இந்த வலையில் தேடவும்

Saturday, September 22, 2012

அணு அண்டம் அறிவியல் -71

அணு அண்டம் அறிவியல் -71 உங்களை வரவேற்கிறது...

சமுத்ரா, கவிதை (லைடாஸ்கோப்)எழுதியது போதும் .-- எழுதவும் என்று சில பேர் கேட்டுக் கொண்டதால்....

WORM HOLE பற்றி சுருக்கமாக பேசி விட்டு வேறு ஒரு புதிய டாபிக் ஆரம்பிப்போம்.

பூமிக்கு ஆபத்து ஏற்படும் போது தொழில்நுட்பத்தில் வளர்ந்த நம் சந்ததிகள் எப்படியெல்லாம் space travel செய்யலாம் என்று பார்த்து வருகிறோம்.

'ஆலிஸ் இன் வொண்டர் லான்ட்' மூவியில் ஆலிஸ் ஒரு மர்மக் குழியில் விழுந்ததும் வேறு ஒரு புதிய உலகிற்கு எடுத்துச் செல்லப்படுவாள். அது போல பிரபஞ்சத்தில் இருக்கும் இந்தப் புதை குழிகள் சில சமயங்களில் நம்மை வேறு வெளிகளுக்கு, ஏன் வேறு பிரபஞ்சத்துக்கு கூட கொண்டு செல்லும் என்கிறார்கள். 



ஆப்பிள் ஒன்றின் மீது வாழும் இரு புழுக்களைக் கருதுவோம்.புழு நம்பர் ஒன்று ,வெறும் இரண்டு பரிமாணங்களை மட்டுமே அறிந்துள்ளது.நீளம் அகலம்... ஆழம் என்ற பரிமாணத்தைப் பற்றி அதற்கு அறிவெதுவும் இல்லை. புழு நம்பர் இரண்டு கொலம்பஸ் போல புதிய பரிமாணங்களைத் தேடி ஆப்பிளை சுற்றிக் கொண்டு செல்கிறது. . புழு நம்பர் ஒன்று மற்றொரு புழு தொடுவானில் மறைந்து விட்டது என்று நினைத்துக் கொள்ளும். கொலம்பஸ் ஆப்பிளை சுற்றி வரும் போது ஆப்பிள் கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது பரிமாணத்தில் வளைந்துள்ளது என்ற முடிவுக்கு வரும். கொலம்பஸ், இப்போது ஆப்பிளின் மறுபக்கத்துக்கு செல்ல இன்னொரு வழி இருக்கிறது என்று அனுமானிக்கிறது.மூன்றாவது பரிமாணத்தின் வழியே ஆப்பிளைத் துளைத்துச் செல்வது!இந்தத் துளைகளின் வழியே செல்லும் போது நேரத்தையும் தூரத்தையும் கணிசமாக மிச்சப்படுத்தலாம் என்ற முடிவுக்கு வருகிறது. இந்த 'புதைகுழிகளுக்கு' பெயர் தேடிக் கொண்டிருந்த போது ஜான் வீலர், ஆப்பிள் ஒன்றை புழு ஒன்று துளைத்துக் கொண்டு செல்வதைப் பார்த்து இந்தப் பெயர் வைத்தாராம்.அதாவது WORM HOLE , புழுத்துளை.

நம் பிரபஞ்சத்தை ஒரு (முப்பரிமாண) ஆப்பிள் போலக் கருதினால் அதன் மற்ற பரிமாணங்கள் வளைந்து இருக்கக் கூடும். அவைகளின் வழியே நாம் துளைகளை ஏற்படுத்தி தொலைதூரங்களுக்கு பயணிக்க முடியும். வார்ம் ஹோல்-களின் ஒரு பண்பு என்ன என்றால் அவைகளின் முனைகளை எவ்வளவு நீட்டித்தாலும் ஒரு முனைக்கும் இன்னொரு முனைக்கும் உள்ள தூரம் மாறாமல் இருக்கும். அதே போல ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு செல்லும் நேரமும் மாறாது. இந்த புதிரான பண்பை வைத்துக் கொண்டு நாம் வார்ம் ஹோலின் இருமுனைகளையும் வெவ்வேறு காலங்களில் இருப்பது போல மாற்றி அமைக்க முடியும்.ஒரு முனையை வேகமாக முடுக்குவதன் மூலமாகவோ அல்லது மிக அதிக நிறையின் அருகின் வைப்பதன் மூலமோ (சார்பியலின் படி)இரண்டு முனைகளுக்கிடையே கணிசமான காலவேறுபாட்டை உருவாக்கலாம். எனவே வார்ம் ஹோலின் ஒரு முனையில் நுழைந்து இன்னொரு முனை வழியே வேறு ஒரு காலத்தில் (கடந்த காலம் அல்லது எதிர்காலம் ) அனாயாசமாக வெளிவரலாம்.சரி.



சில பேர் இன்னொரு சாத்தியக்கூறை முன்வைக்கிறார்கள். ராக்கெட், விண்கலம், ஒளிவேகம், பயணம் இதை எல்லாம் கடாசி விட்டு மனிதனை இங்கிருந்து அங்கே அப்படியே TELEPORT செய்ய முடியுமா என்று. மாயாபஜார் திரைப்படத்தில் வருவது போல!

நவீன இயற்பியலுக்கு இது புதிது அல்ல. உண்மையில் குவாண்டம் லெவலில் டெலி போர்டேஷன் நடந்து கொண்டு இருக்கிறது. எல்லா துகள்களையும் , பொருளையும் நாம் அலை
(WAVE )என்றும் கருத முடியும். நானும் நீங்களும் கூட அலை தான். அலை என்பது ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியும். எனவே நாம் பூமியிலும் பிரபஞ்சத்தில் வேறு ஏதோ ஒரு மூலை காலக்ஸியிலும் இருப்பதற்கு ஒரு பூஜ்ஜியமற்ற (NON ZERO )சாத்தியம் உள்ளது.நம்முடைய அளவு குவாண்டம் நிலையுடன் ஒப்பிடும் போது மிக மிகப்பெரியது என்பதால் நம் அலைநீளம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக உள்ளது.[வேதியியலில் நீங்கள் இரண்டு அணுக்கள் எலக்ட்ரான்களை 'பகிர்ந்து' கொண்டு மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்று படித்திருப்பீர்கள்.உதாரணமாக நீர் மூலக்கூறு இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஆக்சிஜன் அணுவுடன் தமது எலக்ட்ரான்-களைப்  பகிர்ந்து கொள்வதால் உருவாகிறது. குவாண்டம் நிலையில் இதை எலக்ட்ரான் ஒரே சமயத்தில் இரண்டு அணுக்களிலும் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே IT 'S NOT ACTUALLY SHARING ..



தமிழ்த் திரைப்படங்களில் ஒரே ஹீரோ இரண்டு பெண்களை கல்யாணம்
செய்து கொண்டு அது தெரிந்து விடாமல் இருக்க அங்கும் இங்கும் அல்லாடுவார். கடைசியில் அது இரண்டு ஹீரோயின்களுக்கும்  தெரிந்து, போகட்டும் சனியன் இரண்டு
பேரும் ஒரே ஹீரோவை பகிர்ந்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு  வருவார்கள்.சுபம்... மனிதனுக்கு தான் இந்த limitation .கிருஷ்ணா பரமாத்மா ஒரே சமயத்தில் ருக்மிணியின் வீட்டில் ருக்மிணி கிருஷ்ணனாகவும் சத்யபாமா வீட்டில் சத்யபாமா கிருஷ்ணனாகவும் இருக்க முடியும். அதே போல எலக்ட்ரான்கள் ஒரே சமயத்தில் தன் எல்லா சின்ன வீடுகளிலும்(அணுக்களிலும்) இருக்கின்றன. எலக்ட்ரான்களின் இந்த குவாண்டம்  பண்பு வேதியியலை,
நம் வாழ்வை சாத்தியமாக்குகிறது.]

ஏற்கனவே ௮-௮-௮ வில் சொன்னது போல எலக்ட்ரான்கள் அணுவின் ஆற்றல் மட்டங்களுக்கு இடையே உள்ள தூரத்தை டெலிபோர்ட் செய்கின்றன.அதாவது இடையே எங்கும் பயணிக்காமல் இங்கிருந்து மறைந்து அங்கே தோன்றுகின்றன. இதை வெளியின் மிகச்சிறு பகுப்பு (quantization of space ) என்பார்கள்.இதை மிகப்பெரிய தூரங்களுக்கு நம்மால் நீட்டிக்க முடிந்தால் teleportation சாத்தியமாகும்.ஆனால் இதற்கு நாம் பிளான்க் மாறிலியின் மதிப்பை மாற்ற வேண்டி இருக்கும். மனிதனால் இயற்கையின் மாறிலிகளை மாற்ற முடியுமா என்று தெரியவில்லை.
(  அதாவது பிளான்க் நீளம் ஒரு மீட்டராக இருந்தால் நாம் ஒவ்வொரு மீட்டராக 'ஜம்ப்' செய்து நடக்க வேண்டி இருக்கும். ஒரு இடத்தில் மறைந்து மீண்டும் ஒரு மீட்டர் கடந்து முடித்த பின் அங்கே தோன்ற வேண்டி இருக்கும். ஒரு மீட்டருக்கும் குறைந்த தூரங்களை கடக்க முடியாது. (1 .5 மீட்டர், 2 .5 மீட்டர் etc ))

இன்னொரு சாத்தியம் ஒரு பொருளை அணு அணுவாகப் பிரித்து ஒவ்வொன்றையும் ஒளியின் மூலம் வேறு இடத்துக்கு அனுப்பி பிறகு
அங்கே Re -construct செய்வது.[நாம் அனுப்பும் தகவல் தொடர்பு சிக்னல்கள் இவ்வாறு தான் செல்கின்றன]இதற்கு நாம் பொருளின் அணுக்கள் எல்லாம்
ஒருமித்த ஒத்திசைந்த ஏகாந்த நிலையில் (ராணுவ வீரர்கள்
போல ) துடிக்கும்படி செய்யவேண்டும். 


வேறு வேறு அணுக்கள் இல்லை. எல்லாம் ஒரே அணு! அதிக வெப்ப நிலையில் இதை செய்ய முடியாது.அதிக வெப்பநிலையில் ஒரு பொருளின் அணுக்கள் கண்டபடி அதிர்ந்து கொண்டிருக்கும். எனவே பொருளை கிட்டத்தட்ட பூஜ்ஜிய ஆற்றல் நிலைக்கு (-273 டிகிரி செல்சியஸ்) அருகில் கொண்டுவர வேண்டும்.அப்போது அணுக்கள் சக்தி இல்லாததால் சிவனே என்று கிட்டத்தட்ட இயக்கமற்ற நிலைக்கு வந்து மிக மிக மெதுவாக ஒரே கதியில் துடிக்க ஆரம்பிக்கின்றன. எல்லா அணுக்களின் அலைசார்பும் (WAVE FUNCTION)ஒன்றுடன் ஒன்று பொருந்தி நமக்கு ஒரு மெகா ஏகாந்த அணு கிடைக்கிறது. ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள் ஒரு பெரிய கூட்டத்தையே ஹிப்னாடைஸ் செய்து எல்லா ஆட்களையும் ஒரே மனநிலை கொண்ட ஒற்றை ஆளாக மாற்றுவது போல![இந்த விளைவை கண்டுபித்தவர் நம் இந்திய விஞ்ஞானி போஸ் !] இப்படி ஏகத்துக்கு குளிர்விக்கப்பட்ட பொருளின் மீது சாதாரண நிலையில் இருக்கும் அணுக்களை அனுப்ப வேண்டியது. (உதா: ருபீடியம் அணுக்கள்) அவை குளிர்விக்கப்பட்ட பொருளின் அணுக்களுடன் வெப்பசமநிலை அடைய வேண்டி ஆற்றலை (ஒளியை) உமிழ்ந்து தாமும் குளிர்கின்றன. இப்போது வெளிவரும் ஒளி ஆச்சர்யமாக அந்த ஒரிஜினல் பொருளை மீண்டும் கட்டமைக்கும்(re-construct)அத்தனை தகவல்களையும் கொண்டிருக்கிறது. இந்த முறை மூலம் இப்போது விஞ்ஞானிகள் சில நூறு அணுக்களை டெலிபோர்ட் செய்துள்ளனர். ஒரு எலியையோ மனிதனையோ இப்படி கடத்த முடியுமா என்று தெரியவில்லை. மேலும் மனிதன் என்பவன் வெறும் அணு, மூலக்கூறுகளின் கலவை தானா என்றும் தெரியவில்லை.

ஸ்ட்ரிங் தியரி -இழைக் கொள்கை
=======================
 
அறிவியலின் நோக்கம் என்ன என்று கேட்டால் நமக்கு சரியான விடை கிடைப்பதில்லை.

*மனித வாழ்வை எளிமையாக ஆக்குவதா?

* பிரபஞ்சம் முழுவதும் (if not நம் காலக்சியில்) குடியேற்றங்களை அமைப்பதா?

*மனிதனை மரணமற்றவனாக மாற்றி கடவுளின் இடத்தை பிடித்துக் கொள்வதா?

* வெறுமனே இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொள்வதா?

கடவுள் அல்லது இயற்கை, தன்னுடைய இடத்தை மனிதன் பிடித்துக் கொள்வதை விரும்புமா என்று தெரியவில்லை. தனது ரகசியங்களை நெருங்க முடியாதபடி அது இயற்கையின் விதிகளை அமைத்திருக்கலாம். ஆனாலும் சில வி
ஞ்ஞானிகள் இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். மனிதன் தன்னுடைய இடத்தைப் பிடிக்கக் கூடாது என்று கடவுள் கருதினால் அவர் மனிதனை வெறுமனே ஐந்தறிவுள்ள மனிதனாகப் படைத்திருக்கலாம். மனிதனுக்கு ஆறறிவு கொடுத்திருக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. என்கிறார்கள் .மனிதனின் ஆறாம் அறிவு வியக்க வைக்கிறது. மிகச் சிறியதில் இருந்து மிகப் பெரியது வரையில் ஓரளவு மனிதன் இயற்கையின் மர்மங்களை அறிந்து வைத்துள்ளான்.பூமி பிரபஞ்சத்தின் மையம் அல்ல ....பிரபஞ்சம் மிகப் பெரியது என்ற அறிவை அவன் அடைந்திருக்கிறான் .இந்த அறிவை முடிவில்லாமல் விருத்தி செய்ய இயற்கை அனுமதிக்குமா? நம் அறிவின் எல்லை என்ன? தனது பொக்கிஷங்களை ஒன்று விடாமல் இயற்கை மனிதனுக்கு தொடர்ந்து காட்டுமா?அல்லது சில சாவிகளை ஒருபோதும் காட்டாமல் ஒளித்து வைக்குமா?

நம்மால் இயற்கையின் ரகசியங்களை அறிய முடியாவிட்டாலும் நம் அறிவின் எல்லை என்ன என்பதையாவது அறிந்து கொள்ள இயலுமா? அறிவியலின் பணி என்பது எல்லாவற்றிலும் நம்மை வெற்றி கொள்ள செய்வது மட்டும் அல்ல. நம் அறிவின் எல்லையை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியும் கூட.உதாரணமாக ஹைசன்பர்கின் நிச்சயமில்லாத் தத்துவம் நம் அறிவின் கீழ் விளிம்பை நிர்ணயிக்கிறது. இதை கண்டுபிடித்ததே மனித மூளையின் மிகப் பெரிய சாதனை தான்.

இன்னொரு விஷயமும் மனிதனை வருத்துகிறது. உண்மை என்பது objective அல்லது subjective ?நான் இல்லாவிட்டால் இந்த பிரபஞ்சம் எப்படி
இருக்கும்? கவனிப்பவன்(observer ) இருப்பதால் தான் 'கவனிக்கப்படுவதும்' (observed ) இருக்கிறதா?நாம் கண்டுபிடித்து வைத்துள்ள அறிவியல் உண்மைகள் மற்றும் விதிகள் 'மனிதனை சார்ந்தவையா?' (anthropic ) அல்லது சார்பற்ற உண்மை , objective reality என்று ஏதேனும் இருக்கிறதா? என்பது. இந்த ஒரு விஷயம் தான் அறிவியலை ஆன்மீகத்தை விட்டு முற்றிலும் வேறுபடுத்துகிறது. ஆன்மிகம் தூரத்து நட்சத்திரங்களைப் பற்றியும் அணுக்களுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பற்றியும் ஒருபோதும் கவலை கொண்டதில்லை. வேதத்தில் ஸ்ட்ரிங் தியரி இருக்கிறது பகவத் கீதையில் ரிலேடிவிடி இருக்கிறது என்பதெல்லாம்
சுத்த அபத்தம். -- வில் பெரும்பாலான இடங்களில் நானே இந்த அறிவியல்-ஆன்மீக ஒப்பீடு தவறை செய்திருக்கிறேன். அவை வாசகர்களிடத்தில் ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவே.ஆன்மிகம் முழுக்க முழுக்க நான் யார்? எனக்கு உள்ளே என்ன இருக்கிறது ?என்பதில் கவனம் செலுத்துகிறதே தவிர எலக்ட்ரான் என்பது துகளா அலையா என்பதில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை.



சரி. அப்படியானால் தன்னை அறிந்த ஒரு ஞானிக்கு இயற்கையின் புதிர்கள் எல்லாம் விடுவிக்கப்படுமா? புத்தர் ஒருவரிடம் இருந்து பிரபஞ்சம் எதனால் ஆனது?காலப் பயணம் சாத்தியமா? போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? கௌதம புத்தரிடமே இத்தகைய கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவர் இத்தைகைய கேள்விகளுக்கு விடை சொல்ல மறுத்து வந்தார். விடை தெரியாது என்று அர்த்தம் அல்ல. தன்னை அறிந்த ஒரு மகோன்னத பரவச நிலையில் இத்தகைய கேள்விகள் சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றலாம். அல்லது கேள்விகளே மறைந்து விடலாம். அதே போல ஞானம், பக்தி, பரவசம் இத்தகைய நிகழ்வுகளை அறிவியல் அல்லது இயற்பியல் மூலம் விளக்க முடியுமா என்றும் ஆராய்சிகள் நடந்து  வருகின்றன. மூளையில் சில நியூரான்கள் தூண்டப்படுவதன் மூலம் இன்பம் துன்பம் இவை உணரப்படுகின்றன என்றால் நியூரான்களின் உள்ளே என்ன நடக்கிறது? (குவாண்டம் நிலையில்) சுவை என்பது என்ன ? சுவை உண்மையில் சர்க்கரையில் இருக்கிறதா அல்லது நாக்கில் இருக்கிறதா? சர்கரையின் அணுக்களும் நாக்கில் உள்ள செல்கின் அணுக்களும் நடத்தும் பரிமாற்றங்கள் தான் சுவையாக உணரப்படுகின்றதா? வாசம் என்பது மலரிலா?நாசியிலா ? அல்லது மலரும் நாசியும் நடத்தும் வினையிலா? பிரபஞ்சத்தில் எல்லாமே அணுக்களின் திருநடனம் தானா?  

உதாரணமாக இயற்பியல், விசைகளை துகள்களின் இடையறாத பரிமாற்றம் என்கிறது.அணுவின் கருவுக்குள்ளே நியூட்ரான்களும் ப்ரோட்டான்களும் பிணைத்து வைக்கப்பட்டுள்ளன என்று தெரியும். ஒரே மின் சுமை கொண்ட ப்ரோட்டான்களை ஒன்றை ஒன்று விலகி ஓடிவிடாமல் ஒட்டி வைத்திருப்பது வலிய விசை எனப்படும் ஒரு விசை.ஆனால் இந்த விசை துகள்கள் மிக மிக அருகில் இருக்கும் போது மட்டுமே செயல்படுகிறது. விண்மீன்களில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள் (ப்ரோட்டான்கள்) இணைந்து ஒரு ஹீலியன் அணுக்கரு (இரண்டு  ப்ரோட்டான் இரண்டு  நியூட்டரான்) உருவாகி அதன் விளைவாக நமக்கு ஆற்றல் கிடைக்கிறது. இதை நாம் அணுக்களின் பரிமாற்றங்கள் மூலம் விளக்க இயலும். 

நட்சத்திரங்களின் ஆற்றலுக்குக்காரணம் அதன் உள்ளே நடக்கும் அணுக்கரு இணைவு என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் ஒரு புதிர் நிலவியது.
சூரியன் போன்ற ஒரு மிடில் சைஸ் நட்சத்திரத்தின் வெப்பநிலை இரண்டு ப்ரோட்டான்களை மிக மிக அருகே வரவைத்து ஒட்டிக் கொள்ள வைக்கப்
போதுமானதாக இல்லை என்று கணக்கிடப்பட்டது. (ப்ரோட்டான்கள் ஒன்றை ஒன்று விலக்கும் என்பதால் )எனவே இந்த வினையில் W -போசான் என்ற துகள் பங்குபெறுவதாக அனுமானிக்கபட்டது.ப்ரோடானின் உள்ளே உள்ள மேல் குவார்க் (UP QUARK ) ஒன்று W -போசான் என்ற (நிலையற்ற) துகளை உமிழ்ந்து கீழ் குவார்க் என்ற மற்றொரு அடிப்படைத் துகளாக மாறுகிறது.எனவே ப்ரோடான் நியூட்ரானாக மாற்றப்பட்டு ,இந்த நியூட்ரானும் மற்றொரு ப்ரோடானும் இணைந்து[
நியூட்ரான் மின்சுமை அற்றது என்பதால் எளிதில் ப்ரோடானுடன் இணைகிறது ] 'டியூட்ரான்' என்ற இடைநிலை தனிமம் உருவாகிறது. வினையில் வெளிப்பட்ட W -போசான்  நிலையற்றதாகையால் சிதைந்து ஒரு பாசிட்ரான் மற்றும் நியூட்ரினோ துகள்கள் கிடைக்கின்றன.[சூரியனில் இருந்து வெளிப்படும் அதிவேக நியூட்ரினோ துகள்கள் இப்படி தான் உருவாகின்றன]. மீதமிருக்கும் பாசிட்ரான் தன் எதிர் இணையான எலக்ட்ரானுடன்  இணைந்து அழிந்து ஆற்றல் (ஒளி)வெளிப்படுகிறது. டியூட்ரான் என்ற இடைநிலைத் தனிமம் மீண்டும் ஒரு ப்ரோடானுடன் இணைந்து ஹீலியம் உருவாகிறது. இப்படிப்பட்ட துகள்களின் இடையறாத பரிமாற்றங்களால் விசைகள் உணரப்படுகின்றன. துகள்கள் பரிமாற்றப்படும் போது ஏற்படும் நிறை இழப்பு ஆற்றலாக வெளிப்படுகிறது. இந்த துகள் வினைகள் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளன.[[குறிப்பு : சூரியனை விட மிக அதிக வெப்பநிலை கொண்ட விண்மீன்களில் இந்த களேபரம் எதுவும் இன்றி நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் வெறுமனே இணைந்து ஒரு ஹீலியம் உருவாகி ஆற்றல் வெளிப்படுகிறது.]



 


இவை எல்லாவற்றுக்கும் மேலாக விழிப்புணர்வு Consciousness என்பது என்ன?அதுவும் இயற்பியல் விளைவு தானா?உதாரணமாக உங்கள் உடலில் பில்லியன் கணக்கில் அணுக்கள் இருக்கலாம் . அவைகளுக்கெல்லாம் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்குமா? எல்லாம் சேர்ந்ததும் நான் என்ற உணர்வு எப்படி உங்களுக்கு வருகிறது?

இங்கே இரண்டு கேள்விகள்.

* பிரபஞ்சம் ஏன் இருக்கிறது?
* பிரபஞ்சம் ஏன் 'இப்படி' இருக்கிறது?


பிரபஞ்சம் ஏன் இருக்கிறது? என்பது தத்துவ வேதாந்த விசாரம். அதை விட்டு விடுவோம்.



ஜென் ஞானி ஒருவரிடம் சீடன் ஒருவன் கேட்கிறான்.
'குருவே, பிரபஞ்சத்திலேயே அதிசயமான விஷயம் என்ன?'
'நான் இங்கே உன் முன்னே உட்கார்ந்திருக்கிறேனே அதுதான்' ...

புரிகிறதா?



பிரபஞ்சம் ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு anthropic தத்துவத்தை விளக்கம் சொல்கிறார்கள். YOU ARE HERE என்ற போர்டை பல கட்டிடங்களில் பார்த்திருப்பீர்கள். அதை நாம் படிக்கும் போது நாம் இங்கே இருக்கிறோம் என்று இந்த போர்டுக்கு எப்படித் தெரிந்தது ??? என்று நினைக்கலாம். நாம் அங்கு இருப்பதால் தான் you are here என்று படிக்க முடிகிறது.அதே போல பிரபஞ்சம் ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பிரபஞ்சம் இப்படி இல்லை என்றால் (பிரபஞ்சம் ஏன் இப்படி இருக்கிறது என்ற) கேள்வி கேட்க நீயே இருக்க மாட்டாய் என்று சொல்லி குழப்புவது!


சரி.

இந்தப் பதிவில் மட்டும் நாம் எலக்ட்ரான், குவார்க் ,நியூட்ரினோ, போட்டான் ,W போசான் என்று நிறைய அடிப்படைத்துகள்களை பார்த்தோம்.ஏன் இத்தனை அடிப்படைத் துகள்கள் இருக்கின்றன?ஒன்றே ஒன்று அல்லது இரண்டு இருந்தால் போதாதா? ஏன் இத்தனை வெரைட்டி?ஒவ்வொன்றுக்கும் வேறு நிறை, வேறு சுழற்சி (SPIN ) வேறு நிறம்? வேறு பண்புகள்? வேறு மின்சுமை? இவற்றுக்கு விடையாக எல்லாத் துகள்களையும் ஒரு பொதுவான பொருளின் பண்பாக 
விளக்கும் முயற்சி தான் ஸ்ட்ரிங் தியரி.

சமுத்ரா

Friday, September 7, 2012

கலைடாஸ்கோப்-72

லைடாஸ்கோப்-72 * உங்களை வரவேற்கிறது

X

பாடல்களை சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள அந்தக் காலத்தில் அந்தாதிகளை எழுதினார்கள் . அதாவது ஒரு செய்யுள் முடியும் சொல்லை முதலாவதாக வைத்துக் கொண்டு அடுத்த செய்யுளை ஆரம்பிப்பது. கடைசி பாடலின்
கடைசி சொல்லை முதல் பாடலின் முதல் சொல்லோடு ஒரு மாலை போல கட்டி முடிப்பது.புகழ் பெற்ற சில அந்தாதிகள் கம்பரின் சரஸ்வதி அந்தாதி,அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி போன்றவை.

மயிலே குயிலே என்று காதலியை மட்டும் அல்ல இறைவியையும் வர்ணிக்கலாம் . கம்பர் இவ்வாறு பாடுகிறார்.

மயிலேமடப் பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூர் இருட்கோர்
வெயிலே நிலவெ
ழு மேனி மின்னே இனிவேறு தவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே


மனக் கூர் இருட்கோர் வெயிலே! என்ன ஒரு பிரயோகம்...இருளுக்கு அவள் வெயிலாம்! (வெய்யில் என்பது தவறு வெயில் என்பதே சரி) .அடுத்த பாடல் பாதங்கள் என்று ஆரம்பிக்கிறது.(பாதாம்புயத்திற் பணிவார் தமக்கு)

இவரும் தன் இறைவியை கிளி என்கிறார். அபிராமி பட்டர் கொஞ்சம் பெருத்தன கருத்தன என்றெல்லாம் naughty -ஆகப் பாடி இருக்கிறார். அதை விட்டு விடுவோம்.

கிளியே கிளை
ர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!
(அடுத்த பாடல் அதிசயம் என்று தொடங்கும்)

ஒளிரும் ஒளிக்கு இடமே
! கொஞ்சம் இயற்பியல் வருவது போல இருக்கிறது (ஆரம்பிச்சுட்டான்யா!) ஒளி எப்படிப் பரவுகிறது?
ஒளிக்கு இடம் தருவது எது?என்று விஞ்ஞானிகள் குழம்பி வருகிறார்கள். வெளியின் ஐந்தாவது பரிமாணத்தில் பரவலாம் என்று யோசித்து வருகிறார்கள். ஒருவேளை கடவுள் தான் ஒளிக்கு ஊடகமோ?

எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே! ஒன்றும் இல்லாததும் எல்லாமுமாக இருப்பதும் கடவுள்! வெளிமுதல் பூதங்கள் என்பதை வெளி முதலான பஞ்ச பூதங்கள் அல்லது வெளியை முதலாய்க் கொண்டு உதித்த பூதங்கள் என்றும் கொள்ளலாம். பூதங்கள் எல்லாம் ஒன்றுமற்ற வெளியில் இருந்தே பிறந்தன என்கிறாரோ ?

அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே! -பக்தன் எந்த அளவோ பகவானும் அந்த அளவு. எந்த மாத்ரமுன எவ்வரு தலசின அந்த மாத்ரமே நீவு!நீ கடவுளை கல்யாண ப்ரோக்கராகப் பார்த்தால் அவன் கல்யாண ப்ரோக்கர் தான் என்ன செய்வது? என்கிறார் அன்னமாச்சாரியார்.

சரி.

அபிராமியின் குண்டலம் நிலவு போல பெரிதாய் ஒளிர்ந்தது என்றால் அப்போது அவளின் காது எவ்வளவு பெரிதாய் இருக்க வேண்டும்? அவள் எவ்வளவு பெரியவளாய் இருக்க வேண்டும்? அப்படிப்பட்ட ஒரு உருவம் அறிவியல் ரீதியில் சாத்தியமா?

சின்ன வயதில் பாட்டி பாட்டு சொல்லித் தருவாள்:-

எழுதிக்கோ. மருகேலரா ஒ ராகவா...
.
..
சூர்ய சுதாகர லோசனா..

அக்கா இடையில் வந்து ' பாட்டி , ஒரு நிமிஷம், உண்மையிலேயே பகவானோட கண்ணு சூரியன் சந்திரன் மாதிரி இருக்குமா?'என்பாள்.

பாட்டி 'அதெல்லாம் ஒரு உபமானம் டி ' என்பாள்.

'அதெப்படி?? சந்திரன் சூரியனை விட ரொம்ப சின்னது...ஒரு கண்ணு பெருசா ஒரு கண்ணு சிறுசா இருந்தா நல்லாருக்குமா?'

'இங்கேயிருந்து பார்கறப்ப ரெண்டும் ஒரே சைசில் தானே இருக்கு'

'போ பாட்டி உனக்கு சயின்சே தெரியலை'

'அதில்லைடி,,, இதுக்கெல்லாம் நேரடி அர்த்தம் எடுத்துக்கக்கூடாது..சூரியன் சந்திரன் போன்ற கண்ணு அப்படீன்னா பகவான் ஒரே சமயத்துல பக்தர்கள் மேல சந்திரன் போல இதமாகவும் அதே சமயம் ராட்சசர்களுக்கு சுட்டெரிக்கும் சூரியன் போலவும்
இருப்பான்' ன்னு அர்த்தம் பண்ணிக்கணும்...

பாட்டியின் இந்த அறிவுக்குக் காரணம் அவள் வயது.

XX

வயதாகிறதே என்ற கவலை பட்டினத்தாரில் இருந்து பக்கத்து வீட்டு பத்மநாபன் மாமா வரை எல்லாரையும் ஆட்டிப் படைத்துள்ளது.

வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு
வயதுமுதிர்ந்து
நரைதிரை வந்து
வாதவிரோத
குரோதம் அடைந்து -என்று பட்டினத்தாருக்கு தத்துவார்த்த கவலைகள் என்றால் பத்மநாபன் மாமாவுக்கு ரிட்டையர் ஆனதும் பென்சன் கிடையாதே,,எப்படி காலம் தள்ளுவது? என்ற கவலை ....சரி.

மனித உடலின் வடிவமைப்பின்படி அது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்கிறார்கள் வி
ஞ்ஞானிகள். வயதாவதற்கு உயிரியல் காரணங்கள் எதுவும் இல்லையாம். பின்னே நமக்கு ஏன் வயதாகிறது? இயற்கையின் வஞ்சனைகளில் இதுவும் ஒன்று. வயதாகி செத்துப் போ என்ற செய்தி நம் ஜீன்களிலேயே எழுதப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து வருகிறார்கள். உயிரியல் விஞ்ஞானிகள். எந்திரன் ரஜினிகாந்த் போல எப்போதும் இளமையாக இருக்கும் சிலரிடம் ஜீன் ஆராய்சிகள் செய்து வருகிறார்கள். Aging ஜீன்களைத் தேடும் வேலை கடற்கரை மணலுக்கிடையே கடுகைத் தேடுவது போல என்கிறார்கள். (அதானே? சுலபமாக வைத்தால் மனிதன் அதைக் கண்டுபிடித்து ஹிரண்யகசிபு போல அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விடுவான்!) .

வயதாவதற்கு பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை Free radical கொள்கை. இதன்படி நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமாக கருதப்படும் ஆக்ஸிஜனே நமக்கு எமனாக மாறி நம்மை தாத்தா பாட்டி ஆக்குகிறது.அமுதமே விஷம்! இரும்பு துருப்பிடிப்பது போல வெள்ளி கறுத்துப் போவது போல ஆக்சிஜனால் நம் செல்கள் மெல்ல மெல்ல சேதாரம் அடைகின்றன. அதாவது நம் செல்களிலும் துருப்பிடிக்கிறது.

எனவே சில
விஞ்ஞானிகள் ஆழமாக மூச்சு விடுவது சிறந்தது அல்ல என்கிறார்கள். உள்ளே செல்லும் ஆக்சிஜன் நமக்கு நல்லது செய்து கொண்டே சைக்கிள் கேப்பில் free radical என்ற ஒன்றை உருவாக்கி விடுகிறது.இவை தங்களுடைய எலக்ட்ரான் தேவையை பூர்த்தி செய்ய பக்கத்தில் சிவனே என்று இருக்கும் செல்களை தொந்தரவு செய்கின்றன. படிப்படியாக எலக்ட்ரான்களை இழக்கும் செல்கள் தங்கள் கட்டமைப்பை இழந்து மறுபடியும் புணரமைக்கமுடியாதபடி சேதமடைந்து விடுகின்றன. சில நேரங்களில் செல்களே Free radicals ஆக மாறி மற்ற செல்களை சேர்த்துக் கொண்டு கண்டபடி வளர்ந்து புற்றுநோயாக உருவாகிறது.antioxidant களை உட்கொள்வதன் மூலம் வயதாவதை ஓரளவு தாமதம் செய்யலாம். வைட்டமின் ஏ, ஈ, மற்றும் சி இவைகளில் இது இருக்கிறது.டீ கூட ஆண்டி ஆக்சிடன்ட் என்கிறார்கள்.சரி.

பக்கத்து வீட்டு மாமாவுக்கும் மாமிக்கும் ஒரே வயதில் தான் கல்யாணம் நடந்தது. இப்போது மாமி இன்னும் மினுமினுப்பாக இருக்க மாமா வத்திப் போன கொத்தவரங்காய் போல ஆகி விட்டாரே என்று கேட்டால் அதற்கு பெண்களின் உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.எனவே மாதவிலக்கு நிற்கும் வரை பெண்கள் வேகமாக வயதாவதில் இருந்து இயற்கையாகவே காக்க
ப்படுகிறார்கள். (சந்ததிகளை தன் உடம்பில் வைத்து உருவாக்கித் தருவதால் பெண்களுக்கு இயற்கையே கொடுத்த சலுகை! ஆண்களைப் பார்த்து அஸ்கு புஸ்கு, நீ சும்மா ஆரம்பிச்சு தானே வைத்தாய்? என்கிறது இயற்கை) ஆண்களோ கல்யாணம் ஆன மறுநாளில் இருந்தே அப்பா ஆவதற்கு தயார் ஆகிறார்களோ இல்லையோ 'அங்கிள்' ஆவதற்குத் தயார் ஆகி விடுகிறார்கள்.

இன்னொரு ஆச்சரியமான தகவல்: அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பவர்கள் நீண்ட நாள் வாழ்வார்களா
ம். மணிக்கொருதரம் பிரிஜ்ஜை திறந்து எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கும் போது உங்கள் இஞ்சின் அதிக வெப்பத்தை வெளியிடுகிறது. இந்த வெப்பமே உங்கள் செல்களை அரித்து விடுகிறது. ஆக்சிஜன் நன்றாக எரிந்து மேலும் அதிக free radicals ஐ தோற்றுவிக்கிறது.சில பேர் உயிர்வாழ்வதே சாப்பாட்டுக்கு தான். இப்படி பட்டினி கிடந்து நீண்ட நாள் வாழத்தான் வேண்டுமா? பஜ்ஜி போண்டா வடை மிக்சர் ஜிலேபி மைசூர்பா இதெல்லாம் சாப்பிடாமல் தொண்ணூறு வயது வரை இருந்தென்ன லாபம் என்பார்கள்.

தண்டவாளத்தில் அடுக்கிய காசுகளை ரயில் எவ்வாறு சிதைக்கிறதோ அப்படி காலம் நம்மை சிதைத்து விடுகிறது என்பார் சுஜாதா.
..
...
கால ரயிலோட நாமெல்லாம் காசானோம்
வாலிபம் போய் ஆச்சே வயசு!


- தத்துவக் கவிதைகளிலும் அழகு தமிழ்!

XXX

தமிழில் கோவை தமிழ், திருநெல்வேலி தமிழ், மதுரைத் தமிழ், சென்னை செந்தமிழ் என்று இருப்பது போல சமயத்தமிழ் என்றும் இருக்கிறது போல.கீழே உள்ளவை மூன்று வெவ்வேறு சமயத்துக்கு உண்டான தமிழ்கள்:

"பாபியான துரியோதனன் திரௌபதியை ஸ்த்ரீஹரணம் செய்து சபைக்கு அழைத்துவரும்படி ஆணையிட்டான். சேவகன் சென்று அவள் தான் அகத்துக்கு விலக்காய் இருக்கிறேன் என்றியம்பியதையும் சட்டை செய்யாது அவளை பலவந்தமாய் சபைக்கு கொணர்ந்தான். சபையில்
திரௌபதி பெரியோர்களை பார்த்து நமஸ்கரித்து ஹே பண்டிதர்களே பீஷ்மரே த்ரோணரே உங்கள் கண்முன்பே உங்கள் புத்ரி போலிருக்கும் மாதொருத்திக்கு அபமானம் நேர்கையில் அதைக் கண்டும் வாளாயிருக்க வேணும் என்று உங்கள் சாஸ்திரங்கள் இயம்புகின்றவோ என்று வினவினாள். இப்போது பாபியான துச்சாதனன் அவள் வஸ்திரங்களைப் பற்றிக் களையலானான். மனுஷ்யர்களால் தனக்கினி உபகாரம் இல்லை என்றுணர்ந்த அப்புனித நாரி மேலே நோக்கி அச்சுதனை ஸ்துதி செய்யலுற்றாள் .ஹே கோபாலா, ஜகத் ரட்சகா, பக்த வத்சலா, ஹரே, அபலை எனக்கு நேர்ந்த இந்த அபமானத்தை நீயே அகற்றியருளல் வேண்டும் பிரபோ என்று பல விதங்களில் ஸ்துதித்து பின் கைகளிரண்டையும் சிரமேல் உயர்த்தி கோவிந்தா என்னு மூர்சையில் விழலானாள். அப்போது சபையிற் தோன்றிய ஸ்ரீயப் பதியான பகவான் தன் கருணையினால் திரௌபதிக்கு விதவிதமாக வஸ்திரங்கள் தொடர்ந்து வரும்படிக்குப் பணித்தார். வஸ்திரங்களை உரிய சக்தி அற்றுப் போய் துச்சாதனன் மூர்ச்சித்து விழுந்தான். சபையில் இருந்தோர்கள் மற்றும் பாண்டவர்கள் ஹே கிருஷ்ண ஹே மாதவ என்று பலவிதங்களிலும் பகவானை நமஸ்கரித்தனர்"

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப் பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.
எபேசியர் 2:8-9

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
பேதுரு 1:3

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை
விளங்கப்பண்ணுகிறார் .
ரோமர் 5:8



‘அவளும், அவளுடைய சமுதாயத்தினரும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன். அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை’ வானங்களிலும்,பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும், இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீஙகள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா? ‘



இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடுரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது தான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

XXXX

கூறு நண்பனே,
இசை உனக்கு இனிக்காது என்கிறாய்
இலக்கியங்கள் என்றாலே
அலர்ஜி என்கிறாய்
புத்தகங்களைப் புரட்டும்
பழக்கமே இல்லை என்றாய்
கவிதைக்கும் உனக்கும்
காத தூரம் என்கிறாய்
குழந்தைகளுடன் விளையாட்டு
காலவிரயம் என்கிறாய்
-பிறகு
தினந்தினமும்
அவசர வாழ்வில்
அடிபட்டு துவண்ட மனதை
எப்படித்தான்
ஆசுவாசம் செய்வாய்?


* என் பிம்பம் எங்கோ
எதிரொளித்துக் கொண்டே இருக்கிறது
நான் அறியாமலேயே
தூரத்து காரின் கன்னாடியிலேயோ
சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரிலேயோ
சைக்கிள் காரன் கொண்டுசெல்லும்
சில்வர் பாத்திரத்திலோ
பாப்பாவின் உடையில் இருக்கும்
குட்டிக் குட்டி
கண்ணாடிகளிலேயோ
தொலைவில் உள்ள கட்டிடத்தின்
தூங்கும் ஜன்னலிலோ
நான் அறியாமலேயே
என் பிம்பம் எங்கோ
எதிரொளித்துக் கொண்டே இருக்கிறது
எப்படியோ

XXXXX


எப்படி கடவுளை சிரிக்க வைப்பது? அவரிடம் உங்கள் எதிர்கால திட்டங்களைக் கூறுங்கள் - உட்டி ஆலன்

உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி. காலம் பறக்கிறது. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி..நீங்கள் தான் அதன் பைலட் - மைக்கேல் ஆட்சலர்

விளையாட்டை விளையாடுபவர்களை விட அதன் பார்வையா
ர்களே அதைத் தெளிவாகப் பார்க்கிறார்கள் - சீனப் பழமொழி

எல்லாரும் ஒருவிதத்தில் நிலாவைப் போன்றவர்கள். தங்கள் இருண்ட பக்கத்தை யாருக்கும் காட்டாமல் வைத்திருக்கிறார்கள் - மார்க் ட்வைன்

வாழ்வை விட மரணமே பொதுவானது. ஏனென்றால் எல்லாரும் சாகிறார்கள். ஆனால் எல்லாரும் வாழ்வதில்லை - சார்ஸ்

எங்கே செல்கிறோம் என்ற இலக்கு இல்லாதவர்கள் பாதை தவறுவதே இல்லை - ஹெர்ப் கோஹென்

பூனைகளுடன் கழித்த நேரங்கள் ஒருபொழுதும் வீணாக்கப்படுவதில்லை - கோலேட்

புத்திசாலி ஒரு பிரச்சனையை தீர்க்கிறான். ஞானியோ அதை விட்டு விலகி இருக்கிறான் - ஐன்ஸ்டீன்

நாம் நம் பாவங்களால் தண்டிக்கப்படுகிறோம். பாவங்களுக்காக அல்ல -
ஹபார்ட் ,எல்பர்ட்

XXXXXX

எல்பர்ட் ஆஸ்பத்திரி ஒன்றில் கண் விழித்தான்.

அங்கே வந்த டாக்டர் அவனைப் பார்த்து ' எல்பர்ட், குட் மார்னிங்.உனக்கு நான் ஒரு கெட்ட செய்தி மற்றும் ஒரு நல்ல செய்தி சொல்ல வேண்டும்.எதனை முதலில் சொல்லட்டும் ? என்று கேட்டார்.

கலவரமடைந்த எல்பர்ட் "கெட்ட செய்தியை முதலில் சொல்லுங்க டாக்டர்" என்றான்.

"உன் கால்கள் இரண்டையும் ஆபரேஷன் செய்து எடுத்து விட்டோம்"

"ஓ மை காட்! அப்படியானால் நல்ல செய்தி?"

"பக்கத்து படுக்கையில் இருப்பவர் உன் ஷூ-க்களை விலைக்கு வாங்க விரும்புகிறார்"


ஓஷோ சொல்கிறார் : சிரிப்பு என்பது தெய்வீகத்தின் பாடல்.




Tuesday, September 4, 2012

எமிலி டிகின்ஸனின் காதல் கவிதைகள்

நீங்கள் காதல் கவிதை எழுதி இருக்கிறீர்களா? கண்டிப்பாக எழுதி இருப்பீர்கள். மானே தேனே என்றெல்லாம் கமலஹாசன் லெவலுக்கு எழுதி இருக்காவிட்டாலும் I MISS U என்று அர்த்த ராத்திரியில் போர்வையின் கீழிருந்து அனுப்பும் எஸ்.எம்.எஸ். கூட ஒருவகையில் கா.கவிதை தான் ...

சங்க காலத்தில் பெண்கள் எழுதிய காதல் கவிதைகளே செறிந்திருந்தன.தலைவனுக்கு ரொமாண்டிக் ஆக யோசித்து காதல் கவிதைகள் எழுதுவதற்கு நேரம் இருக்கவில்லை.அவனுக்கு போர்கள் இருந்தன. திரைகடல் ஓடி பொருள் சேர்க்கும் அவசியம் இருந்தது. தலைவி வீட்டில் சும்மா தான் இருந்தாள். டி.வி யோ , ஃபேஸ்புக்கோ, நாளைக்கு துளசி புருஷனுக்கு கோ
ர்ட்டில் என்ன தீர்ப்பு வரும் என்று வாழ்வை சுவாரஸ்யமாக்கும் மெகா சீரியல்களோ இல்லை.எனவே அவள் தலைவனை எண்ணி கவிதை எழுத ஆரம்பித்தாள். தான் அம்மா வீட்டில் எப்படி காலத்தை கழித்தேன், (தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும் சிற்றில் இழைத்தும், சிறுசோறு குவைஇயும் என்றெல்லாம் )என்ன விளையாடினேன், தலைவனை எங்கு எப்போது முதன்முதலில் பார்த்தேன், எப்படி இருவருக்கும் காதல் மலர்ந்தது, தலைவனின் நாடு எப்படி இருந்தது,(மானுண்டெஞ்சிய கழலி நீர்) இப்போது தலைவன் இல்லாததால் எப்படி தவிக்கிறேன் என்பதையெல்லாம் விலாவாரியாக கவிதைகளில் சொன்னாள்.

இடைக்காலத்தில் எப்படியோ இந்த காதல் கவிதைகளை பெண்களிடம் இருந்து ஆண்கள் பிடுங்கிக் கொண்டார்கள். போர்கள் மறைந்தன.
அறிவியல் வளர்ந்தது.Work from home எல்லாம் வந்து விட்டது.எனவே ஆண்கள் பொழுது போகாமல் காதல் கவிதை எழுத ஆரம்பித்தார்கள். ஆண்களின் இந்த கவிதை எழுதும் வெறி,இப்போது யொய் திஸ் கொலவெறி என்ற அளவில் வந்து விட்டிருக்கிறது. என்னதான் இருந்தாலும் பெண்களின் காதல் கவிதைகள் போன்று ஆண்களுடையது அவ்வளவு ஆழமாக இருப்பதில்லை. பெண்களின் உணர்வுகள் மென்மையானவை. ஒரு பெண் தன் உணர்வுகளை,தன் காதல் தவிப்புகளை, ஆதங்கங்களை, வெளிப்படையாக சொல்லிவிட முடியாது. சொல்லக் கூடாது என்று இல்லை. அவளது biology அப்படி இருக்கிறது. ஆண் ஒருவன் ஒரு பெண்ணை கலவிக்கு நேரடியாக அழைக்கலாம். ஆனால் பெண் அது தன் கணவனாகவே இருந்தாலும் அதை பூடகமாகத் தான் உணர்த்த வேண்டும். மல்லிகைப்பூ , அவனுக்கு பிடித்த பெர்பியூம், அவனருகில் சென்று நின்று கொண்டு ஒரு அசட்டுப்புன்னகை இப்படி...அப்படி சொன்னால்தான் அழகு. இப்போது சில பெண்கள் புரட்சி, முன்னவீனத்துவம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு முலை, புணர்ச்சி, குறி என்றெல்லாம் எழுதத் தலைப்பட்டுள்ளார்கள். கவிதைகளில் எப்போதாவது ஸ்ட்ரெஸ் செய்ய இவைகளை உபயோகிக்கலாம். (ஆண்டாள் மாதிரி) இவைகள் தான் கவிதை என்று இருந்துவிடக் கூடாது.அப்படிப்பட்ட கவிதைகள் படிக்க அருவருப்பை மட்டுமே தருகின்றன.

இப்போது எமிலி டிகின்சனின் சில காதல் கவிதைகளைப் பார்க்கலாம். என்னால் இயன்ற அளவு மொழிபெயர்த்துள்ளேன். எமிலியின் கவிதைகள் குறிப்பாக காதல் கவிதைகள் புரிந்து கொள்ள கடினமானவை. காதல் கவிதைகளை எல்லாருக்கும் புரியும்படி எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அது நம்முடைய சொந்த உணர்
ச்சிகளின் வெளிப்பாடு. அதனால் என்ன வெளிப்படுத்துகிறோம் என்று அந்த உணர்வு நமக்கு மட்டும் புரிந்தால் போதுமானது. எமிலியின் கவிதைகளைப் படிக்கும் போது நம்மால் அவளுடைய ஒரிஜினல் உணர்வுகளை கொண்டுவரவே முடியாது. மேலும் அதை மொழி பெயர்க்கும் போது அது இன்னும் நீர்த்துப் போகிறது. I held a jewel in my fingers என்பதை 'விரல்களில் ஏந்தினேன் வைரம் ஒன்றை' என்று ஓரளவு தமிழில் கவிதை form -க்கு பெயர்க்கலாம். ஆனால் அவள் எதை நினைத்து இதை எழுதினாள் என்பதை நம்மால் மீண்டும் கொண்டுவரவே இயலாது.

சரி, பிறகு எதற்கு வேலை மெனக்கெட்டு மொழி பெயர்க்கிறாய், show off ?என்று நீங்கள் கேட்கலாம் அல்லது நினைக்கலாம். I dont know .
'ரெண்டுல தான் ஒன்னைத் தொட வரவா' 'டாடி மம்மி வீட்டில் இல்லை' 'மஞ்சக்காட்டு மைனா' 'வச்சுக்கவா வச்சுக்கவா 'போன்ற இலக்கியத் தரம் மிக்க தமிழ் கவிதைகளை கேட்டுக் கேட்டு ஒன்பதாவது மேகத்தில் இருக்கும் உங்கள் காதுகளை சற்றே பூமிக்கு இறக்கும் முயற்சி அந்தே.

**********

HEART, we will forget him!

மனமே, அவனை மறப்போம்

HEART, we will forget him!
You and I, to-night!
You may forget the warmth he gave,
I will forget the light.

When you have done, pray tell me,
That I my thoughts may dim;
Haste! lest while you’re lagging,
I may remember him!



மனமே, அவனை மறப்போம்
நீயும் நானும் இன்றிரவே!
நீ அவன் வெம்மையை மற
நான் அவன் ஒளியை மறப்பேன்

நீ முடித்ததும் எனக்கு சொல்
எனவே என் எண்ணங்கள் மங்கும்
சீக்கிரம் ! நீ தாமதம் செய்தால்
அதுவரை மனதில் அவன் நினைவுகள் தங்கும்!

**********

“GOING to him! Happy letter!
அவனை அடைகையில் கடிதமே சொல்வாய்

“GOING to him! Happy letter! Tell him—
Tell him the page I didn’t write;

அவனை அடைகையில் கடிதமே சொல்வாய்
இதை நான் எழுதவே இல்லை

“Tell him night finished before we finished,
And the old clock kept neighing ‘day!’
And you got sleepy and begged to be ended—
What could it hinder so, to say?
Tell him just how she sealed you, cautious,
But if he ask where you are hid
Until to-morrow,—happy letter!
Gesture, coquette, and shake your head!”

நாம் முடிக்கும் முன்பே
இரவு முடிந்தது
காலை வந்ததென கடிகாரம் கடிந்தது
தூக்கம் மேலிட சீக்கிரம் முடிப்பாய் -
என
தடையாய் நீதானே
இடையில் மொழிந்தது ?
உன்னை கவனமாய் உரையிட்டேன் என்றுரை
ஒளிந்து கொண்டாய் எங்கே? என்பான்
நாளை வரும்வரை என் நல்ல கடிதமே
நடி, பசப்பு, உன் தலையினை குலுக்கு !

*************

THE MOON is distant from the sea,
நிலவு கடலுக்கு நீண்ட நெடு தூரம்

THE MOON is distant from the sea,
And yet with amber hands
She leads him, docile as a boy,
Along appointed sands.

Oh, Signor, thine the amber hand,
And mine the distant sea,—
Obedient to the least command
Thine eyes impose on me.

நிலவு கடலுக்கு நீண்ட
நெடு தூரம்
ஆயினும் அதன் கரமோ
மின்சாரம்
அவன் அவளை வழிநடத்திடுவான்
அகன்றதொரு மணல்வெளியோரம்

மன்னா, உமதோ மின்சாரக் கைகள்
மங்கை யானோ தொலைவின் ஆழி!
அசைவிற்கெல்லாம் நான் ஆட்படுவேன்
ஆட்கொண்டதென்னை அய்யா நின் விழி!

************

MY river runs to thee:
நின்னிடமே ஓடுகிறது என் நதி


MY river runs to thee:

Blue sea, wilt welcome me?

My river waits reply.
Oh sea, look graciously!

I ’ll fetch thee brooks
From spotted nooks,—

Say, sea,
Take me!

நின்னிடமே ஓடுகிறது என் நதி

நீலக்கடலே என்னை வரவேற்பாயா?
பதிலுக்காய்
பொறுத்திருக்கிறது நதி
கடலே, ஒரு பார்வை பார்ப்பாயா?
ஒவ்வொரு மூலையினின்றும் உனக்காய்
ஓடைகள் கொண்டு வந்தேன்
கடலே பேசு
என்னிடம் பேசு!


**********

I HIDE myself within my flower,
நான் என் மலருக்குள் ஒளிகிறேன்

I HIDE myself within my flower,
That wearing on your breast,
You, unsuspecting, wear me too—
And angels know the rest.

I hide myself within my flower,
That, fading from your vase,
You, unsuspecting, feel for me
Almost a loneliness.



நான் என் மலருக்குள் ஒளிகிறேன்
உன் மார்பில் மலர் சூடுகையில்
இயல்பாய் என்னையும் அணிவாய் நீ
எல்லாம் அந்த தெய்வங்கள் அறியும்

நான் என் மலருக்குள் ஒளிகிறேன்

உன் பூந்தொட்டியில் இருந்து விழுகிறேன்
நான் விழுவதை நீ உணர்வாயா
ஆக்கிரமிக்கும் மௌனத்தினை?

************


I ENVY seas whereon he rides,
அவன் உலவும் கடலினைக் கண்டு

I ENVY seas whereon he rides,
I envy spokes of wheels
Of chariots that him convey,
I envy speechless hills

அவன் உலவும் கடலினைக் கண்டு -நான்

அசூயைப்படுகிறேன்
அவனை சுமந்து செல்லும் தேரின்
ஆழியின் ஆரங்களைக் கண்டும்!
அமைதியான மலைகளைக் கண்டும்!

That gaze upon his journey;
How easy all can see
What is forbidden utterly
As heaven, unto me!

அவன் வலம்வரும் அழகின் காட்சி

அனைவருக்கும் தான் எத்தனை சுலபம்?
எனக்கு ஏன் அது கிட்டுவதில்லை
எட்டாத் தொலைவின் சொர்க்கம் போல?

I envy nests of sparrows
That dot his distant eaves,
The wealthy fly upon his pane,
The happy, happy leaves

அவன் கூரையினை அழகுசெய்யும்

கூடுகள் மீதும் எனக்கசூயை
அவன் ஜன்னல்கள் கடந்து செல்லும்
ஆனந்த இலைகள் மேல் பொறாமை!

That just abroad his window

Have summer’s leave to be,
The earrings of Pizarro
Could not obtain for me.

அவன் ஜன்னலுக்கு வெளியே

அழகாய் நகரும் கோடை
அது ஜொலித்திடும் அரசனின் குண்டலம் போலே
அது ஏன் எனக்கு வசப்படவில்லை?


I envy light that wakes him,
And bells that boldly ring
To tell him it is noon abroad,—
Myself his noon could bring,

அவனை எழுப்பும் ஒளியின் மீதும்

பகல் வந்ததென அவனிடம் புகலும்
மணிகளின் மீதும் எனக்கசூயை
ஏன் எனை அவனிடம் எடுத்துச் செல்லவில்லை?

Yet interdict my blossom

And abrogate my bee,
Lest noon in everlasting night
Drop Gabriel and me.

என் பருவத்தை தண்டித்து விடு

என் சந்திப்பை தவிர்த்து விடு
இடையின்றித் தொடரும் இரவில்
விடியல் என்னை மறந்து போகட்டும்!

***************

I HELD a jewel in my fingers
விரல்களில் ஏந்தினேன் வைரம் ஒன்றை

I HELD a jewel in my fingers
And went to sleep.
The day was warm, and winds were prosy;
I said: “’T will keep.”

I woke and chid my honest fingers,—
The gem was gone;
And now an amethyst remembrance
Is all I own.

விரல்களில் ஏந்தினேன் வைரம் ஒன்றை
பிறகு நான் படுக்கைக்கு சென்றேன்
காலையோ வெம்மை காற்றோ இனிமை
வைரத்தை நானே வைத்திடுவேன் என்றேன்
எழுந்து பார்த்தேன் வைரம் இல்லை
எந்தன் விரல்களை யானே வைதேன்-அது
விட்டுச் சென்ற நினைவுகள் உண்டு
வேறு எதுவும் என்னிடம் இல்லை.

*************

LOVE is anterior to life,
வாழ்வுக்கு முன்பும் காதல்

LOVE is anterior to life,
Posterior to death,
Initial of creation, and
The exponent of breath.

வாழ்வுக்கு முன்பும் காதல்

இறப்புக்கு பின்பும் காதல்

உயிருக்கு ஆரம்பம் காதல்

உயிர்மையின் சின்னம் காதல்

*********

FATHER, I bring thee not myself-எந்தாய், என்னை நான் கொணரவில்லை.

FATHER, I bring thee not myself,—
That were the little load;
I bring thee the imperial heart
I had not strength to hold.

The heart I cherished in my own
Till mine too heavy grew,
Yet strangest, heavier since it went,
Is it too large for you?

எந்தாய், என்னை நான் கொணரவில்லை.

ஏனெனில் அது மிக மிக சொற்பம்
இறுதியே அற்றதோர் இதயம் கொணர்வேன்
இங்கே அதன் கனமோ அபாரம்

நன்றாய் வளர்ந்து பெருக்கும் வரையில்

நானே அன்பில் வளர்த்ததோர் இதயம்
புதியது உனக்கிந்தப் புதிரான இதயம்
பெரிதாய் ஆனதோ புகல்வாய் எந்தாய் !

**********

IN lands I never saw நான் பார்க்காத நிலத்தில்

IN lands I never saw, they say,
Immortal Alps look down,
Whose bonnets touch the firmament,
Whose sandals touch the town,—

Meek at whose everlasting feet
A myriad daisies play.
Which, sir, are you, and which am I,
Upon an August day?

நான் இதுவரை பார்க்காத நிலத்தில்

நெடிய மலைகள் கீழே நோக்குமாம்
அதன் தலைப்பாகை ஆகாயம் தொடுமாம்
அதன்பாதுகைகள் புவியை வருடுமாம்

அழிவற்ற நின்னடியில் அற்பம் நானே

'அங்கே மலர்களின் ஆனந்த நடனம்
அற்புதமானதோர் அழகிய நாளிது
யார் நான் அன்பரே யாவர் நீவிர்?

************

WE outgrow love like other things

அன்பை விட்டு நாம் வளர்கின்றோம்

WE outgrow love like other things
And put it in the drawer,
Till it an antique fashion shows
Like costumes grandsires wore.

அன்பை விட்டு நாம் வளர்கின்றோம்

அதனை பரணில் அடைத்திடுகின்றோம்
பரணில் அகப்படும் பாட்டன் துணிபோல்
காதல் ஒருநாள் காணக் கிடைக்கும்!

*************

DOUBT me, my dim companion! என்னிடம் ஐயம் கொள்


DOUBT me, my dim companion!
Why, God would be content
With but a fraction of the love
Poured thee without a stint.
The whole of me, forever,
What more the woman can,—
Say quick, that I may dower thee
With last delight I own!

என்னிடம் ஐயம் கொள் என் துணையே

உன் அளவற்ற அன்பின்
சிறு பகுதியே போதும் என்று
சிந்தித்து விட்டான் அந்த இறைவன்
என் இருப்பு முழுதும் -ஆம்
எத்தனை தான் ஒருபெண் இயம்ப முடியும்?
விரைவாய் சொல், அந்த கடைசி மகிழ்வின்
பாத்யதையாவது எனக்குக் கிடைக்கும்.

**************

SaMuDrA


Monday, September 3, 2012

கலைடாஸ்கோப்-71

லைடாஸ்கோப்-71 உங்களை வரவேற்கிறது.


١
=


If you had to identify, in one word, the reason why the human race has not achieved, and never will achieve, its full potential, that word would be 'meetings.'

Dave Barry


'மனிதன் இன்னும் முன்னேறவில்லை என்பதற்கு இந்த மீட்டிங்குகள் தான் காரணம்' என்கிறார் ஒரு அறிர். ஒரு மேனேஜருடைய டைமில் ஐம்பது சதவிகிதம் மீட்டிங்குகளிலேயே கழிக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு சொல்கிறது (எந்த ஆய்வு என்று கேட்கப்படாது!). இந்த மீட்டிங்குகள் உண்மையிலேயே தேவை தானா, இவற்றால் ஏதாவது value -add இருக்கிறதா என்பது மேனேஜருக்கே தெரியுமா என்பது சந்தேகம் தான். டீம் மீட்டிங்-கினால் எனக்குத் தெரிந்து என்ன ஒரு நிச்சயமான நன்மை என்றால் சில பேரை இவர்கள் இன்னும் நம் டீமில் தான் இருக்கிறார்களா என்று அவ்வப்போது confirm செய்து கொள்ள அது உதவுகிறது. மேலும் டீம் மீட்டிங் -கின் போது தூக்கம் வராமல் இருக்க எதிர்வரிசை டீம்-மேட்டின் சுடிதாரில் எத்தனை கண்ணாடி சதுரங்கள் இருக்கின்றன என்றும் எண்ணலாம்.

மீட்டிங்- இற்கு சில Suggestion -கள்:

* மீட்டிங் வைக்கவில்லை என்றால் உயிர் போய் விடும் என்று இருந்தால் மட்டும் மீட்டிங் -இற்கு அழையுங்கள். இ-மெயில் இருப்பதால் தனி ஆட்களின் அப்டேட்களை
இ-மெயில் செய்து கேட்டுக் கொள்ளுங்கள்.

* மீட்டின்-கை எவ்வளவு சுருக்கமாக வைக்க முடியுமோ அவ்வளவு சுருக்கமாக வைத்து முடிக்கவும். அரைமணி நேரத்துக்கு மேலே போகும் மீட்டிங் சிறப்பானதல்ல.ஒரு மணிநேரம் முடிந்த பின்பும் இவர் எதற்கு மீட்டிங்-இற்கு அழைத்தார் என்று மற்றவர்கள் குழம்பும் படி நடந்து கொள்ள வேண்டாம்.

* எந்த மீட்டிங்கிலும் இரண்டு மூன்று பேர் இருப்பார்கள். இது தான் சாக்கு என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களை தாட்சண்யம் பார்க்காமல் Let's come to the point. we will discuss other things offline என்று மேனேஜர் சொல்லி விட வேண்டும்.

* இன்னும் சில பேர் கல்யாண மண்டபம் போல இரண்டு பேர் மூன்று பேர் கூடிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களையும் கறாராக Please tell your views to everyone என்று கண்டித்து வைக்கவும். சில பேர் மீட்டிங் என்றதும் குஷியுடன் சண்டை போட ரெடியாக வருவார்கள். அவர்களையும் அடக்கி வைப்பது பாவம் மேனேஜராகிய உங்கள் பொறுப்பு.

* மீட்டிங் இற்குப் போகும் முன் என்ன சொல்லப் போகிறோம் எதையெல்லாம் discuss செய்யப் போகிறோம் எதை முதலில் சொல்லப் போகிறோம்
யாரையெல்லாம் திட்டப் போகிறோம் என்று ஒரு Agenda வைத்துக் கொள்வது நல்லது. agenda வில் இல்லாத விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்கவும். கடைசியில் எதற்காக மீட்டிங் ஐ வைத்தோமோ அதை விட்டு விட்டு வேறு எல்லா விஷயங்களையும் பேசி விட்டோமே என்று நினைக்கக் கூடாது.

* டீமில் தேவையானவர்களை மட்டும் மீட்டிங்-இற்கு அழையுங்கள். சிவில் இஞ்சினியர்கள் மீட்டிங்கில் பெயின்ட் அடிப்பவருக்கு என்ன வேலை?

* மீட்டிங்-ஐ சில சுவாரஸ்யமான விஷயங்களுடன் தொடங்குங்கள். அதற்காக சினிமா குத்துப்பாட்டு வீடியோ போட்டுக் காண்பிக்கவும் என்று சொல்ல மாட்டேன். யாருக்காவது சிறப்பாக வேலை செய்ததற்கு அவார்ட் கொடுக்க வேண்டும் என்றால் அதை முதலில் வைத்துக் கொள்ளலாம். டீமுடன் எல்லாரும் வெளியே outing போக வேண்டும் என்றால் அதை முதலில் விவாதிக்கலாம். சலிப்பான விஷயங்களை கடைசியில் வைத்துக் கொள்வது நல்லது. உதாரணம் இந்த வருஷம் சாலரி ஹைக் இல்லை என்பதை முந்திரிக்கொட்டை மாதிரி முதலிலேயே சொல்லி விடக் கூடாது. எல்லாரும் ஆர்வம் இழந்து விடுவார்கள். மீட்டிங் முடிந்து எல்லாரும் கலைந்து செல்லும் போது கூட சொல்லலாம். மேலும். மீட்டிங் வருபவர்களுக்கு சொந்த செலவில் சமோசா டீ வாங்கிக் கொடுக்கலாம்.

* ஒவ்வொரு மீட்டிங்கிலும் ஒருவரை MoM எனப்படும் minutes of meeting எடுக்கச் சொல்வது நல்லது. மீட்டிங்-இல் நடக்கும் விஷயங்களை அப்படியே ரெகார்ட் செய்து கொள்வது போல.இதைப் பார்த்து என்ன என்ன தேவையில்லாத விஷயங்களை அடுத்த முறை தவிர்க்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.


٢
=

லவ் என்பது இப்போது கிட்டத்தட்ட தமிழ் வார்த்தை ஆகி விட்டது. யாரையாவது காதலிக்கிறாயா என்று கேட்டால் நீங்கள் தமிழர் அல்ல என்று ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

இதைப் பற்றி இரண்டு விஷயங்கள். ஒன்று காமெடி. இன்னொன்று காமெடி அல்ல.

டி.வி.யில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர்..

ஹலோ வியூயர்ஸ், இன்னிக்கு நீங்க லவ் பண்றப்ப நடந்த காமெடிகளைப் பற்றிப் பேசலாம்.

முதல் காலர்: ஹலோ..

தொகுப்பாளர்:
ஹலோ, உங்க பேர் சொல்லுங்க..

காலர்: நான் ரமேஷ். உங்க ப்ரோக்ராம்மை தொடர்ந்து பார்ப்பேன். ரொம்ப நல்லா இருக்கு.உங்க கூட பேசுனது ரொம்ப சந்தோஷம். என்ன பேசறதுன்னே தெரியலை.

தொகுப்பாளர்: நன்றி.சரி. நீங்க லவ் பண்ணறீங்களா?

[இது வரை நன்றாக பேசிக் கொண்டிருந்த காலர் காலை கட் செய்கிறார்]

சரி. கட் ஆயிருச்சு ....இப்ப ஒரு பாட்டு பார்க்கலாம்.

காலர்: ஹலோ.

தொ: உங்கள் பேர் சொல்லுங்க.

கா: நான் ரவி பேசறேன்.

தொ: யாரையாவது லவ் பண்ணறீங்களா?

கா: ஹலோ..எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆறது.

தொ: ஹா ஹா அப்படின்னா உங்க வொய்ஃபை லவ் பண்ணலாமே?
[கால் கட் ஆகிறது]

லவ்வுன்னா ஏன் எல்லாரும் பயந்துக்கராங்கன்னு தெரியலை. இப்போ இன்னொரு பாட்டு பார்க்கலாம்.அதற்கு முன்னாடி ஒரு குட்டி ப்ரேக்.

காலர்: ஹல்லோ
தொ: ஹலோ யார் பேசறது.
கா: நான் தினேஷ் பேசறேங்க.
தொ: சரி.தினேஷ், நீங்க யாரையாவது லவ் பண்ணறீங்களா?
கா: ஹலோ?
தொ: நீங்க யாரையாவது காதலிக்கி
றீங்கலான்னு கேட்டேன்.
கா: ஆமா.
தொ: அப்ப நீங்க
லவ் பண்றப்ப நடந்த காமெடி எதாச்சும் சொல்லுங்களேன்.
கா: நான் லவ் பண்றதே ஒரு காமெடி தானங்க..

கடைசி பாட்டுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைகிறது.
தமிழனுக்குதான் எத்தனை entertainment-கள் !



*சன் டி.வி யில் நேற்று ஒரு திரைப்படம் வந்தது. வழக்கம் போல வேலை வெட்டி இல்லாத ஒரு இளைர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். மேலும் தன் காதலி வேறு ஒருவனைக் காதலிக்கிறா
ள் என்று தெரிந்தும் கூட அவர்கள் இருவரின் காதலை சேர்த்து வைக்க முனைகிறார். என்ன ஒரு தெய்வீகக் காதல்!

சரி. அந்தத் திரைப்படத்தில் ஏழெட்டு குழந்தைகள் எப்போதும் ஹீரோவை சூழ்ந்து கொண்டு லூட்டி செய்கின்றன. சரி லூட்டி செய்யலாம். குழந்தைகள் என்றால் அப்படித் தான் இருப்பார்கள். ஆனால் இந்தத் திரைப்படத்தில் குழந்தைகள் ஹீரோவிடம் 'அங்கிள் உங்களுக்கு லவ் பண்ணவே தெரியலை, அங்கிள், உங்க லவ்வருக்கு என்ன கிப்ட் கொடுத்தீங்க, லவ் யூ சொல்லிட்டீங்களா?உங்க ஆளோட லவ் புட்டுக்கிச்சாம்' என்று காதலில் கரை கண்டது போல அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசுகின்றன. குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் பதினாலு வயது ஆகும் வரை லவ் என்றால் என்ன என்று
தெளிவாகத் தெரியுமா? இப்படி குழந்தைகளை அதிகப்ப்ரசங்கித் தனமாக பேச வைக்கும், நடிக்க வைக்கும் தமிழ் சினிமாக்கள் எப்போது தான் திருந்துமோ தெரியவில்லை.


٣

=

ஒரு ஹைக்கூ...

பரபரப்பான சாலையொன்றில்
மாடு
ரோட்டை கடந்த போது
எனக்கும் வழி கிடைத்தது.



சில பொன்மொழிகள்:

மிக அபத்தமாகத் தோன்றும்
கனவுகளுக்குள்ளும் ஏதோ ஒரு அர்த்தமுள்ள விஷயம் பொதிந்திருக்கிறது -சிக்மன்ட் பிராய்ட்

பல நேரங்களில் நாம் இந்த பூமிக்கு Return டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம் -யாரோ

பெரிய காரியத்தை மோசமாக செய்வதை விட சிறிய காரியத்தை சிறப்பாக செய்வது சிறந்தது -சாக்ரடீஸ்

ஒரு வெற்றியாளனுக்கு முதலில் தோற்றுப்போவதைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்- மால்கம் போர்ப்ஸ்

இந்த பூமியில் வாழ்வது விலையுர்ந்த விஷயமாக இருக்கலாம். ஆனால் நமக்கு ஒவ்வொரு வருடமும் சூரியனைச் சுற்றி இலவச சுற்றுலா கிடைக்கிறது -யாரோ

எனக்கு உயரங்களைப் பார்த்துப் பயம் இல்லை. உயரத்தில் இருந்து விழுவதைப் பற்றித் தான் பயம் - ஜார்ஜ் கார்லின்

பாட வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு எப்படியோ ஒரு பாட்டு கிடைத்து விடுகிறது -ஸ்வீடன் பழமொழி

ஒரு காலத்தில் பாவமாக இருந்தவைக
ளெல்லாம் இப்போது நோய்களாக இருக்கின்றன -பில் மாஹெர்

கேக்கை விட மெழுகுவர்த்திக்கு அதிகம் செலவானால் உங்களுக்கு வயதாகி விட்டது என்று அர்த்தம். -யாரோ

٤

=


Paul Kuczynski (உங்கள் வாய்க்கு வந்தபடி படித்துக் கொள்ளவும்) என்பவரின் சித்திரங்கள் பொருள் பொதிந்தவை. சாம்பிளுக்கு சில:

காலம் எப்படி நமக்கான சவக்குழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறது என்று இந்தப் படம் காட்டுகிறது.


இவருக்கு தன் பூனை மீது அலாதிப் பிரியம்!


சில முட்டாள்கள் ஏணியை எரித்து குளிர் காய்கிறார்கள்!




٥
=

கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பார்கள். இந்தக் காலத்தில் கற்றது கடுகளவு கல்லாதது பிரபஞ்ச அளவு என்று சொல்ல வேண்டும்.ஒரு உதாரணம்.விக்கிபீடியா சென்று Random Article என்பதை க்ளிக் செய்துகொண்டே வரவும்.

கீழே உள்ள லிஸ்ட் எனக்குக் கிடைத்தது.

Seoul International Cartoon and Animation Festival
Arabtech Jardaneh
Craig Nevill-Manning
Undertone (advertising company)
Autovía A-231
Barcelona Metro line 13
Krasnosulinsky District
To Live Forever (novel)
Robusta Lionata
alpha-Ketovaleric acid
Frank Knox
Plasmodium garnhami
Patrick Ross
List of placental mammals in Order Artiodactyla
Emprise to Avalon
Hoare logic
Leper War on Kauaʻi
Gilmar Popoca
RADARSAT Constellation
MAC-11
Clostridium formicaceticum


இவையெல்லாம் நான் இதுவரை கேட்டது கூட இல்லை. எனக்குத் தெரிந்த ஒரு டாபிக் வரும் வரை விடுவதில்லை என்ற உறுதியுடன் ஒருமணிநேரம் க்ளிக் செய்து கொண்டே இருந்தேன். கடைசியில் தெரிந்த டாபிக் ஒன்று வந்தது . அது என்ன தெரியுமா?
.
..
...
....
Dinner Date ! ஹி ஹி...

நம் அறியாமை எத்தனை பெரிதாக இருக்கிறது! சரி ரொபஸ்டா லியனோடா வையும் கில்மர் பபோகா வையும் நான் எதற்கு அய்யா தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா? உண்மை தான். தெரிந்து கொண்டு ஒரு ---ருக்கும் பிரயோஜனம் இல்லை. நண்பர்களுடன் பேசும் போது ஹோயர் லாஜிக் படி இது தப்பு , பிரான்சிஸ் பெக்கன் என்ன சொல்கிறார் என்றால்... என்று அடிக்கடி பீலா விடலாம். ஆனால் பிறகு உங்கள் நண்பர்கள் உங்களை வேற்றுக் கிரக ஜீவி போல பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். நண்பர்களுடன் இன்று காலையில் காண்டீனில் பார்த்த பெண்ணைப் பற்றியோ , இந்த கார் எத்தனை மைலேஜ் கொடுக்கிறது என்பதைப் பற்றியோ தான் பேச வேண்டும். நம்முடைய அறிவு வட்டம் எத்தனை குறுகியதாக இருக்கிறது! :(

٦
=

ஒரு இசைக் கலைன் காதல் கவிதை எழுதினால் இப்படித்தான் எழுதுவானோ?

-எனக்குப்
பிடித்த ஸ்வரம் நீ!


-மோகனத்துக்கு
நீ இல்லை.
என் மோகனாவைப் பார்த்த நொடியில்
இருந்து நானே இல்லை!


-வீணையை தூக்கி செல்வது
கஷ்டமாம்.-நீ
உன் தொண்டையை எப்படி
அனாயாசமாய் சுமந்து செல்கிறாய்?


-உன் குரலை கேட்கையில்
வீணை
காற்று வாத்தியமோ என்று
சந்தேகம் வருகிறது.

-நீ
ஆஹிரி பாடுகையில் என்
காதுக்கு
கல்யாண சாப்பாடு கிடைத்தது!


-உன்னைப் பார்த்ததும்
காதல் வருகிறதே
உன் பெயர் சஹானாவோ?


-ஒரு
தென்றலே
மலயமாருதம் பாடுகிறதே!?


(இதுக்குதான் சங்கீதம் கத்துக்கப் போன எடத்துல கார்த்திக் மாதிரி சைட் அடிக்கக் கூடாதுங்கறது! )

٧

=

ஒரு ஓஷோ அடல்ட் ஜோக்.
ஆச்சாரமானவர்கள் யாரும் இல்லாத போது படித்துக்கொள்க.


ஒருத்தன் வியாபார விஷயமாக தூரதேசம் ஒன்றுக்குப் போனா
ன். ஆனால் அங்கே பெண்களே யாரும் இல்லை. அவன் க்ளப் ஒன்றுக்கு சென்று அங்கிருந்த கௌ- பாய்ஸிடம் 'எப்படி மேனேஜ் செய்கிறீர்கள்?' என்று கேட்டான். அதுவா? என்ன செய்வது? அங்கே இங்கே மேய்ந்து கொண்டிருக்கும் குதிரை, மாடு, ஆடு இதையெல்லாம் வைத்துக் கொண்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டியது தான் என்றார்கள்.

இவன் மறுநாளே ஒரு அழகான பிங்க் கலர் பன்றியுடன் பாருக்குள் நுழைந்து எனக்கு ஒரு ஸ்காட்ச், மற்றும் என் புதிய அழகான பிங்க் கேர்ள் பிரண்டுக்கு ஒரு குவார்டர் என்று ஆர்டர் செய்தான். சற்று நேரம் அங்கே பலத்த மௌனம் நிலவியது. பிறகு பத்துபதினைந்து பேர் அவனை சூழ்ந்து கொண்டு துப்பாக்கி முனையில் 'ஹான்ட்ஸ் அப்' என்றார்கள்.

இவன் அப்பாவியாக 'நீங்கள் தானே ஏதோ ஒரு துணையை தேடிக் கொள்ளுங்கள்' என்று சொன்னீர்கள் ?' என்றான்.

அதற்கு அவர்கள் 'துணையை தேடிக் கொள் என்று தான் சொன்னோம். இப்போது நீ தள்ளிக் கொண்டு வந்திருப்பது எங்கள் சேர்மனின் மனைவி' என்றார்கள்.

சமுத்ரா

Monday, August 27, 2012

கலைடாஸ்கோப்-70

லைடாஸ்கோப்-70 உங்களை வரவேற்கிறது.

7
==


The best doctors in the world are Doctor Diet, Doctor Quiet, and Doctor Merryman.

Jonathan Swift

- பேஷண்டுக்காக டாக்டர் காத்திருந்தது அந்தக் காலம். இப்போது பேஷண்டுகள்
தான் டாக்டருக்காக பொறுமையோடு காத்திருக்க வேண்டும். அதுவும் சில ஸ்பெஷலிஸ்டுகளுக்கு காலை ஐந்து மணியில் இருந்தே டோக்கன் க்யூ ஆரம்பித்து விடுகிறது. திருப்பதி பெருமாளை தரிசிக்கும் பயபக்தியுடன் வெளியே காத்திருக்க வேண்டும்.சில கோயில்களில் உற்சவரை முதலில் தரிசிப்பது போல அச்சிஸ்டன்ட் டாக்டரைப் பார்த்து முதலில் நோயின் ரிஷிமூலம் நதிமூலம் எல்லாம் சொல்லி விட வேண்டும்.அவர் நமது வெயிட் பி.பி. இத்யாதிகளைப் பார்த்து விட்டு மீண்டும் மூலவரின் தரிசனத்துக்குக் காத்திருக்குமாறு பணிப்பார்...

இப்போது பெரும்பாலான டாக்டர்கள் சிடுமூஞ்சிகளாக இருக்கிறார்கள். கஸ்டமர் தான் கடவுள் என்ற மந்திரம் செல்லுபடியாகாத ஒரே துறை மருத்துவம். அங்கே எப்போதும் டாக்டர் தான் கடவுள். டாக்டர் பெரும்பாலும் புன்னகைப்பது கூட இல்லை. புன்னகைத்தால் நோயாளியின் வியாதி ஒட்டிக் கொண்டு விடுமோ என்னவோ? நோயாளியுடன் அதிகபட்சம்
உள்ளே ஒருவரைத் தான் அனுமதிக்கிறார்கள்.ஆஸ்பத்திரியிலேயே ரூம் எடுத்துத் தங்கி இருந்தாலும் ரூமில் நோயாளியுடன் ஒருவர் தான் இருக்க வேண்டும். டாக்டர் வந்து chart -களைப் பார்க்கும் வரை கைகட்டி வாய்பொத்தி அந்தணர் முன் நிற்கும் நந்தன் போல நிற்க வேண்டும்.பின்னர் அவர் சொல்லும் வேதவாக்குகளை அப்படியே செவிமேற்கொள்ள வேண்டும். என்ன சாப்பிட்டார்
எப்போது யூரின் போனார் போன்ற கேள்விகளுக்கு 'அதுங்களா, விடி காலைல பசின்னாருங்க, ஒரு பாதி டம்பளர் ஹார்லிக்ஸ் குடிச்சார். அப்புறம் பையன் வர்றப்ப ஆப்பிளு வாங்கிட்டு வந்தான்..அதுல ரெண்டு துண்டு தின்னாருங்க..அப்புறம் பத்து மணிக்கு அன்ன பூர்னாவுல வாங்கியாந்த இட்லில ஒன்னரை சாப்பிடாருங்க ...கால் டம்பளர் டீ என்று மெகா சீரியல் லெவலுக்கு கதை சொல்லாமல் அனுமார் போல வார்த்தைகளை கச்சிதமாக அளந்து பேச வேண்டும்....கேட்டதை மட்டும் சொல்லுங்க என்று சில டாக்டர்கள் சலிப்புடன் சொல்லி விடுவார்கள்.

கொஞ்சம் அதிகம் பேசி விட்டால் இங்கே நான் டாக்டரா நீ டாக்டரா என்று கூட சிலர் எரிந்து விழுவார்கள்.


டாக்டர்களுக்கு இருக்கும் பிஸி ஷெட்யூலில் , ஒவ்வொரு நோயாளியையும் 'என்ன ராமசாமி , வீட்ல எல்லாரும் சௌக்யமா' என்று விசாரிப்பார் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர் என்றாலும் டாக்டர்கள் குறைந்த பட்சம் தேவையில்லாத வெட்டி பந்தா இல்லாமல் இருக்கலாம். நோயாளிகளின் கணவனோ மனைவியோ டாக்டருக்குப் படிக்கவில்லை.எனவே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அது எத்தனை அபத்தமாக இருந்தாலும் பதில் சொல்வது டாக்டர்களின் கடமை.பக்தனுடன் அமர்ந்து சிரித்த முகத்துடன் பேசி அளவளாவும் கடவுளுக்கு தான் மதிப்பு அதிகம். கடவுளை தன்னுடன் பேச வருமாறு விளையாட வருமாறு அழைக்காத பக்தர்கள் குறைவு. தியாகராஜ சுவாமிகளின் 'ஆட மோடி கலதே' கேட்டிருக்கிறீர்களா?

6
===

ஆ.மாதவனின் நாயனம் என்ற சிறுகதை.

குக்கிராமம் ஒன்றில் இழவு ஒன்று நேர்ந்து விடுகிறது. கல்யாண சாவு தான் என்றாலும் பெண்களின் ஒப்பாரி பலமாக ஒலிக்கிறது. "இப்படியே இருந்தாப் பொழுதுதான் இருட்டும். இருட்டு வருமுன்னே இதோ அதோன்னு காரியத்தை முடிப்பம்" என்று ஊர்ப் பெரிசுகள் பேசிக் கொள்கின்றன. இறந்த பெரியவருக்கு நாயனம் என்றால் மிகவும் பிடிக்கும் போலிருக்கிறது. எனவே அவரின் இறுதி யாத்திரை ஒரு நாயனக் கச்சேரியுடன் தான் நடக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் அந்த மழைக்கால மாலையி
ல் நாயனக்காரர்களை தேடுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. தேடிப் போன ஒருவன் ஓடி வந்து 'சின்னண்ணனும், வடிவேலும் தட்றாம்பட்டிக்குச் சைக்கிள்லே போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே யாரும் நாயனக்காரங்க ஆப்டலியாம். சேதி சொல்லச் சொன்னாங்க" என்கிறான்.காத்திருப்பவர்கள் "இந்தக் காலத்திலே, யாருப்பா நாயனமும், பல்லக்கும் வச்சிக்கிறாங்க? ஏதோ அக்கம் அசலுக்கு ஒரு தொந்தரவு இல்லாமெ, காரியத்தை முடிக்கிறதெ விட்டுவிட்டு?" என்று அலுத்துக் கொள்கிறார்கள்.

இன்னொரு கூட்டம் "செத்தவங்க ஆத்துமா நிம்மதியாப் போகட்டுமே" என்று நாயனக்காரனுக்காக காத்திருக்கிறது.இப்போது இருட்டத் தொடங்கி மழை வேறு வந்து விடுகிறது.எல்லோர் முகத்திலும் ,சலிப்பும், விசாரமும், பொறுமை இழந்த வெறுப்பும் நிறைந்திருக்கின்ற்ன. மணி வேறு இரவு ஒன்பது ஆகி விடுகிறது. பிணம் வாய்க்கரிசி போடப்பட்டு பாடையில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலத்துக்கு தயாராக இருக்கிறது.நாயனக் காரன் வந்த பாடில்லை.

சின்னண்ணனும் வடிவேலுவும் வந்து சேர்கிறார்கள். கொஞ்சம் பிரபலமான நாயனக்காரர்களை அழைத்துவர முடியவில்லை என்றும் சமயத்துக்கு அகப்பட்ட யாரோ ஒரு நாயனக் காரனை அவசரத்துக்கு அழைத்து வந்தோம் என்றும்
சொல்கிறார்கள் . காய்ந்து போன மூங்கில் குழாய் போல, சாம்பல் பூத்த நாயனத்தை வைத்துக்கொண்டு , மாறு கண்ணும் குட்டைக் கிராப்பும், காவி மேலாப்புமாக, ஒரு குட்டை ஆசாமி அவன். சரி ஆள் எப்படி இருந்தால் என்ன? காரியத்தை முடிப்போம் என்று இறுதி ஊர்வலம் தொடங்குகிறது.

நாயனக்காரன் மெல்ல உதட்டில் வைத்து, “பீ ப்பீ.. ‘ என்று சுத்தம் பார்க்கிறான். நாயனக்காரன் வாசிக்க ஆரம்பி
க்கிறான் . ‘பீ..பீ’ என்ற அவலம் பரிதாபகரமாக இருக்கிறது . தவுல்காரன் சந்தர்ப்பம் தெரியாமல் வீறிட்ட குழந்தைபோல-வாத்தியத்தைத் தொப்புத் தொப்பென்று மொத்துகிறான். போகப் போக நாயனம் அபஸ்வரமாக ஒலித்து எல்லாரையும் தர்ம சங்கடப்படுத்துகிறது.ஊர்வலம், ‘சனியனே’ என்ற பாவனையில் அவனையே பார்த்துக் கொண்டு வழி நடக்கிறது.சுடுகாட்டுத் தூரம் தீராத் தொலைவெளியாகத் தோன்றுகிறது. இன்னும், பீ..ப்பீ..பீ..பீ..’கிராமத் தலையாரி முத்தன் , அவனையும் அந்த நாயனத்தையும் ஒரு முறை வெறித்துப் பார்க்கிறார்.

”படவா ராஸ்கல். நாயனமா வாசிக்கிறே?” என்று எரிச்சலுடன் நாயனத்தை அப்படியே இழுத்துப் பறித்து கால் மூட்டின் மேல் வைத்து , இரண்டு கைகளாலும், ‘சடக்’ இரண்டு துண்டாக முறித்து வீசி விடுகிறார்.
ஊர்வலம் தயங்கக் கொஞ்சம் நின்றது. எல்லார் முகத்திலும், ’முத்தண்ணே நீ செஞ்ச காரியத்துக்கு உனக்கு தங்கக் காப்பு அடிச்சுப் போட்டாலும் தகும்’ என்ற திருப்தி பளிச்சிடுகிறது.

5
==

சில ஹைக்கூக்கள்

- ஹோட்டலில் இருந்து
வெளியேறிய பெண்
எனக்குள்
சுதந்திரத்தைப் பிறப்பித்தாள்.

- என் மீது
சகதியை வாரித் தெறித்தது ஒரு வண்டி.
என்
கவலைகள் எல்லாம்
ஒரு கணம்
ஸ்தம்பித்து நின்றன!

-நடந்து
வருகையில்
புல்லின் வாசம்!

-நான் பார்த்த
ஒரு கணத்தில்
அசையாமல் நின்றது
கடிகாரம்!

4
==

'Thoughts ' என்ற புத்தகத்தில் இருந்து சில பொன்மொழிகளின் தமிழாக்கம்.


-தான் எங்கே போகிறோம் என்று அறிந்திருக்கும் மனிதனுக்கு உலகமே வழிவிடுகிறது - டேவிட் எஸ் ஜார்டன்

- நீங்கள் நேர்மையானவராய் இருங்கள். அப்போது உலகில் ஒரு ராஸ்கல் குறைந்து விட்டான் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். - தாமஸ் கார்லைல்

- கூட்டத்தின் பின்னே
போகும் மனிதனை எந்தக் கூட்டமும் பின் தொடராது - ரிசார்ட் டோனெல்

-விமர்சகர்களைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். இது வரை உலகில் விமர்சகருக்கு என்று ஒரு சிலையும் இல்லை.-ஜீன் சிபெல்யாஸ்

-ஏழையோ பணக்காரனோ பணத்தை வைத்திருப்பது நல்லது - சிட் லான்ஸ்

-யார் பணக்காரன்? யார் திருப்தி உடையவனோ அவன்.. யார் அது? யாரும் இல்லை - பெஞ்சமின் பிராங்க்ளின்

-உங்கள் சட்டைப் பையில் பணம் இருந்தால் நீங்கள் அழகானவர்... நீங்கள் நன்றாகப் பாடுபவரும் கூட - யாரோ

-என்னால் என்ன செய்யமுடியும் என்பதை வைத்து நான் என்னை மதிப்பிடுகிறேன். நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை வைத்து மற்றவர்கள் என்னை மதிப்பிடுகிறார்கள் - ஹென்றி லாங் ஃபெலோ

3
==

வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பதை மனிதனை விட எல்லா மிருகங்களும் தெரிந்து வைத்திருக்கின்றன.

இந்த பொன்மொழியை ஞாபகப்படுத்தியது ஐஸ் ஏஜ் -4 திரைப்படம். ஒரு காலத்தில் பூமியின் எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்திருந்தன என்று படித்திருக்கிறோம்.பிறகு பூமியின் அடுக்குகள் நகர்ந்ததால் தனித்தனியே பிரிந்து போயின. அப்படி நடந்த போது மனிதன் இன்னும் வந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது. அப்போது மிருகங்கள் அடிக்கும் லூட்டியை படம் விவரிக்கிறது. ஆண் கம்பள யானை ஒன்று கண்டங்களின் நகர்ச்சியால் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போகிறது. பின்னர் திரும்பி வந்து தன் குடும்பத்துடன் சேரும் வரை ஒரே லூட்டி தான். மேன்னி என்ற அந்த யானையின் கம்பீரம் அபாரம். சிட் (Sid)என்ற ஒரு ஸ்லோத் படம் முழுவதும் காமெடியனாக வருகிறது. சிட் ஒரு சோம்பேறி தீனிப் பண்டாரம்.ஆனால் வாய் மட்டும் முழம் நீளம்.படம் தமிழில் வரும் போது சிட் வடிவேலு வசனங்களை பேசி நம்மை இன்னும் சிரிக்க வைக்கிறது. (ஆங்கிலத்தில் சில இடங்களில் விலங்குகள் பேசுவதைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கிறது) மிருகங்களுக்கு குரல் கொடுப்பது கஷ்டமான வேலை என்று தோன்றுகிறது.குறிப்பாக சிட் என்ற அந்த ஓட்டை வாய் மிருகத்துக்கு குரல் கொடுத்தவரை பாராட்டியே ஆக வேண்டும்.

பூமியி
ல் மனிதன் வருவதற்கு முன்னர் விலங்குகள் நன்றாக என்ஜாய் செய்திருக்கின்றன என்று தோன்றுகிறது. குரங்குக்குள் இருந்து மனிதன் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்த நிமிடத்தில் இருந்து அவைகளின் எமகண்டம் ஆரம்பம் ஆகியிருக்க வேண்டும்.கம்பள யானைகளை மனிதன் வேட்டையாடியே கொன்று விட்டான் என்கிறார்கள். ஒரு கம்பள யானையை கொன்றால் ஒருமாதம் முழுவதும் ஊர் முழுக்க சாப்பிடலாமாம். பனி யுகம் என்பதால் உணவு கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

தமிழ்நாட்டின் வெய்யிலைப் பார்த்தால் மீண்டும் அந்த பனியுகம் பூமியில் வராதா என்று ஏக்கமாக இருக்கிறது.

2
==

சமீபத்தில் ஆ.விகடன் புதுமை புதுமை என்று ஏதோ விளம்பரம் செய்தார்கள். ஒரு புதுமையும் இல்லை என்று தோன்றுகிறது. அதே பழைய கஞ்சி தான். அட்டையை மட்டும் மாற்றி இருக்கிறார்கள். என் விகடனையும் நிறுத்தி விட்டார்கள் என்று தோன்றுகிறது. ஆ.வி. யில் மதனின் கேள்வி பதிலுக்குப் பதில் இப்போது வாசகர்களே கேள்வி கேட்டு பதில் சொல்ல
ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கிறது . எனக்கு என்னவோ விகடனை விட குங்குமம் பரவாயில்லை என்று தோன்றுகிறது. வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்கள் அதில் வருகின்றன.'குமுதம்' வாங்குவது டோட்டல் வேஸ்ட். பத்து ரூபாயை டஸ்ட் பின்னில் போட்டதற்கு சமம்
அது . எந்தப் பத்திரிக்கையாக இருந்தாலும் இந்தத் 'தலைவர்' கடி ஜோக்குகளை விடுவதாக இல்லை. உதாரணங்கள்:

தலைவரே
உங்க தொகுதிக்காரர் ஒருத்தர் கடிதம் அனுப்பியிருக்கார் !
என்னவாம் ?
நிலம் நிலமறிய ஆவல்னு !


தலைவர் கோபமா இருக்காரே, என்னாச்சு ?

தன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு தலைவர் சொன்னதை, சன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு பிரசுரம் செய்துட்டாங்களாம் !

1
===

ஓஷோ ஜோக்.

விவசாயி மிடோ மப்பின் -இன் பண்ணை முழுவதும் தீயில் எரிந்து சாம்பல் ஆகி விட்டது.

மறுநாள் அங்கு வந்த இன்சூரன்ஸ் அதிகாரிகள் " ஐயா, நாங்கள் இந்த நஷ்டத்துக்குப் பணம் தர முடியாது. அதற்குப் பதில் உங்கள் பண்ணை முதலில் எப்படி இருந்ததோ அதே போல அதே அளவு அதே உயரம் அதே பரிமாணங்கள் அதே மூலப் பொருட்களுடன் அதே மாதிரி கட்டித் தருவோம்" என்றார்கள்.

மிடோ மனதில் 'அப்படியானால் முதலில் நாளை காலை என் மனைவி மீதான லைப் இன்சூரன்ஸ் ஐ கான்சல் செய்ய வேண்டும்' என்று நினைத்துக் கொண்டான்.

****

ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர்.

மரியா 'என் பாய் பிரண்ட் ஜான் ரொம்ப மோசம்...அவன் ஒரு மோசமான பொம்பளை கூட உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டே டின்னர் சாப்பிடற மாதிரி கனவு கண்டேன்' என்றாள்.

இன்னொரு பெண் ' கம் ஆன்...இது வெறும் கனவு தான். இதற்கு ஏன் உன் காதலனை திட்டுகிறாய்'? என்றாள்.

'உனக்குத் தெரியாது மரியா, என் கனவிலேயே அவன் இப்படி செய்யும் போது அவன் கனவில் என்னென்னவெல்லாம் செய்வானோ' என்றாள் அவள்.

சமுத்ரா

Friday, August 17, 2012

கலைடாஸ்கோப்-69

லைடாஸ்கோப்-69 உங்களை வரவேற்கிறது.

?

சமீபத்தில் the so called சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது . (எங்கெல்லாம் குண்டு வெடிக்குமோ என்ற பயத்துடன்). சின்ன வயதில் சுதந்திர தினம் என்றால் ஸ்கூலில் கொடியேற்றி மிட்டாய் தருவார்கள் என்று மட்டும் தெரியும். ஜன கன மன அவசரமாகப் பாடி விட்டு வீட்டுக்கு ஓட்டம் எடுக்கலாம்.!பொதிகையில் ரோஜா படம் போடுவார்கள்.(இப்போதும் போடுகிறார்கள் என்று நினைக்கிறேன்) இப்போது பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. சுதந்திரம் தினத்துக்கு முந்தாநாள் ஆபீசில் நாலைந்து பேர் I LOVE INDIA என்ற தலைப்பிட்ட FORWARD இ-மெயில்கள் அனுப்புகிறார்கள்.சட்டையில் கொடி குத்திக் கொள்கிறார்கள். டி.வி.யில் திரைக்கு வந்து சில வருடங்களே சாரி சில மாதங்களே ஆன திரைப்படங்களும் தேசத்துக்கு மகத்தான ஒப்பரிய சேவை ஆற்றிய ஹீரோயின்களின் பேட்டியும் போடுகிறார்கள் .சுதந்திர தினம் ஓவர்.

இந்த 'சுதந்திரம்' என்பது ஒரு SUBJECTIVE TERM ..அதற்கு சரியான வரையறை இல்லை.மேலும்,அப்போது (1947 க்கு முன்பு) இருந்த தேச பக்தி இப்போது ஏன் இல்லை என்றால் அப்போது குறைந்த பட்சம் ஒரு பொது எதிரி நமக்கு இருந்தான்.நம் சொந்த நாட்டை இன்னொருவன் ஆளுவதா? சுதந்திரம் கிடைத்து விட்டால் நாடே சொர்க்கமாக மாறும் பணமழை பொழியும் என்ற குறைந்த பட்ச நம்பிக்கையும் அப்போது இருந்தது.இப்போது நம்மிடம் அந்த பொது எதிரி இல்லை. .ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் நிறைய இருக்கின்றன.இவைகளிடம் இருந்து சுதந்திரம் பெறுவது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்றே தோன்றுகிறது .வறுமை, ஊழல், பொருளாதார வீழ்ச்சி, அதிகார துஷ்ப்ரயோகம், மக்கள் தொகை பிரச்சினை,வேலை இன்மை போன்ற எதிரிகளிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கும் நாள் மட்டுமே நமது உண்மையான சுதந்திர நாளாக இருக்க முடியும்.

??

சமீபத்தில் படித்த இரண்டு கதைகளைப் பற்றிப் பேசலாம். ஒன்று

ஒரு கப் காபி -இந்திரா பார்த்தசாரதி

-ராஜப்பா ஒரு ஏழை பிராமணன். கல்யாணம் ஆகி விட்டது. எந்த வேலையும் சரிப்பட்டு வராமல் சும்மா தம்பியின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு பொழுதைக் கழிக்கிறான். அக்கம் பக்கத்தில் திவசம், கல்யாணம் வேறு விசேஷங்கள் நடந்தால் அதை சாக்காக வைத்து ஓசி சாப்பாட்டில் ஒரு நாள் நகராதா என்று யோசிப்பவன்.பிராமணணாய்ப் பிறந்துவிட்டு, மந்திரமும் தெரியாது. ஒருநாள் காலை ராஜப்பாவுக்குக் காப்பி குடித்தாக வேண்டும் என்றிருக்கிறது . அவன் மனைவி சொல்லிவிடுகிறாள் : ‘காப்பிப் பொடி கிடையாது. காசு கொண்டு வந்தா காப்பி. இல்லாட்டா தீர்த்தத்தைக் குடிச்சுட்டு சும்மா கிடங்கோ. நான் வீடு வீடா போய்க் கடன் வாங்கத் தயாரா இல்லே.என்று.ராஜப்பா ’காலத்தை அனுசரித்துக் கோயிலில் பெருமாளுக்குக் காலையில் காப்பி நைவேத்தியம் பண்ணக்கூடாதா? கோயிலில் தினம் காப்பிப் பிரசாதம் கிடைத்திருக்கும் என்று அங்கலாய்க்கிறான் .

பஸ் ஸ்டாண்டுக்குப் போனால் காபிக்கு வழி கிடைக்கும் என்று ராஜப்பா பஸ் ஸ்டான்ட் போகிறான்.அங்கே ஒரு பழக்கடையில் கணவன் மனைவியுமாக இரண்டு பேர் நின்று கொண்டு பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராஜப்பா சென்று அவர்களுக்காக பழத்தைப் பேரம் பேசி கம்மி விலையில் வாங்கிக் கொடுக்கிறான். அவர்களுடன் பேச்சுக் கொடுத்ததில் அது அவனது பால்ய சிநேகிதன் அனந்து என்று தெரிய வருகிறது.வயத்துப் பொழப்புக்கு டெல்லியில் ஒரு கம்பெனியிலே இருப்பதாகவும் நாலு காசு சம்பாதிக்க என்னென்ன அக்கிரமமெல்லாம் பண்ணணுமோ, அதெல்லாம் செய்வதாகவும் அனந்து சொல்கிறான். மேலும் 'உன்னைப் பார்த்தா பொறாமையா இருக்குடா ராஜப்பா. யாரையும் ஏமாத்த வேணாம். ஊரோட வாசம். பெரியவா எழுதி வச்ச மந்திரம், சோறு போடறது. நீ வாத்தியாராத்தானே இருக்கே? நீ சொல்லாட்டாலும் உன் வேஷம் சொல்றதே! மஞ்ச சூர்ணம், முகத்தில் தேஜஸ்..’
என்கிறான். அனந்து அவனை தான் தங்கி இருக்கும் உயர்ரக ஹோட்டலுக்கு அழைத்து செல்கிறான்.அவன் மனைவி ராஜப்பாவை காபி சாப்பிடுமாறு சொல்கிறாள். அனந்து கோபத்துடன் "அவன் இங்கெல்லாம் காபி சாப்பிடுவானா? என்ன ஒரு ஆசாரம் ? பால் கூட சாப்பிட மாட்டான்" என்று கடிந்து கொள்கிறான்.

ராஜப்பாவுக்கு எரிச்சலாக வருகிறது. இதற்கிடையில் அனந்து சாப்பாட்டுக்கு அவன் வீட்டுக்கு வருவதாக சொல்கிறான். கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதே என்று கடைசியில் ராஜப்பா ,"
தோ பாரு, அனந்து! நான் வேதவித்துமில்லே, ஒரு மண்ணாங்கட்டியுமில்லே. வேதவித்து வேணும்னா நீ வேத காலத்துக்குத் தான் போகணும். முதல்லே நான் கேக்கறதை முதல்லே கொடு, அப்புறம் எல்லாத்தையும் விவரமா சொல்றேன், ஒரு கப் காபி கொடு' என்கிறான்.

அடுத்த கதை 'நாயனம்'-ஆ.மாதவன்.. இதை அடுத்த லைடாஸ்கோப்பில் பார்க்கலாம்.

???

சில ஹைக்கூ-கள்

* ஒவ்வொரு முறை
புது சட்டை அணியும் போதும்-
தீபாவளியின் வாசம்

* தடுக்கியதும்
எல்லாரும் -கொஞ்சம்
வேகமாக நடக்கிறார்கள்

*கண்ணாடியில்
தெரியும் உலகை
மெல்லமெல்ல மூடுகிறது
சாரல் மழை!


????

Moon illusion என்ற ஒரு விளைவைப் பற்றிப் பேசலாம். சந்திரன் (சூரியன்) சில சமயங்களில் அடிவானத்தில் இயல்புக்கு மாறாக மெகா சைசில் தெரிவது.இது நீண்ட நாட்களாகவே தத்துவ ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தி வந்துள்ளது. உண்மையில் தொடுவானத்தில் சூரியன் நம்மை விட்டு அதிக தூரம் இருக்கிறது. எனவே அது சிறியதாகத் தெரிய வேண்டும். நம் வளிமண்டலம் ஏதாவது மாயம் செய்கிறதா என்றால் இல்லை. இதற்கு இயற்பியல் ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை என்கிறார்கள். எல்லாம் நம் மூளை செய்யும் வேலை.[தலை கீழாக நின்று பார்த்தால் சந்திரன் சாதாரண சைசில் இருப்பது தெரியுமாம்!] சந்திரன் அடிவானத்தில் இருக்கும்போது நம் மூளை அதை கட்டிடங்கள், மரங்கள் போன்ற சிறிய பொருட்களுடன் ஒப்பிடுகிறது. எனவே இவைகளை விட சந்திரன் பெரிதாக இருக்க வேண்டும் என்ற ஊகத்தில் மூளை தானாகவே அளவை கூட்டி விடுகிறது. சந்திரன் நடுவானில் வரும்போது அது அண்டவெளியின் பரந்து விரிந்த பிரம்மாண்டத்துடன் ஒப்பிடப்படுவதால் மூளை அதை சிறிதாக்கி விடுகிறது. கீழே படத்தில் உள்ள விளைவைப் போன்றது தான் இதுவும்.


?????

Muscle memory என்ற இன்னொரு விஷயம். திறமையான பாஸ்கட் பால் ப்ளேயர் ஒருவரைக் கண்ணைக் கட்டி விட்டு கூடையில் பந்து போடச் சொன்னார்கள். அது மிகச் சரியாகப் போய் விழுந்தது. இதற்கு காரணம் மூளை பல விஷயங்களில் முதலில் மட்டுமே சிறிது கவனம் செலுத்துகிறது. பிறகு தன் நினைவுத் திறனை உடலின் தசைகளுக்கு மாற்றி விட்டு விட்டு கார் ஓட்டும் போதும் , பூ கட்டும் போதும் , டைப் அடிக்கும் போதும் நாளை என்ன டிரஸ் போட்டுக் கொண்டு போகலாம் என்று independent ஆக யோசிக்கிறது. கீ போர்டில் பாஸ்வோர்ட் ஐ டைப் செய்யும் போது அந்த சொல்லை மூளை நினைக்கும் முன்னரே உங்கள் விரல்கள் அடித்து விடுவதை கவனித்திருக்கலாம்.கிட்டத்தட்ட எல்லாமே தசைகளின் நினைவாற்றல் தான். வயலின் , கீ போர்ட் வாசிப்பது, தையல் மெஷினில் தைப்பது, எம்ப்ராய்டரி போடுவது இப்படி. இதனால் தானோ என்னவோ விளையாட்டு வீரர்கள் , கார் ரேஸ் வீரர்கள், கின்னஸ் சாதனை செய்பவர்கள் இவர்களெல்லாம் கவிஞர்கள் , தத்துவ ஞானிகள் , விஞ்ஞானிகள் போன்றவர்களுக்கு ஒரு படி கீழே இருக்கிறார்கள். பத்து நாள் கார் ஒட்டி விட்டால் அப்புறம் மூளையின் தேவை இன்றி கைகள் தானாகவே கியர் மாற்றவும் கால்கள் கிளச்சை மிதிக்கவும் கற்றுக் கொண்டு விடும். ஆனால் கவிதை எழுத ஒவ்வொரு முறையும் மூளையை உபயோகிக்க வேண்டும். மூளையில் யோசிப்பது கூட ஒரு விதமான muscle memory என்று நீங்கள் விவாதித்தால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.

மூளையின் கற்பனைக்கு ஒரு உதாரணம்.. அகநானூறு

மழைக் காலம் தொடங்கி விட்டது ...இன்னும் தலைவன் வரவில்லையே.அவன் தேரின் குதிரைகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணியோசை கேட்கவில்லையே என தலைவி வருந்துகிறாள்.அப்போது தோழி, அவளைத் தேற்றும் விதமாக 'அடி பைத்தியக்காரி,, அவன் வந்து கொண்டு தான் இருப்பான்.. வரும் வழியில் சோலைகளில் இன்ப முயக்கில் மயங்கிக் காதல் களிப்பில் கிடக்கும் வண்டுகளை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லாமல் மெதுவாக தான் குதிரைகளின் கழுத்தில் உள்ள மணியைக் கழற்றி விட்டு சத்தம் போடாமல் வருவான்' என்கிறாள்.

பூத்த பொங்கர்த் துணையோடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன்..


-அருமையானதொரு மழைக் காலத்தின் தொடக்கத்தை, முல்லை நிலத்தை, இதை விட எப்படி ரொமாண்டிக் ஆக வர்ணிக்க முடியும்?



?????

கீழே உள்ளவை சில விளம்பரங்கள். மனிதனின் கற்பனை சக்திக்கு எல்லையே இல்லை.





??????

ஓஷோ ஜோக்.

முல்லா நசுருதீன் ஒரு நாள் குடித்து விட்டு யாருடனோ பயங்கரமாக சண்டை போட்டு விட்டார். அவர் முகமெல்லாம் ரத்த காயம் ஆகி விட்டது. அன்று நள்ளிரவில் தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்தார். மனைவி இந்தக் கோலத்தில் தன் முகத்தைப் பார்த்தால் பூகம்பம் வந்து விடும் என்று பாத் ரூமுக்கு சென்று அவசர அவசரமாக ஏதோ ஒரு க்ரீமை எடுத்து முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கொண்டார்.பெட் ரூமுக்கு சென்று போர்த்திக் கொண்டு படுத்து விட்டார். காலை விடிந்ததும் முல்லாவின் மனைவி பாத் ரூமில் இருந்து கத்தினாள்:

"என்னங்க,,, யாரு இந்த பாத் ரூம் கண்ணாடி பூரா டூத் பேஸ்டை அப்பி வெச்சது?"

$$$$

முல்லா நசுருதீன் ஒரு பாரில் உட்கார்ந்து மொடாக்குடி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே அச்சு அசலாக ஒரே மாதிரி உடையணிந்த ஒரே மாதிரி தோற்றம் கொண்ட ஒரு ட்வின்ஸ் வந்தார்கள். முல்லா நசுருதீன் அவர்களையே குழப்பத்துடன் பாத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களில் ஒருவன் முல்லாவை நெருங்கி வந்து "பெரியவரே ரொம்ப கவலைப் படாதீங்க..நீங்க ஸ்டெடியா தான் இருக்கீங்க . நாங்க உண்மையில் ட்வின்ஸ்".. என்றான். அதற்கு முல்லா "அப்படியா? நீங்க நாலு பேருமேவா?" என்றார்.

சமுத்ரா