Friday, February 11, 2011

கொஞ்சம் ஸ்பெஷல் கவிதைகள்!





(Caution: these poems are non-linear)


டிரைன் தடக்-தடக்-தடக் என்று ஒரே சுருதியில் போகுமே? அதே மாதிரி லீனியராக கவிதை எழுதி எழுதி அலுத்துப் போய் விட்டது...வித்தியாசமாக முயற்சிக்கலாம் என்று யோசித்ததில் வந்தவை இவை...முதல் விதி என்ன என்றால் எல்லாக் கவிதைகளும் நாலு வரியில் முடிந்து விட வேண்டும்..

1 . முதல் வார்த்தைக்கு எதிரான வார்த்தையுடன் கவிதையை முடித்தல் :

இருட்டு கவிழத் தொடங்கி விட்டது
இன்றாவது சீக்கிரம் வருவாரா? இல்லை வழக்கம் போல பதினொரு மணியா?
ஆபீசில் திடீர் வேலை என்பாரா? அமெரிக்கா நண்பன் அழைத்தான் என்பாரா?
எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்!


2 . முதல் வார்த்தையை அப்படியே திருப்பிப் போட்டு கடைசி வார்த்தை

சாவி தான் ஊர் சுற்ற வேண்டும்
சட்டைப் பையிலோ பேன்ட் பாக்கெட்டிலோ அமர்ந்து கொண்டு
ஜம்மென்று ரயிலிலும் விமானங்களிலும்
பெட்டைப் பூட்டுகளுக்கு எதற்கு விசா??


3 . கடைசி வரியில் திடீர் திருப்பம்

கணவர் வரும் நேரம் ஆகி விட்டது! சீக்கிரம் போய் விடு
நாளை அவர் சென்றதும் மீண்டும் வந்து விடு
இனிக்க இனிக்க எவ்வளவு வேண்டுமானாலும் கொஞ்சலாம்
அவருக்குப் பூனைகள் என்றாலே பரம அலர்ஜி!


4 . முதல் வரியில் இருந்து விலகி எங்கெங்கோ ஊர் சுற்றி விட்டு மீண்டும் கடைசி வரியில் சப்ஜெக்டுடன் இணைதல்

ஹோம்-வொர்க் செய்தாயா? இங்கிலீஷ் புக் எடுத்துட்டயா?
நீரிழிவு நோயால் நிமிடத்திற்கு
பத்து பேர்கள் இறக்கிறார்கள்
டி.வி.யை ஆப் பண்ணும்மா! ஸ்கூல் பஸ் வந்துறப்போகுது!


5 . சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் மூன்று வரிகளை எழுதி விட்டு அவைகளைக் கடைசி வரியில் இணைத்தல்

கண்டக்டர் டிக்கெட்டில் எச்சில் செய்கிறார்..
விபூதி குங்குமம் மணக்கும் தட்டில் கற்பூர தீபம்
தக்காளி விற்ற காசையெல்லாம் வைத்து அவள் மீன் வாங்கி வந்தாள்
சமத்துவத்திற்கு சிறந்த உதாரணம் நாணயம்!


6 .உல்டாவாகப் படித்தாலும் பொருள் வரும்படி

தெருவில் யாரோ அடிபட்டுக் கிடந்தார்கள்
நமக்கென்ன என்று விலகிப் போனோம்!
இதயப் பகுதியில் ஏதோ 'சுர்' என்றது..
அம்மாவிடமிருந்து கால்.."டேய், அப்பாவுக்கு ஆக்சிடன்டாம்'


7 . தொடங்கிய வார்த்தையிலேயே முடித்தல் ; முற்றிலும் வேறு பொருளுடன்

சாமி இருக்குதுன்னு சத்தியமா சொல்றீங்க
பூமியெல்லாம் காப்பாத்து வாராமே? -மாமி
கோடிக் கணக்கில் நகை கொள்ளையர்கள் திருடறப்ப
வேடிக்கை பாத்துச்சோ சாமி?

[இப்படி உங்களுக்கு ஏதாவது கவிதை தோன்றினால் சொல்லுங்கள்..]

முத்ரா


11 comments:

  1. கவிதைகள் அருமை...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தமி ழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. காரணம் இல்லாமல் கவிதை என்ற
    பெயரில் காதலையும், சிலதையும்
    படம் போட்டு எழுதுபவர்களுக்கு இந்த
    முயற்சி பிடிப்பதில்லையே என்ன காரணம்

    விருப்பு கொண்டு ஆசையாய் எழுதியதை
    படித்துவிட்டு ஏதும் சொல்லவில்லை என்றல் ஏன்
    எழுதினோம்,எழுதிகிறோம் மிஞ்சியிருக்கின்றது
    முழுவதுமாய் மனதில் வெறுப்பு..

    இப்படி யாதார்தங்களை எழுத ஆசை..

    ரெம்ப நல்லா இருக்குங்க..தொடருங்கள்..))

    ReplyDelete
  5. அருமை பாஸ்..அனைத்தும் சூப்பர்..

    ReplyDelete
  6. [இப்படி உங்களுக்கு ஏதாவது கவிதை தோன்றினால் சொல்லுங்கள்.

    சமுத்ராவிற்கே உரியது... அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நான் லீனியர் முயற்சிகள் அருமை சமுத்ரா.சுவாரஸ்யமான பார்வையும் எழுத்தும்.

    ஆனாலும் லீனியரா எழுதப்படும்போது கசியும் உணர்வு இதில் செய்நேர்த்திக்காகவும் புத்திசாலித்தனத்துக்காகவும் விலையாய் மாறிவிடுகிறது.

    ReplyDelete