Tuesday, October 26, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-12

ஒரு பெண்மணி ,கலைந்த தலையுடனும் ,சிவப்பேறிய கண்களுடனும் மேக்-அப் எதுவும் இன்றியும் ஒரு பழைய கிழிந்து போன நைட்டியையும் தேய்ந்து போன செருப்புகளையும் அணிந்து கொண்டு தன் வீட்டு குப்பைகளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாகத் தெருவில் ஓடி வந்தாள்....

குப்பை வண்டி கிட்டத் தட்ட புறப்பட்டு விட்டிருந்தது....

டிரைவர் அவள் ஓடி வருவதைப் பார்த்து விட்டு வண்டியை நிறுத்தினான்...

"மன்னிச்சுக்குங்க....கொஞ்சம் லேட் ஆயிருச்சு" என்றாள் மூச்சு வாங்க....

டிரைவர் "பரவாயில்லை மேடம் .....அப்படியே பின்னாடி ஏறிக்கங்க" என்றான்

%%%%

ஏழு வயது பீட்டரும் ஆறு வயது லாராவும் கல்யாணம் செய்து கொள்வதாக தீர்மானித்தனர்...

பீட்டர் தன் அப்பாவிடம் சென்று "நாங்கள் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறோம்" என்றான்..

அதற்கு அவர் " சரி..ஆனால் நீங்கள் எங்கே தங்குவீர்கள் ?" என்றார்

"ஒரு வாரம் இங்கேயும் இன்னொரு வாரம் லாரா வீட்டிலும்"

"சரி பணத்திற்கு என்ன செய்வீர்கள்" என்று கேட்டார் அவர்...

"எனக்கு வாரம் இரண்டு டாலரும் அவளுக்கு ஒரு டாலரும் கிடைக்க ஏற்பாடு செய்து விட்டோம்"

"சரி..இன்னொரு முக்கியமான விஷயம்....கல்யாணம் ஆனதும் குழந்தை பெற்றுக் கொள்வீர்களா?" என்றார் ...

"ஓ அதுக்கு கொஞ்சம் வெயிட் பண்ணலாம்னு இருக்கோம்...அதுக்கு முன்னாடி லாரா எங்காவது முட்டை போட்டால் அதை நான் காலால் மிதித்து விடுவேன் ஆமாம்"....

~சமுத்ரா

4 comments:

  1. 2vadhu 2வது ஜோக் ஒரு சிறுகதைக்கே உரிய ட்விஸ்ட் இருக்கு,

    ReplyDelete
  2. முத ஜோக் இது வரை படிக்காத புது ஜோக்,அது பிளஸ்

    ReplyDelete
  3. neenga unmaiyilaeye joke dhan sodrengala.
    but 1st is nice

    ReplyDelete
  4. ரெண்டுமே நல்லா இருந்திச்சு ... முதலாவது செம .. வாழ்த்துக்கள்

    ReplyDelete