லாரையும் சுட்டுத் தள்ளுவது கடவுளின் ஒரு அம்சம் மட்டும்தான்.ஆனால் அவரின் இன்னொரு அம்சம் ஒரு தக்கனூண்டு விந்துத்திரவத்தில் ஒரு பரம்பரைக்கான அத்தனை செய்திகளையும் ப்ரோக்ராம் செய்து வைக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இந்த விஷயம் கடவுளுக்கு மட்டும் அல்ல. உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.'நான் ஊழலை எதிர்த்து ஐந்து வருடம் மௌன விரதம்' என்று நம் பிரதமர் சொல்வதாக இன்றைக்கு மன் மோகன் சிங்கைப் பற்றி ஏராளமான ஜோக்குகள்
நெட்டில் கிடைக்கின்றன.ஆனால் ஜோக் அடிப்பது எளிது. கொஞ்சம் (மட்டமான) கற்பனைத்திறன் இருந்தால் யாரையும் ஜோக் அடிக்கலாம்.ஒருவாரம், இல்லை அர்ஜுன் பாணியில் சொல்வதென்றால், ஒருநாள் பிரதமாராக இருந்து பார்த்தால் தான் நமக்கு அவருடைய பொறுப்புகள், அவருடைய கஷ்டம் எல்லாம் தெரியும்.மேலும்:அக்கரைக்கு மாட்டுக்கு இக்கரை பச்சை.நாம் பிரதமராக ஆசைப் படுகிறோம். பிரதமரோ ஒரு சாதாரண மனிதன் போல ரோட்டோரக் கடையில் நின்று கொண்டு பானிபூரி சாப்பிட ஆசைப்படக்கூடும்.

சைடு பிட்: நேற்றைய G -Force படத்தில் ஒரு எலி சர்வாதிகாரியாக மாறுகிறது.சிரிக்க வேண்டாம். ஒரு நாள் ஆபீஸ் விட்டு வீட்டுக்குப் போகும் போது
மனிதன் மீது பழி தீர்த்துக் கொள்ள தெருநாய்கள் எல்லாம் கையில் ஏ.கே.47 உடன் நின்று கொண்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இரண்டு
=======

' எனக்கு தீபாவளிக்கு ஊருக்குப் போக நார்மல் டிரெய்ன் டிக்கெட் கிடைத்து விட்டது' -நான் அடுத்த வருஷ தீபாவளியை சொன்னேன். இந்த ட்விட் எனக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை.ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கும் அபத்தங்கள் இவை.தீபாவளிக்கு பட்டாசு, ஆடைகள்,பலகாரங்கள் இந்த விளம்பரங்கள் வருகிறதோ இல்லையோ இப்போது தங்கநகை விளம்பரங்கள் அதிகம் வருகின்றன.தீபாவளிக்கு குளிக்க தலைக்கு எண்ணெய் வாங்காவிட்டாலும் அணிந்து கொள்ள நகைகள் வாங்கியே ஆக வேண்டும் என்று சாத்வீகமாய் மிரட்டுகின்றன விளம்பரங்கள். அழகான பெண்களைக் காட்டி 'மனதில் உற்சாகம் பொங்குதே' 'இன்ப அலை வந்து அடிக்குதே' 'குதூகலத்தில் உள்ளம் துள்ளுதே' என்றெல்லாம் பாட்டுப்பாடி ஆசை காட்டுகின்றன. தத்காலில் கொள்ளை விலைக்கு டிக்கெட் புக் செய்து ,ட்ராபிக்-கொடுமையில் நான்கு மணிநேரம் முன்னதாகவே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டு மூச்சு முட்டி,வாடி வதங்கி ஊர் வந்து சேரும் அற்பப் பதர்கள் நமக்கு தான் இந்த உற்சாகம்,இன்பம், குதூகலாம் இவையெல்லாம் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை.

புத்தர் போன்ற ஞானிகள் தவறியும் பேரின்பம் ஆனந்தம் போன்ற வார்த்தைகளை சீடர்களிடம் உபயோகிப்பதில்லை.அதிக பட்சம் 'துன்பம் அற்ற நிலை' என்றுதான் சொல்கிறார்கள்.விளம்பரங்களில் வருவது போல உஷா சன் ப்ளவர் ஆயில் வாங்கியத
ற்கெல்லாம் ஓவராக உற்சாகப்பட்டால் நமக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும்.3 .42 happiness (அதாங்க 24 /7 ) என்பது யாருக்கும் சாத்தியம் இல்லை.எல்லாரும் சிரித்துக் கொண்டே இருப்பது போலவும், ஹீரோவும் ஹீரோயினும் ரொமான்ஸ் செய்து கொண்டு இருப்பது போலவும் திரைப்படங்கள் முடிகின்றன.அதைப் பார்த்து நாம் ஏமாந்து போகக் கூடாது.சுபம் போட்ட பிறகு இருவருக்கும் பசிக்கும். யார் வெங்காயம் நறுக்குவது என்று இரண்டு பேருக்கும் சண்டை வரும்.சிரிப்பவர்கள் வாய்வலித்து சிரிப்பதை நிறுத்திக் கொள்வார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது.

'இன்பம் அனுபவிக்கும் போதே முடிந்து விடுகிறது.துன்பம் அனுபவித்த பின்னும் உணரப்படுகிறது'

மூன்று
======

பழமொழி என்றதும் இந்த 'பழமொழி'களைப் பற்றி நினைக்கத் தோன்றுகிறது.எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சாதாரணமாக சொல்லி விடுகின்றன அவை.உபநிடதங்களும் தத்துவ விசார நிர்ணயங்களும் சொல்லாததை அவை சைக்கிள் கேப்பில் சொல்லி விடுகின்றன.பழமொழிகளை அமைத்தவர்கள் நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்சிகளை வைத்தே அதை அமைத்திருக்கிறார்கள். விலங்குகளை வைத்து எத்தனை பழமொழிகளை சொல்லியிருக்கிறார்கள். ( சிங்கம்
சிங்கிளா தான் வரும் என்பது பழமொழி அல்ல) உதாரணத்துக்கு யானையை எடுத்துக் கொள்வோம்.

*ஆனைக்கும் அடி சறுக்கும் ( எடுக்கும் அடியை கவனமாக எடுத்து வைப்பதில் யானையை யாராலும் மிஞ்ச முடியாது. நீ என்னதான் கில்லாடியாக இருந்தாலும் உனக்கும் ஆப்பு உண்டு)
*ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்
*ஆனைப் பசிக்கு சோளப் பொறி
*அசைந்து தின்கிறது யானை; அசையாமல் தின்கிறது வீடு
*வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல
*ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
*ஆனை படுத்தாலும் ஆள் மட்டம்
*ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.


நம் முன்னோர்கள் விலங்குகளிடமிருந்து கூட பாடம் கற்றுக் கொண்டார்கள்.நாம் கடவுளே வந்தாலும் அவரை போட்டோ எடுக்க கேமரா தான் தேடுவோம். ஒரு ஞானி தனக்கு ஒரு நாய் தான் குரு என்று சொல்வாராம். ஏன் என்று கேட்டால் இப்படி சொல்வாராம்:

*நாய் அடுத்த நாளைக்கான உணவை சேர்த்து வைப்பதில்லை
*நாய் தான் படுத்திருந்த இடத்தை திரும்பிப் பார்ப்பதில்லை
*நாய் தனக்கு உதவியவர்களை மறப்பதில்லை.

சரி நாயை வைத்து அமைந்திருக்கும் பழமொழிகளை சொல்லுங்களேன்.

நான்கு
======

ஐஸ்வர்யாராயை அதிசயம் என்று வர்ணித்து விட்டு நாம் உண்மையான அதிசயங்களை பாதுகாக்கத் தவறி விட்டோம் என்று தோன்றுகிறது. தாஜ்மஹா
ல் மாசுபட்ட காற்று காரணமாக கறுத்துக் கொண்டு வருகிறதாம்.சீனப் பெருஞ்சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விட்டதாம்.நம்மூரில் ரோடு போடுவதற்கு ஜல்லியைக் கொட்டியிருந்தால் அதை இரவோடு இரவாக எடுத்து ஒளித்து வைத்துக் கொள்வோமே அது போல சீனர்கள் பெருஞ்சுவரின் கற்களைக் கடத்திக் கொண்டு போய் விடுகிறார்களாம்.
சுவரின் உள்ளே புதையல் ஒளிந்திருக்கலாம் என்று யாரோ புரளியை வேறு கிளப்பி விட ஆங்காங்கே சுவரில் அகழ்வாராய்ச்சி செய்து சீனப்பெருஞ்சுவர் பார்க்கவே பாவமாக நிற்கிறது.அதிசயங்களை நம்மால் உருவாக்க முடியாவிட்டாலும் இருக்கும் அதிசயங்களையாவது பாதுகாக்கலாமே?மதுரை மீனாட்சி கோயிலுக்குப் போனால் குங்குமத்தை தூண்களில் அப்பாமல் இருக்கலாமே?ஏனென்றால் நாம் அதிசயம் என்று வர்ணித்த ஐஸ்வர்யா ராய்க்கு சீக்கிரம் வயசாகி விடும்.

ஐந்து
=====
சமுத்ரா'ஸ் ட்வீட்ஸ்:

There are 2 approaches to Life: 1. Nothing is so easy as you think 2. Nothing is so difficult as you think .And I want to follow the second!

How are you என்று கேட்பதும் ஒரு சடங்கு ஆகி விட்டது. I'm fine என்று சொல்வதும் ஒரு சடங்கு ஆகி விட்டது.

நல்லவன் ஒருவனுடைய வாழ்க்கை வரலாறு அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை.

சொர்க்கத்தில் இருப்பவரின் பிரச்சனை அது அவருக்கு சொர்க்கம் என்று தெரியாதது.நரகத்தில் இருப்பவரின் பிரச்சனை அது அவருக்கு நரகம் என்று தெரிவது

ஒருத்தன் கிட்ட இருந்து திருடினா அவன் பேரு திருடன். நிறைய பேர் கிட்ட இருந்து திருடினா அவன் பேரு அரசியலவாதி

தீபாவளிக்கு டி.வி யில் படங்கள்: 'வேட்டைக் காரன்' &'சிங்கம்' நாம் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறோம் போலத் தோன்றுகிறது.

பேச்சுலர்களுக்கு வீடு வேண்டுமா? தீபாவளிக்கு முதல்நாள் ஏதாவது வீட்டுக்கு போய் ஓனருக்கு
ஹேப்பி தீபாவளி சொன்னால் போதும்!

ஒரு கருவறைக்குள் தெய்வம் இருந்தால் அது கோவில் ஒரு தெய்வத்துக்குள் கருவறை இருந்தால் அது 'தாய்'

I 'm busy என்று ஒருவர் சொன்னால் இரண்டு காரணங்கள் இருக்கும்(1 ) அவர் உண்மையிலேயே பிஸி (2 ) அவர் உங்களிடம் பேச விரும்பவில்லை.

அர்த்த நாரீஸ்வரன் என்று சொல்கிறார்களே தவிர அர்த்த புருஷ ஈஸ்வரி என்று யாரும் சொல்வதில்லையே ஏன்? -ஆணாதிக்கம்!

ஆறு
=====

ஓஷோ ஜோக்குடன் முடித்து விடுவோம்.

இரண்டு குடிகாரர்கள் (ரயில்வே ட்ராக்கில் நடந்தபடி)

குடி 1 : என்னப்பா இந்த மாடிக்கு இத்தனை படி? முடியவே மாட்டேங்குது? பேஜாருப்பா
குடி 2 : ஆமாம்பா..அப்புறம் இந்த கஞ்சப்பயலுக பாரு கைப்பிடிய எத்தனை கீழ வச்சிருக்காங்க.

இரண்டு நண்பர்கள்:

ஒருவன்: எனக்கு கம்ப்யூட்டர்ல வேலை பண்ணி கண்ணுக்கு முன்னால கறுப்புப் புள்ளியா தெரியுதுப்பா
இன்னொருவன்: கண் டாக்டர் யாரையாவது பார்த்தாயா?
அவன் : இல்லை..இதுவரைக்கு
ம் கறுப்பு புள்ளியை தான் பார்த்தேன்.

ஒரு அரசியல்வாதி ஒருநாள் காட்டுவழியே தனியே போய்க் கொண்டு இருந்தார்.
அப்போது ஒரு திருடன் வந்து வழிமறித்து 'ஏய், உன் பணத்தை மரியாதையா எடுத்துக் கொடுத்திரு' என்று மிரட்டினான்.
'நான் யார் தெரியுமா? நான் ஒரு அரசியல்வாதி' என்றார் அவர்

திருடன்: அப்ப 'என் பணத்தை மரியாதையா கொடுத்திரு'


முத்ரா


27 comments:

வடகரை வேலன் said...

//பேச்சுலர்களுக்கு வீடு வேண்டுமா? தீபாவளிக்கு முதல்நாள் ஏதாவது வீட்டுக்கு போய் ஓனருக்கு ஹேப்பி தீபாவளி சொன்னால் போதும்!//

இது புரியலை. விம் ப்ளீஸ்.

சமுத்ரா said...

வடகரை வேலன் ,நீங்க டி.வி ல விளம்பரமே பார்ப்பதில்லையா?

Jayadev Das said...

//பேச்சுலர்களுக்கு வீடு வேண்டுமா? தீபாவளிக்கு முதல்நாள் ஏதாவது வீட்டுக்கு போய் ஓனருக்கு ஹேப்பி தீபாவளி சொன்னால் போதும்!// Same Blood, Yenakkum puriyalai.

Jayadev Das said...

\\ஒருவன்: எனக்கு கம்ப்யூட்டர்ல வேலை பண்ணி கண்ணுக்கு முன்னால கறுப்புப் புள்ளியா தெரியுதுப்பா\\ இந்தக் கருமாந்திரத்துக்கு முன்னாடி உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைக்கனும்பா... எப்படின்னுதான் புரியலை.

Jayadev Das said...

\\How are you என்று கேட்பதும் ஒரு சடங்கு ஆகி விட்டது. I'm fine என்று சொல்வதும் ஒரு சடங்கு ஆகி விட்டது.\\\ இதை நாம் ஊர் விவேகானந்தா ஆங்கிலப் பயிற்சிப் பள்ளிகளிதான் சொல்லித் தருகிறார்கள். நிஜத்தில் வெள்ளைக் காரன் இப்படிச் சொல்வதில்லையாம். Hey you, what is up? Hey, how is it going? இப்படித்தான் கேட்பார்களாம். பதிலுக்கு, what is up? Going good. என்று தான் சொல்வார்களாம்.

Jayadev Das said...

\\தாஜ்மஹால் மாசுபட்ட காற்று காரணமாக கறுத்துக் கொண்டு வருகிறதாம்.\\ அதன் ஓரத்தில் ஓடும் யமுனை நதி சாக்கடையாகி அறை நூற்றாண்டு ஆயிடிச்சு, அதைப் பத்தி எவனாச்சும் கவலைப் பட்டானா, ஆனா இந்த கல்லறைக்கு ஏதோ ஆயிடிச்சுன்னா கவலைப் படுறாங்க, இதனோட மார்பில் கருப்பாவுதுன்னு சொல்லி அதைச் சுத்தி இருக்கும் ஆலைகளை மூடச் சொல்றாங்க. ஆனா அதே ஆலைக் கழிவுகள் யமுனையை விஷமாக்குகிரதேன்னு யாருக்கும் வருத்தமில்லை, அதன் நீரை நம்பியிருக்கும் மக்கள், விவசாய நிலங்களைப் பற்றியும் கவலையில்லை. யாரையோ புதைத்த கல்லறைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட மக்கள் உயிருக்கு கொடுப்பதில்லை, இதுதான் இந்தியா.

SURYAJEEVA said...

//ஒருத்தன் கிட்ட இருந்து திருடினா அவன் பேரு திருடன். நிறைய பேர் கிட்ட இருந்து திருடினா அவன் பேரு அரசியலவாதி//

if u steal one persons idea it is plagiarism, if u steal many persons idea it is research..

SURYAJEEVA said...

vadakarai velan
jayadev das

//பேச்சுலர்களுக்கு வீடு வேண்டுமா? தீபாவளிக்கு முதல்நாள் ஏதாவது வீட்டுக்கு போய் ஓனருக்கு ஹேப்பி தீபாவளி சொன்னால் போதும்!//

raymonds advertisement

Jayadev Das said...

\\இல்லை அர்ஜுன் பாணியில் சொல்வதென்றால், ஒருநாள் பிரதமாராக இருந்து பார்த்தால் தான் நமக்கு அவருடைய பொறுப்புகள், அவருடைய கஷ்டம் எல்லாம் தெரியும்.\\ இவர் இருக்கும் நிலையில் கூட சிறப்பாக செயல் பட முடியும், ஆனால் படு கேவலமாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார். [ஆட்டுவிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார். இது மானங் கேட்ட பிழைப்பு.]

Katz said...

நாய் வாலை நிமிர்த்த முடியாது.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Chitra said...

:-)))

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said...

தமிழில் அறை எண் 305ல் கடவுள் படத்தின் கதையை ஞாபகப்படுத்தியது...

3.42 happiness - மரணமொக்கை...

G.M Balasubramaniam said...

இந்த வருஷம் தீபாவளி ஊரிலேயா.இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

சேலம் தேவா said...

குலைக்கற நாய் கடிக்காது.

இனிய தீபாவளி வாழ்த்துகள்..!! :)

சார்வாகன் said...

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

Nagasubramanian said...

//
ஒரு கருவறைக்குள் தெய்வம் இருந்தால் அது கோவில் ஒரு தெய்வத்துக்குள் கருவறை இருந்தால் அது 'தாய்'//
superb!

Mohamed Faaique said...

//It's easy to take authority. It's very difficult to take responsibility ///

அருமை..

இந்தமுறை Extra சுவரஸியமா இருக்கு... தீபாவளி பரிசா??

HVL said...

எல்லாமே நல்லா இருக்கு.
நாய்க்கு வேலையில்ல நிக்க நேரமும் இல்ல!

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

kaialavuman said...

//raymonds advertisement//

இல்லை அது "Peter England" Shirts விளம்பரம். [அதுசரி, பொருளா முக்கியம். அது தரும் கருத்து பற்றிதானே எழுதியிருக்கிறார்.]

பிளாசபி பாண்டியன், அறை எண் 305 இந்த Bruce Almighty-இன் inspiration தான்.

இராஜராஜேஸ்வரி said...

It's easy to take authority. It's very difficult to take responsibility /


அருமையான உணர வேண்டிய தத்துவம்.

இராஜராஜேஸ்வரி said...

சந்திரனை பார்த்து குலைத்ததாம் நாய்

நாய்ப்பிழைப்பு...

நாய் பெற்ற தெங்கம்பழம்..

ஆறு நிறைய தண்ணீர் ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்...

நன்றி கெட்ட நாய்...

இராஜராஜேஸ்வரி said...

நல்லவன் ஒருவனுடைய வாழ்க்கை வரலாறு அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை./

அனுபவ உண்மை!

விச்சு said...

3.42happiness - நல்லா யோசிச்சுருக்கீங்க.
அசைந்து தின்கிறது யானை; அசையாமல் தின்கிறது வீடு - சூப்பர்.
அப்புறம் அந்த காமெடி எல்லாமே நல்லாயிருக்கு.

சாமக்கோடங்கி said...

இத்தனை நாளா உங்களைப் பாக்காம விட்டிருக்கேன்..

உங்கள் சிந்தனைகளும் எழுத்துக்களும் புதிதாகவும் அழகாகவும் இருக்கின்றன.

நன்றி..

சாமக்கோடங்கி said...

கடவுளே வந்தாலும் அவரைப் போட்டோ எடுக்க கமெரா தேடுவோம்..

சூப்பர்...

Aba said...

//It's easy to take authority. It's very difficult to take responsibility என்று சொல்வார்கள் //

இதுசரி...

//நாம் கடவுளே வந்தாலும் அவரை போட்டோ எடுக்க கேமரா தான் தேடுவோம்.//

ஹிஹி.. அப்பதானே காசு பாக்கலாம்... இல்லாம கடவுள வச்சு வேற என்ன செய்றது?

//அர்த்த நாரீஸ்வரன் என்று சொல்கிறார்களே தவிர அர்த்த புருஷ ஈஸ்வரி என்று யாரும் சொல்வதில்லையே ஏன்? -ஆணாதிக்கம்!//
good question...

//I 'm busy என்று ஒருவர் சொன்னால் இரண்டு காரணங்கள் இருக்கும்(1 ) அவர் உண்மையிலேயே பிஸி (2 ) அவர் உங்களிடம் பேச விரும்பவில்லை.//

அடடா.. இதுல யாருக்கோ ஏதோ இருக்கு போலிருக்கே? (குற்றமுள்ள மனசுதான் குறுகுறுக்கும்)

//ஒரு கருவறைக்குள் தெய்வம் இருந்தால் அது கோவில் ஒரு தெய்வத்துக்குள் கருவறை இருந்தால் அது 'தாய்'//

இது பஞ்ச்..