முல்லா நசுருதீன் ஒரு நாள் தன் நண்பர்களுடன் சுற்றுலா சென்றார்....
அவர்கள் ஓர் அழகான பரந்த புல்வெளியைத் தேர்ந்தெடுத்து இளைப்பாறச் சென்றனர்...
ஒரு மரத்தின் அடியில் இருந்த பெஞ்சில் சென்று படுத்துக் கொண்ட முல்லா, தன் நண்பர்களைப் பார்த்து கூறினார்....
"இப்போது யாராவது எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் நான் இந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்"
அங்கிருந்த நண்பர்களில் ஒருவர் கேட்டார்...
"ஐந்து லட்சம் கொடுத்தால்"?
"சான்சே இல்லை" என்றார் முல்லா..
."சரி பத்து லட்சம் கொடுத்தால் ?" என்று கேட்டார் இன்னொருவர்..
."இல்லவே இல்லை...." என்றார் முல்லா...
"சரி பத்து ரூபாய் கொடுத்தால் அந்த இடத்தை விட்டு எந்திரிப்பாயா?" என்றார் இன்னொருவர்...
முல்லா அந்த பெஞ்சை விட்டு துள்ளி எழுந்து அவரிடம் ஓடி வந்து "சரி பத்து ரூபா கொடுப்பா" என்றார்...
டாம் ஒரு நாள் தாமதமாக வீடு திரும்பினான்...
.பெட் ரூமில் அவன் மனைவி உடையேதும் அணியாமல் படுத்திருப்பதைக் கண்டு
"அன்பே, என்ன ஆச்சு? ஏன் இப்படி படுத்திருக்கிறாய்?" என்றான்
"எனக்கு உடுத்திக் கொள்ள நல்ல துணிகளே இல்லை" என்றாள் அவள் அழுது கொண்டே ...
.வியப்படைந்த டாம் வேகமாக கப்-போர்டின் அருகே சென்று அதைத் திறந்தான்...
."என்ன சொல்கிறாய் டார்லிங், உடைகள் இல்லையா? இதோ பார் போன மாசம் நான் வாங்கித் தந்த பிங்க் கவுன், அடுத்து மூணு மாசம் முன்னாடி வாங்கித் தந்த நீலக் கலர் டாப்ஸ், இங்கே நாம் போன வாரம் வாங்கிய மஞ்சள் ஸ்கர்ட், ஹலோ ஜோசப், ப்ளாக் ஜீன்ஸ், இங்கே வெள்ளை நைட் கவுன்............."
~சமுத்ரா
3 comments:
padhivu nalla iruku..
ஓஷோ.. பலருக்கு இவர் புரியாத புதிர்தான். இந்தியாவில் சாமியார்களுக்கென்ட்று வகுத்திருந்த அனைத்து இலக்கணங்களையும் உடைத்தெறிந்தவர். பகிர்தலுக்கு நன்றி..
super.. :)
Post a Comment