கலைடாஸ்கோப் - 41 உங்களை வரவேற்கிறது.
$ ஒரு வினாடி நேரத்தை அப்படியே உறைய வைக்கும் சக்தி புகைப்படங்களுக்கு இருக்கிறது என்று சொல்வார்கள். புகைப்படம் என்பது ஒரு விதமான டைம் மெஷின். பார்த்த மாத்திரத்தில் நம்மை கடந்த காலத்துக்கு நேரடியாகக் கொண்டு போய் சேர்த்து விடுபவை அவை. பழைய ஆல்பங்களைப் புரட்டிப் பார்ப்பது என்பது ஏதோ ஒரு பொக்கிஷத்தை திறந்து பார்ப்பது போல. கருப்பு வெள்ளையில், நம் தாத்தாக்கள் குட்டிப் பையன்களாக, பாட்டிகள் குட்டிப் பெண்களாக, இன்றைய நோயாளிகள் அன்றைய பலசாலிகளாக.(எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!) ஒரு ஆல்பத்தைப் புரட்டுவது என்பது ஒரு வாழ்க்கையையே புரட்டுவது போல.சரி எதற்காக சொல்கிறேன் என்றால் நம் இந்தியத் துணைக்கண்டத்தின் சென்ற இரண்டு நூற்றாண்டுகளின் மனிதர்களையும் ,காட்சிகளையும்,சம்பவங்களையும் படம்பிடித்த புகைப்படங்களை காட்சிக்கு வைக்கிறது http://www.oldindianphotos.in/ என்ற வெப் சைட். இங்கே, பழமை ததும்பும் நம் இந்தியாவின் அழகை ஆயிரக்கணக்கான படங்கள் மூலம் கண்டு மகிழலாம்.
$$ .com டொமைனுக்கு மாறியதும் வாசகர்களின் வருகை குறைந்துள்ளது போலத் தோன்றுகிறது. சொந்தமாக வெப்சைட் வைத்துள்ளதால் பெரிய எழுத்தாளர் (?) ஆகி விட்டேன் என்று நினைக்காதீர்கள்.அதே பழைய சமுத்ரா தான். (உண்டதே உண்டு நித்தம் உடுத்ததே உடுத்தி கோலம் கொண்டதே கொண்டு ...)வெப்சைட்டுக்கு (வருடம்) பத்து டாலர் பணம் கட்டுவதற்கு கடன் அட்டை (அதான் கிரெடிட் கார்டு!)வேண்டும். அதையே கடன்வாங்கி தான் கட்டினேன்.ஹ்ம்ம்..
அப்புறம் இன்னொரு விஷயம். பல்சுவை என்ற பெயரில் அன்றைக்கு பேப்பரில் வந்த செய்திகளை எழுதுவதோ, அரசியலில் ஜெயலலிதா, விஜயகாந்த் ,தங்கபாலு பற்றி எழுதுவதோ எனக்கு உடன்பாடு இல்லை.அரசியல் ஒரு சாக்கடை என்றால் அதை என் கிளற வேண்டும்? எனவே சினிமா, அரசியல், காதல் கவிதை இதையெல்லாம் நீங்கள் எதிர்பார்த்தால் samudrasukhi.com ஐ உங்கள் FAVORITES இல் இருந்து நீக்கி விடவும்.
(ஒரு exception : 'கஜல்' டைப் காதல் கவிதைகளை எழுதலாம் என்று ஒரு ஐடியா இருக்கிறது) கஜல் கவிதை என்றால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு: அதில் பால் வேறுபாடு இருக்கக்கூடாது. ஒரே கவிதையை ஆண் பெண்ணை நோக்கியும்
பெண் ஆணை நோக்கியும் பாடலாம். 'பெண்ணே உன் உதடுகள் படுத்திருக்கும் வரிக்குதிரை' என்றெல்லாம் எழுதினால் அதில் மறைமுகமாகக் காமம் கலந்து விடுகிறது. சினிமாவில் இந்த கஜல் டைப் பாடல்களைப் பார்ப்பது அபூர்வம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் "என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா, உன்னை சீராட்டும் பொன்னூஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா, உன்னை நான் என்பதா!' இந்தப் பாடலை ஆண் பெண்ணை நோக்கிப் பாடலாம்,பெண் ஆணை நோக்கிப் பாடலாம்.ஏன் ஒரு பக்தன் கடவுளை நோக்கிக் கூடப் பாடலாம்.அர்த்தம் தெரியாத ஸ்லோகங்களை முணுமுணுப்பதை விட கோவிலில் கடவுள் முன்னால் இது போல கஜல் சினிமாப் பாடல்களை மனதுக்குள் பாடிப் பாருங்கள்.கடவுள் தப்பாக நினைக்க மாட்டார். (யாரது? நாக்கமுக்க எல்லாம் கடவுள் முன்னாடி பாடக்கூடாது ஆமாம்!)
இன்னொரு விஷயம்: ஒரு காதல் கவிதையைப் படிக்கும் போது நம் இதயத்துக்குள் யாரோ சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போல இருக்க வேண்டும். கவிதை எழுதியவரை சம்மட்டியால் அடிக்கலாம் என்று தோன்றக் கூடாது.அப்படி எழுத முடியாவிட்டால் தயவு செய்து யாரும் கா.கவிதைகளை எழுதாதீர்கள் (#என்னை சொன்னேன்!)
$$$ சீரியலில் அழுகை இருக்கலாம். அழுகையே சீரியலாக இருக்கும் பெருமை 'நாதஸ்வரம்' சீரியலுக்குப் போகிறது. மேலும் வசனமே இல்லாமல் அழுவது, விளம்பர இடைவேளை இல்லாமல் அழுவது என்று அழுவதில் பல புதுமைகளைப் புகுத்திய பெருமையும் நாதஸ்வரம் சீரியலுக்கே போகிறது. சில பேர் அழுதால் இயல்பாக இருக்கும்.அதைக் கூட தலைவிதியே என்று பார்க்கலாம்.சில பேர் அழுதால் காமெடியாக இருக்கும்.(உதாரணம்: பூவிலங்கு மோகன்) .சிரிப்பது, அழுவது, தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது, விக்குவது,இருமுவது இந்த எல்லா செயல்களையும் ஒருசேர செய்வது போல இருக்கிறது அவர் அழுவதைப் பார்க்கும் போது!கொடுமை என்ன என்றால் அவர் நாதஸ்வரம் வாசிப்பது. நல்ல வேளையாக இது வரை ஒரே ஒரு தடவை தான் அவர் வாசித்திருக்கிறார் .சின்னக் குழந்தைகள் கலர் பீப்பி வாசிப்பது போல வாசிக்கிறார்! நாதஸ்வரம் என்று மங்களகரமாகப் பெயர் வைத்து விட்டு சதா இழவு வீடு போல அழுது கொண்டு இருக்கிறார்கள்.இன்னொன்று அதன் இயக்குனர் டைலர் கோபி. அவர் ஏதாவது அப்பா பாத்திரம் எடுத்துக் கொண்டு செய்திருக்கலாம். காதல் காட்சிகளில் அவரும் அவர் வயதும் பொருந்துவதே இல்லை!
ஆனால் சீரியல் கேரக்டர்களுக்கு தொடர்ந்து துன்பங்கள் வரும்படி காட்டுவதில் ஒரு சைக்காலஜி இருக்கிறது
# சிலர் பிறரது துன்பங்களைப் பார்த்து உள்ளூர மகிழ்வார்கள் (சீரியலாக இருந்தாலும்)
# அந்த செல்வத்துக்கு வரும் சோதனைகளுக்கு முன்னால் நம்முடையது எல்லாம் ஜுஜுபி
# கஷ்டம் வந்தாலும் எப்படி மனம் தளராம இருக்கணும் என்று நம்ம துளசியைப் பார்த்து தெரிஞ்சுக்கணும்
ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். ஒரு சீரியலில் எல்லாரும் உட்கார்ந்து சந்தோஷமாக சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு வில்லங்கம் கூடிய சீக்கிரம் வர இருக்கிறது என்று தைரியமாகச் சொல்லலாம். (கூடிய சீக்கிரம் என்ன? அப்போதே பின்னால் நின்று கொண்டிருக்கும் ஜெயந்தி குண்டுக் கண்களை உருட்டி ஒரு சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பாள்)
$$$$ தமிழ் இலக்கணத்தில் 'அணி' தெரியுமா? சரி சரி தமிழே ஒழுங்காகத் தெரியாது என்கிறீர்களா? கொஞ்சம் விளக்கலாம்.அணி என்றால் ஒரு செய்யுளையோ கவிதையையோ அழகு படுத்துவது.பெண்களுக்கு எப்படி ஒட்டியாணம், நெக்லஸ், நெத்திச் சுட்டி, கொலுசு,கம்மல்,வளையல், FAIR N LOVELY எல்லாம் இருக்கிறதோ அதே போல ஒரு கவிதைக்கும் நிறைய அணிகள் இருக்கின்றன.
ஒரு செய்யுளைக் கேட்ட உடனேயே அதில் என்ன அணி வருகிறது என்று சொல்லும் திறமை தமிழர்களுக்கு இருக்க வேண்டும். (பல பேர் இன்று இது தமிழா என்று அப்பாவியாகக் கேட்கும் நிலையில் தான் இருக்கிறார்கள்!)சரி தமிழ் தானே, கொஞ்சம் முயற்சி செய்து கற்றுக் கொள்வோம்.ஒன்றும் பிரம்ம வித்தை இல்லை. முதலில் எளிமையான இயல்பு நவிற்சி அணி. உள்ளதை உள்ளபடி சொல்வது. ஆனால் இது நம்மில் நிறைய பேருக்கு கஷ்டம். நாம் எப்போதும் ஒன்றை மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடி சொல்ல விரும்புவது இல்லை.சுஜாதா சொல்வது போல 'வரலாறு காணாத கூட்டம்' என்றால் மைக்காரர்களையும் சேர்த்து பதினைந்து பேர். சிறிய தலைவலி வந்தாலும் அதை நாம் மிகைப்படுத்தி 'தலைவலியில் உயிரே போகிறதே' என்கிறோம்.இயல்பு நவிற்சி அணி என்பது எளிமையாக இருந்தாலும் அது பிளாட்டின நகை போல. அதை நிறைய கவிதைப் பெண்கள் அணிய விரும்புவதே இல்லை! காதல் கவிதை என்றால் அதில் கண்டிப்பாக 'மிகைப்படுத்துதல்' இருக்க வேண்டும். 'அந்த நிலாவத்தான் நான் கையிலே பிடிச்சேன்' 'கைகால் முளைத்த காற்றா நீ' 'கடல்மேல் சிவப்பு கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்' 'அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி' என்றெல்லாம் சாத்தியமில்லாததை எழுத வேண்டும். இ.ந.அணி தமிழ்த் திரையிசைப் பாடல்களில் எங்கே வந்திருக்கிறது என்று தேடினேன். ஒன்று கூட கிடைக்கவில்லை.ஏதாவது ஒரு இடத்தில் மிகைப்படுத்தி விடுகிறார்கள்.தமிழ் இலக்கியத்தில் உதாரணம் வேண்டும் என்றால் எங்கெங்கோ போக வேண்டாம். நம் ஆண்டாளையே எடுத்துக் கொள்ளலாம்.காலை மலர்வதை எந்த பில்ட்-அப்பும் இன்றி மிக இயல்பாக வர்ணிக்கிறாள் :-
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண். செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்..
(உங்கள் தோட்டத்தில் காலையில் மலரும் செங்கழுனீர் பூக்கள் மலர்ந்தன. மாலையில் மலரும் ஆம்பல் பூக்கள் கூம்பின.,,இப்படி இயல்பாக ஆரம்பிக்கும் ஆண்டாள் கடைசியில் பங்கயக் கண்ணனைப் பாடேலோரெம்பாவாய் என்று கண்ணனின் கண்களை தாமரையோடு ஒப்பிட்டு தன இயல்பு நவிற்சியில் இருந்து விலகி விடுகிறாள்)
எங்கேயோ படித்தது:
ஒரு பெண் அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து தான் அம்மாவிடம் 'அம்மா என்னை ஒரு சிங்கம் துரத்திக் கொண்டு வந்தது'
என்றாளாம். அம்மா அலட்சியமாக வெளியே வந்து பார்த்ததில் ஒரு தெரு நாய்தான் நின்றிருந்ததாம்.
"இதப் பாரு , உனக்கு இதோட லட்சம் தடவை சொல்லியாச்சு, எதையும் exaggerate பண்ணாதேன்னு' என்றாளாம்.
(புரிகிறதா?)
$$$$$ இரண்டு கவிதைகள்
> C
===
ஒளியை விட வேகமானது
எது தெரியுமா?
'ஹலோ' என்ற வார்த்தை தான்
எவ்வளவோ தூரத்தில் இருப்பவர்களை
எவ்வளவு சீக்கிரம்
பக்கத்தில் கொண்டுவருகிறது?
God is for sale
==========
கடவுள்கள் எவ்வளவு சீக்கிரம்
விற்கப்பட்டு விடுகிறார்கள்!
சிவப்பு சிக்னலின் அவசரத்தில்;
நடைபாதை கடைகளின்
களேபரத்தில்;
பரபரப்பான நெடுஞ்சாலை
வழித்தடங்களில்;
மனிதர்கள் நிரம்பி வழியும்
கோவில் பிரகாரங்களில்
பேருந்துகளின் இரைச்சலில்
ஜன்னல்வழியாக;
கடவுள்கள் எவ்வளவு சுலபமாக
விற்கப்பட்டு விடுகிறார்கள்!
$$$$$$ ஓஷோ ஜோக்
ஒரு ஆள் பைக்கில் போய்க் கொண்டிருந்த போது பாலத்தின் மேலே நின்று கொண்டு ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதைப் பார்த்தான். அருகில் சென்று 'என்ன செய்கிறாய்' என்று கேட்டான்.
'நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்'
'சரி, தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எனக்கு ஒரு முத்தம் கொடு'
இருவரும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.
'சரி நீ ஏன் தற்கொலை செய்து கொள்கிறாய்?'
'என் பெற்றோர்களுக்கு ஒன்று பிடிக்கவில்லை; எதிர்க்கிறார்கள்'
'என்ன? உன் காதலையா?'
'இல்லை; நான் பெண்ணைப் போல உடை உடுத்துவதை'
இப்போது பைக்கில் வந்தவன் பாலத்தில் இருந்து கீழே குதிக்கிறான்.
சமுத்ரா

19 comments:
பழமை ததும்பும் நம் இந்தியாவின் அழகை ஆயிரக்கணக்கான படங்கள் மூலம் கண்டு மகிழலாம்.
அருமையான கலைடாஸ்கோப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
முன்பொருமுறை போட்டோ எடுப்பது புடிக்காது`னு எழுதி இருந்தீங்க.. இப்போ மாறிட்டீங்களா???
ஒஷோ ஜோக் அருமை..
ஆண்டாள் இயல்பிலிருந்து நழுவியதாகத் தோன்றவில்லை. கமலக் கண்ணன் என்று மகாவிஷ்ணுவுககே பெயர் உண்டு. கலைடாஸ்கோப்பை மிக ரசித்தேன். அருமை.
//முன்பொருமுறை போட்டோ எடுப்பது புடிக்காது`னு எழுதி இருந்தீங்க.. //அது மங்கி சங்கி..நான் சங்கி மங்கி..
//கமலக் கண்ணன் என்று மகாவிஷ்ணுவுககே பெயர் உண்டு. //என்னதான் சொன்னாலும் கமலக்கண்ணன் என்பது உயர்வு நவிற்சி தான்,.
#எனவே சினிமா, அரசியல், காதல் கவிதை இதையெல்லாம் நீங்கள் எதிர்பார்த்தால் samudrasukhi.com ஐ உங்கள் FAVORITES இல் இருந்து நீக்கி விடவும்.#Mega Serial ok vaa.
Mega Serial ok vaa.//Mega serial excluded/ :D
thendral vanthu ennai thodum
athu saththam indri mutham idum
pagalae poi vidu
iravae paai kodu
ithu iyalbu navirchi ani la serumaa?
தண்டப்பயல், தென்றல் எங்காவது முத்தமிடுமா? எனவே இது
இயல்பு நவிற்சி இல்லை.
அனைத்தும் நன்றாயிருக்கிறது!
அணி- பழசையெல்லாம் ஞாபகப்படுத்துகிறது! படிச்சு நாளாச்சு!
இன்றைய கலைடாஸ்கோப் இதம் அன்ட் ரிதம்.
வாசகர் வருகைக்கு குறைவு bookmarks update ஆக இருக்கலாம்.
எங்களையெல்லாம் காப்பாற்ற நீங்க சீரியல முழுதாக பார்த்திருப்பீங்க போலிருக்கே!!! உங்க நல்ல மனதையும் சீரிய்ல பார்க்கும் தைரியத்தையும் பாராட்டணும்.
As usual nice one :-)
என்னமோ சொல்றீங்க..
போகிற போக்கில் கமலக்கண்ணன்:)
\\இப்படி இயல்பாக ஆரம்பிக்கும் ஆண்டாள் கடைசியில் பங்கயக் கண்ணனைப் பாடேலோரெம்பாவாய் என்று கண்ணனின் கண்களை தாமரையோடு ஒப்பிட்டு தன இயல்பு நவிற்சியில் இருந்து விலகி விடுகிறாள்\\ தாமரை மலரை விட கண்ணனின் கண்கள் கோடான கோடி மடங்குக்கும் மேல் ஒப்பிடவே முடியாத அளவுக்கு அழகு, அந்த வகையில் ஆண்டாள் \\இயல்பு நவிற்சியில் இருந்து விலகி விடுகிறாள்\\ என்று சொல்லலாம்.
அருமையான பதிவு. குறிப்பாக அந்த 'ஓஷோ ஜோக்' சூப்பர். பகிர்வுக்கு நன்றி.
அருமையான கலைடாஸ்கோப்..
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..
http://cpedelive.blogspot.com
எனக்கும் கஜல் எழுத ஆசை.
நிபந்தனை சரி.
இலக்கணம் உண்டா?
Post a Comment