Tuesday, January 11, 2011

அக்கா இல்லாத வீடுகள்


அக்கா என்றாலே எப்போதும்
ஆச்சரியம் தான்...


பள்ளியின் முதல் நாளிலேயே
அழகான கையெழுத்தென்று
டீச்சரிடம்
பாராட்டு வாங்கினாள்..


பாட்டி சொல்லிக் கொடுத்த
'ரா ரா வேணு கோபாலா'வை
அப்படியே பாடி
அசத்தினாள்..

ஊரில்
நான் அறியாத இடங்களுக்கெல்லாம்
கை பிடித்து
கூட்டிப் போனாள்..

பாஸ்ட் டென்ஸ்
ப்ரெசென்ட் டென்ஸ்
பக்குவமாய்
விளக்கினாள்..

பள்ளியில்
எப்போதும்
முதலில் வந்து வீட்டை
புத்தகங்களால் நிரப்பினாள்..

ஒருநாள்
திடீரென்று அழுது
ஒரு புதிரைப் போல
அந்நியமாய்
மூன்று நாட்கள்
தனிமையில் அமர்ந்தாள்...

கரும்புக்கு காபிப்பொடி
வாழைப்பழத்துக்கு மஞ்சள்
பொங்கல் பானைக்கு செங்கல் பொடி
சூரியனுக்கு குங்குமம்
என்று கலந்து
வீதியே வியக்க
பொங்கல் கோலம் போட்டாள்..

தாத்தா
இறந்த போது
இரவு முழுதும்
பாட்டியின் அருகினில் அமர்ந்து
சமாதானம் சொன்னாள்..

அம்மாவுக்கு முடியாத
போது
எங்களுக்கு
அறுசுவை உணவு படைத்துப் போட்டாள்..

கடைக்கு
செல்கையில்
அம்மாவுக்கு தெரியாமல்
'பேர் அண்ட் லவ்லி'
வாங்கிவரச் சொன்னாள்..

தம்பிகளை
காலேஜுக்கு அனுப்பி
தான்
'கரஸ்ஸில்' படித்தாள்..

வேலைக்கு சென்று
தன்
கல்யாணத்திற்கு தானே
பணம் சேர்த்தாள்...

கல்யாணம் முடிந்து
எங்களைக் கண்ணீரில் ஆழ்த்திக்
கணவன் வீடு சென்றாள்..

இன்றும்
வீட்டில் இறுக்கமான சூழ்நிலை நிலவும் போது
திடீரென-
தன்
சுட்டிக் குழந்தைகளுடன்
வந்து
சூழ்நிலையை
கலகலப்பாய் மாற்றுகிறாள்..

ஆம்-
அக்கா இல்லாத வீடுகள்
நிச்சயமாக
ஏதோ
ஒன்றை
இழந்திருக்கும்..

சமுத்ரா

20 comments:

  1. ஆம்-
    அக்கா இல்லாத வீடுகள்
    நிச்சயமாக
    ஏதோ
    ஒன்றை
    இழந்திருக்கும்..
    உண்மைதான்...
    ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பள்ளியில்
    எப்போதும்
    முதலில் வந்து வீட்டை
    புத்தகங்களால் நிரப்பினாள்..//

    இதில் புத்தகங்களால்.... சரியா?
    பத்க்கங்களால்..... என்றுவருமோ?

    நான் அப்படிதான் முதலில் படித்தேன்....

    இரண்டும் சரிதான்.... எனக்கென்னவோ பதக்கங்களால் மிக பொறுந்தொமோ எனப்பட்டது...

    உங்க கவிதை நல்லாயிருக்குங்க பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. ஆமாம்..புத்தகங்கள் தான்...அக்கா பரிசு வாங்கிய DICTIONARY கள் மட்டும் ஒரு இருபத்தைந்து வீட்டில் இருக்கும் :)

    ReplyDelete
  4. நல்ல கவிதை!

    அப்புறம் இந்த அக்காக்கள் மட்டும் தம்பிகள் அறியாது அழுவது எப்படி என அறிந்து வைத்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. சூப்பர் பாஸ்!

    ReplyDelete
  6. அற்புதம்...;))

    அதுவும் கடைசி 2 பத்தி எம்புட்டு உண்மையான விஷயம் ;)

    ReplyDelete
  7. உணர்ந்து எழுதி இருக்கீங்க.ஆனால், நிறைய தம்பிகள் கல்யாணம் என்று ஒன்று ஆனப்பின் அக்காவா அது யார் என்று கேட்கிறார்கள்.

    ReplyDelete
  8. என் அக்காவை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.

    ReplyDelete
  9. So sweet!!!!!!!!!! I liked this very much.

    ReplyDelete
  10. இந்த கவிதைக்கு நல்ல response வந்தது சந்தோஷம்...:)
    எல்லாருக்கும் நன்றிகள்..
    அப்புறம் இந்த கவிதை என் அக்காவிற்கு சமர்ப்பணம்..

    ReplyDelete
  11. நானும் ஒரு அக்கா என்பதால் இதை படிக்கும்பொழுது மனதுக்கு இதமாக இருந்தது.லிங்க் கொடுத்த தம்பி நிஜமா நல்லவனுக்கு நன்றி

    ReplyDelete
  12. Its Nice,
    As A Bro.... I Knew....
    But Not Only for elder its for all sisters....

    ReplyDelete
  13. தன்
    சுட்டிக் குழந்தைகளுடன்
    வந்து
    சூழ்நிலையை
    கலகலப்பாய் மாற்றுகிறாள்..//

    வெகு உண்மை அவ்வப்போது எங்கள் வீட்டிலும் சூழ்நிலை கலகலப்பாவது அவளால்தான்

    அருமை .வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  14. நானும் அனுபவித்து இருக்கிறேன்

    ReplyDelete
  15. enaku siblingslaam kidayatu.. :( but sisterhood is spl nu enaku teriyum...

    ReplyDelete
  16. Hello samuthra,

    Simply superb.. really i am also enjoyed this kind of same situations in my life..

    i am remembering my lifes.....

    ReplyDelete
  17. அக்கா இல்லாதா குறைகளில் பல தங்கைகளால் ஓரளவுக்கு பூர்த்தி செய்யப்படுகிறது என்று தோன்றுகிறது,நல்ல கவிதை

    ReplyDelete