Monday, January 10, 2011

சிறியது Vs பெரியது (சிறுகதை)

(முன் குறிப்பு: பின் குறிப்பைப் படிக்கவும்)

ரஞ்சன் மூன்று பெண்களைக் கடைசியாக தேர்ந்தெடுத்தான்...
பேஸ் புக்கில் அன்று அதிர்ஷ்ட வசமாக மூன்று பேரும் ஆன்லைன்..
மூன்று பேரிடமும் சாட் செய்யத் தொடங்கினான்...

1. காமினி
========

ரஞ்சன்: ஹலோ காமினி? எப்படி இருக்க?
காமினி : பைன் ரஞ்சன்..
ரஞ்சன்: life எப்படி போகுது ?
காமினி: going on ...அப்பறம் என்ன விஷயம்?
ரஞ்சன்: பெருசா எதுவும் இல்லை.சின்ன ப்ளான் தான்..
காமினி: ப்ளானா? என்ன?
ரஞ்சன்: இந்த சாட்டர்டே நீ ப்ரீயா?
காமினி:
ப்ரீ தான்னு நினைக்கிறேன்..
ரஞ்சன்:
மீட் பண்ணலாமா?
காமினி: sure ...எங்கே?

ரஞ்சன்: யூசுவல் இடம் தான். எம்.ஜி. ரோடு..அங்கிருந்து நாம ரெண்டு பெரும் என் வீட்டுக்குப் போறோம்..
காமினி: என்ன திடீர்னு? வீட்டுக்கெல்லாம்? I cant ...
ரஞ்சன்: சும்மா வா காமி..அப்பா அம்மா கிட்ட introduce பண்றேன்..இவ்ளோ நாளா பிரென்ட்ஸா இருக்கோம் கண்டிப்பா வரணும்..
காமினி: ஓகே...done ...


2.வர்ஷா
=======

ரஞ்சன்: ஹலோ வர்ஷ்!
வர்ஷா: என்ன?
ரஞ்சன்: பிசியா? அப்பறம் பேசறேன்
வர்ஷா: இல்லை..சொல்லு..என்ன விஷயம்?
ரஞ்சன்: why no msg ?
வர்ஷா: கொஞ்சம் பிசியா இருந்தேன்..அப்பறம் வேலையெல்லாம் எப்படி இருக்கு ?
ரஞ்சன்: போரிங்..Life also ...
வர்ஷா: why பா?
ரஞ்சன்: No Grilfriend ...
வர்ஷா; நடிக்காதே..உனக்கு கேர்ள் பிரண்டு இல்லைன்னா நம்ப முடியலை..
ரஞ்சன்: :D
ரஞ்சன்: BUZZ
வர்ஷா: சொல்லு
ரஞ்சன்: மீட் பண்ணி நாள் ஆச்சுல்ல..how about this saturday ?
வர்ஷா: ட்ரை பண்றேன்..காலைல பேங்க் போனும்.
ரஞ்சன்: மத்தியானம் வா..அப்படியே எங்கே வீட்டுக்கும் வரணும்..
வர்ஷா: anything special ?
ரஞ்சன்: சும்மா தான்..
வர்ஷா: ஓகே..PUT
ரஞ்சன்: என்ன?
வர்ஷா: மண்டு...Ping U Later ..
ரஞ்சன்: :(



3. பிரியங்கா
============

ரஞ்சன்: ஹே!
ப்ரியா: ஹலோ ரஞ்சன்
ரஞ்சன்: என்ன surprise ! நீ onlineல இருக்க?
ப்ரியா: வேலை முடிஞ்சுது..அதான் கொஞ்சம் அரட்டை அடிக்கலாம்னு...:)
ரஞ்சன்: உம்...திருந்திட்டயே ?
ப்ரியா: டேய்...
ரஞ்சன்: பிரியங்கா, நம்ம எத்தனை வருஷமா நண்பர்களா இருக்கோம்?
ப்ரியா: இதைக் கேட்கத்தான் பிங் பண்ணியா? :)
ரஞ்சன்: சும்மா சொல்லு
ப்ரியா: ஒரு ஒன்றரை வருஷம்..I guess ...
ரஞ்சன்: Don 't you think you should come to my house ?
ப்ரியா: என்ன ஒளர்றே?
ரஞ்சன்: ஓ இங்கிலீஷ் தெரியாதா? நான் உன்னை என் இல்லத்திற்கு அழைக்கிறேன்..
ப்ரியா: நக்கலா?
ரஞ்சன்: வீட்டுக்கு வாயேன்..இந்த சனிக்கிழமை..நானே PICK அண்ட் DROP பண்றேன்...
ப்ரியா: என்ன திடீர்ன்னு?
ரஞ்சன்: சும்மா தான்..வாட் டைம் யு ஆர் ப்ரீ?
ப்ரியா: வில் let u know ..
ரஞ்சன்:பாசிடிவ் பதிலை எதிர்பார்க்கிறேன்..


கிரண் இ-மெயிலில் அனுப்பியிருந்த இதை வேண்டா வெறுப்பாக படித்து முடித்தாள் சனா..
அவனுக்கு பிங் செய்தாள்...

சனா : உன் மொக்கைக் கதைக்கு நான் தான் கிடைத்தேனா?
கிரண்: ஹாய் சனா.எப்படி அய்யாவோட கதை?
சனா: நீ தான் மெச்சிக் கொள்ள வேண்டும்..உன் தலை கால் புரியாத கதையை...
கிரண்: இப்ப தானே first part அனுப்பிச்சிருக்கேன்? இன்னும் போகப் போகப் பார்...சூடு பிடிக்கும்
சனா: இதே போதும்...இனி மேலும் அனுப்பாதே..
கிரண்: நான் பெரிய எழுத்தாளன் ஆகிடுவேன்னு உனக்கு பொறாமை..
சனா: ஐயோ கடவுளே ...சரி அனுப்பித் தொலை.. (மனதில்) டெலீட் பண்ணிரலாம்..
கிரண்: தேங்க்ஸ்!
சனா: ஆமாம்..அந்த கதையில் ரஞ்சன் என் மூணு போரையும் வீட்டுக்கு வரச் சொல்றான்?
கிரண்; கெஸ் பண்ணு...
சனா: நோ ஐடியா..
கிரண்: வெயிட் பார் தி நெக்ஸ்ட் பார்ட்..
சனா: சும்மா சுஜாதா லெவலுக்கு பில்ட்-அப் பண்ணாதே...சொல்லு
கிரண்: அவங்க மூணு பேரையும் கடத்தப் போறான்..
சனா: :) நம்பிட்டேன்
கிரண்: நிஜமா...இதுக்காகத் தான் வருஷக் கணக்கா அவங்க கூட நல்லவன் மாதிரி பழகறான் அந்தப் பாவி...
சனா: சரி..எப்படி கடத்துவான்?
கிரண்: அதெல்லாம் உனக்கு எதுக்கு? அவனோட சில ரவுடி நண்பர்களும் கூட உதவி பண்ணுவார்கள்..
சனா: மோடிவ்?ஏன் ஒருத்தி பத்தாதா?
கிரண்: ஹே..அந்த மாதிரி விஷயத்துக்கு இல்லை..இது இன்னொரு மேட்டர்...
சனா: பாவம்பா அந்தப் பொண்ணுங்க...அதிலயும் அந்த கடைசி...யாரு? உம் 'பிரியங்கா' பாவம்.. அவளை உட்டுடு
கிரண்: :) யா பாவம் தான்..வாழ்க்கையையே தொலைக்கப் போறாங்க மக்குப் பொண்ணுங்க..கூப்பிட்டா இளுச்சிக்கிட்டு வீட்டுக்கு போயிர்றதா?
....
......
.....
கிரண்: சரி சரி..நம்ம மேட்டர எப்ப வீட்ல சொல்லப் போற?
சனா: கூடிய சீக்கிரம்..
கிரண்: இதையே தான் ரெண்டு வருஷமா சொல்ற..
சனா: கண்டிப்பா இந்த தடவை சொல்லிருவேன்..very shortly ..ஆனால் ஒரு ப்ராமிஸ் பண்ணனும் எனக்கு நீ..
கிரண்: ?
சனா: கல்யாணம் ஆனதும் blog எழுதறத நிறுத்திரனும்..
கிரண்: அடிப்பாவி ..எனக்கு நூறு followers இருக்காங்க ...
சனா: கவலைப் படாதே.அவங்க தற்கொலை பண்ணிக்க மாட்டாங்க...
கிரண்: :)
சனா: அப்பறம் இந்த வாரம் மீட் பண்றோம் தானே?
கிரண்: நீ சொன்னா அடியேன் வேணாம்னா சொல்லப் போறேன்?எங்கே ?
சனா: ........
கிரண்: எப்ப மகாதேவி?
சனா: சண்டே மகாதேவா...ஷார்ப் மூணு மணி..

ஞாயிற்றுக் கிழமை ஒரு மணிக்கு சனா மொபைலில் நிறைய கால்கள் பேசினாள்..முகம் வியர்த்திருந்தது..

"எல்லாம் ப்ளான் படி இருக்கா?"

"எஸ்..மேடம்.."

ஒரு வெள்ளைத் துணியில் ஏதோ ஒரு திரவத்தை தாராளமாகப் பீச்சி தன் கைப்பையில் வைத்துக் கொண்டாள்...

சமுத்ரா

பின் குறிப்பு:

[இந்த கதை ஒரு 'patternized ' கதை.கணிதத்தில் நீங்கள் 'FRACTAL " என்று கேள்விப்பட்டிருக்கலாம்..இது ஒரு வடிவம். கீழே உள்ளே படங்களைப் பாருங்கள்..







இதில் என்ன ஒரு தனித்தன்மை என்றால் ஒவ்வொரு சிறிய பகுதியும் பெரிய உருவத்தின் ஒரு சிறிய காப்பியாக இருக்கிறது.

பெரிய உருவம் என்பது அதன் பகுதிகளின் enlarge செய்யப்பட்ட உருவமாக இருக்கிறது.இயற்கையில் சில தாவரங்களில் இந்த FRACTAL வடிவம் இருப்பதாக சொல்கிறார்கள்..

இதை மனதில் வைத்து எழுதப்பட்ட இந்த சிறுகதையின் பாகங்கள் தான் காமினி, வர்ஷா மற்றும் பிரியங்கா.. கதையும் அதன் பாகங்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்...

as usual , உங்கள் கமெண்டுகள் தான் எனக்கு டானிக் ..ப்ளீஸ் கமென்டவும்..]



9 comments:

  1. வருகிறேன் ஆறுதலாக

    ReplyDelete
  2. எஸ் மகாதேவன்..அறிவியல் மாதிரியான விஷயங்களுக்கு வரும் வரவேற்பைப் பார்த்தால் இந்த ப்ளாக்-ஐ delete பண்ணி விடலாமா
    என்று கூட தோன்றுகிறது :(

    ReplyDelete
  3. wow... love those patterns ... and of course story too... :-)

    ReplyDelete
  4. நல்லா இருக்குங்க /////

    அற்புதம்

    ReplyDelete
  5. எஸ் மகாதேவன்..அறிவியல் மாதிரியான விஷயங்களுக்கு வரும் வரவேற்பைப் பார்த்தால் இந்த ப்ளாக்-ஐ delete பண்ணி விடலாமா
    என்று கூட தோன்றுகிறது..
    //

    வேண்டாம்ங்க ... வருவாங்க...வருத்தம் வேண்டாம்

    ReplyDelete
  6. கதைல வர்ற மோட்டிவ், அந்த எழுத்தாளினிக்கும் வருது... ஓகே :)

    தனி ஆவர்த்தனம் கொஞ்சம் கஷ்டம்தான்... ஆனா... அப்பத்தான் திறமை பளிச்சிடும்... நாங்கெல்லாம் கஷ்டப்படலையா? மனச தேத்துங்க சமுத்ரா :)

    ReplyDelete
  7. sir.. onnum purila :( :( vudunga.. padichuten.. enaku fractal pathi teriyum.. aana unga kathaitaan purila

    ReplyDelete
  8. லீனியர் -நான் லீனியர் மாதிரியான மேட்டரா சமுத்ரா?

    ReplyDelete