Monday, January 10, 2011

மடைமாற்றம்

ஆண் குழந்தைகளும்
பெண் குழந்தைகளும்
ஒன்று போலவே வளர்கிறார்கள்...
மணல் குவியலின் மேல் விளையாடிக் கொண்டு,
மாட்டு வண்டிகளின் பின்னால் ஓடிக் கொண்டு,
ஊஞ்சல் விளையாடிக் கொண்டு,
பட்டம் விட்டுக் கொண்டு,
சண்டை போட்டுக் கொண்டு,
பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு ஓட்டப் பந்தயம் வைத்துக் கொண்டு....
இருவருக்கும்
இயற்கையின் கட்டாயமான
திரவங்கள் சுரந்த பின்
தங்கள் மழலைமுகங்கள் மாறி
இரு வேறு
இனங்களாகப் பிரிந்து போய் விடுகிறார்கள்..

சமுத்ரா

5 comments:

  1. இதனுடன் தொடர்புடைய இடுகை

    http://gunathamizh.blogspot.com/2009/11/2500.html

    ReplyDelete
  2. மிக இயல்பான உண்மை.... கவிதைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. // இனங்களாகப் பிரிந்து போய் விடுகிறார்கள்//

    மிகக் கனமான வார்த்தை. நல்ல கவிதை

    ReplyDelete