Monday, March 19, 2012

கலைடாஸ்கோப்-58

லைடாஸ்கோப்-58 உங்களை வரவேற்கிறது.

[]

வாழ்க்கை மிகவும் போரடிக்கிறது. செய்ததையே செய்து கொண்டு, பார்த்ததையே பார்த்துக் கொண்டு! நம் திரைப்படங்களில் காணும் EXTRA -ORDINARY விஷயங்கள் ஒருவிதத்தில் இந்த 'சலிப்பின்' வெளிப்பாடுகள் தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. குறிப்பாக ஹாலிவுட் திரைப்படங்கள்! GODZILLA ,UNSTOPPABLE , ZOMBIELAND என்று ! பஸ்ஸில் ஏறி உலகமகா சலிப்போடு தூங்கி வழிந்து கொண்டு ஆபீசுக்கு வந்துகொண்டிருக்கும் போது எதிரே ஒரு வானளாவிய மிருகம் ஒன்று ஹாயாக ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தால் வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்? அல்லது நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் ஒருவித வைரஸ் தாக்கி ரத்தவெறி பிடித்து நம்மை கடிப்பதற்குத் துரத்தினால் எப்படி இருக்கும்? (ஏன் இந்த கொலைவெறி?!) சலிப்பின் உச்சமான ஒரு ஞாயிறு மாலை வேளையில் வீட்டின் பின்புறத்தில் ஒரு வட்டவடிவ வாகனத்தில் நீலநிற குள்ள உருவம் வந்து இறங்கி நம்மைப் பார்த்து கையசைத்தால் எப்படி இருக்கும்?இப்படியெல்லாம் எதுவும் நடக்காமல் வாழ்க்கை ரொம்பவே சலிப்பாக நகருகிறது போங்கள். ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது.

திருமதி. கோல்ட்பெர்க் ஒருநாள் மாலை தன் வீட்டு பின்புறக் கதவைத் திறந்து தோட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தார்
அப்போது ஒரு வினோத உருவம் அவரை அவசரமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது.

திருமதி. கோல்ட்பெர்க் ஆச்சரியம் தாங்காமல் ' நீங்கள் வேற்று கிரகத்தில் இருந்து வருகிறீர்களா?' என்று கேட்டார்.
அந்த உருவம் சங்கடமாக மிகுந்த பிரயத்தனப்பட்டு தலையை அசைத்தது.
'ஆஹா, என்ன அதிசயம், நீங்கள் மார்சியன் தானே?' என்று மேலும் கேட்டாள்.
அந்த உருவம் முகத்தை அஷ்ட கோணலாக்கி சிரமத்துடன் மீண்டும் தலையசைத்தது.
'ஐயோ, உடனடியாக நான் பிரஸ்ஸை கூப்பிட வேண்டுமே என்ற அவள், 'ஆமாம், மார்ஸ் மிகவும் தூரம் ஆயிற்றே, இங்கே வருவதற்கு உங்களுக்கு ஆறுமாதங்கள் ஆகி இருக்குமே? 'என்று மேலும் கேட்டாள்
அந்த உருவம் ஹீனஸ்தாயியில் மீண்டும் தலையை அசைத்தது.
'உங்களிடம் நவீன தொழில்நுட்ப கருவிகள் உண்டா'?
அந்த உருவம் இப்போது அழுதுவிடும் போல இருந்தது. முக்கி முனகி தலையை ஆட்டியது.
'நீங்கள் ஏதோ சொல்ல விரும்புகிறீர்கள் என்று தோன்றுகிறது, தயவு செய்து சொல்லுங்கள்' என்றாள் அவள்
அந்த உருவம் ' அம்மையாரே, தயவு செய்து நான் உங்கள் டாய்லெட்டை உபயோகிக்கலாமா' என்றது.


[[]]

இரண்டு விளம்பரங்கள் பற்றிப் பேசலாம். ஒன்று +ve ஆக இன்னொன்று -ve ஆக.

முதலில் நெகடிவ். (அதுதான் நமக்கு கைவந்த கலை ஆயிற்றே)

இந்த விளம்பரத்தில் அம்மா,வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்துவிட்டாரே என்று சலித்துக் கொள்கிறாள். வீட்டில் இருக்கும் சின்னப்பையன் ஒருவன் ஏதோ ஒரு பிஸ்கட்டுக்கு ஃப்ரீ-யாகக் கொடுக்கப்படும் மாஜிக் -பொருளை வைத்துக் கொண்டு அவரை பயமுறுத்தி ஓட ஓட விரட்டி அடிக்கிறான். விருந்தினர்களை மதிக்கும் பழக்கத்தை நாம் தான் நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.இப்போது நிறைய பேர் அப்படி குழந்தைகளுக்கு சொல்லித்தருகிறார்களா என்று தெரியவில்லை.ஆனால் விருந்தினர்களை ஓட ஓட விரட்டுவது தான் குழந்தைகளின் ஹீரோயிசம் என்ற தவறான முன்னுதாரணங்களையாவது காட்ட வேண்டாமே தயவு செய்து!

இன்னொரு விளம்பரத்தில் ஒரு ஜீனி குப்பியில் இருந்து வெளிப்பட்டு குழந்தைகளை உங்களுக்கு என்ன வேண்டும் ? என்று கேட்கிறது. அவர்கள் தங்கள் அம்மா செய்யும் நூடுல்சிலேயே எல்லாம் அடங்கி இருக்கிறது. எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று திருப்தியுடன் சொல்கிறார்கள். நம் முன்னே ஒரு ஜீனி தோன்றி என்ன வேண்டும் எஜமானே என்று கேட்டால் நாம் எதுவும்
வேண்டாம் இருப்பதே போதும் என்று சொல்வோம் என்பது சந்தேகம்தான்.better job, better house, better car (better wife) என்று எதையாவது கேட்கவே செய்வோம். ஒரு குட்டிக்கதை நினைவில் வருகிறது.

ஒருத்தனுக்கு மிகவும் பெரிய அசிங்கமான மூக்கு இருந்ததாம். அதை நினைத்து தினமும் வருத்தப்பட்டானாம்.
ஒருநாள் அவன் பழைய சாமான்களைத் துடைத்துக் கொண்டிருந்த போது ஒரு ஜாடியில் இருந்து பலகாலங்களாக அடைபட்டுக் கிடந்த பூதம் ஒன்று வெளிப்பட்டு 'எஜமானே, உங்கள் மூன்று விருப்பங்களை நான் நிறைவேற்றுவேன், கேளுங்கள்' என்றதாம்.
அவன் பதட்டத்தில் 'எனக்கு அழகான மூக்கு வேண்டும்,
எனக்கு அழகான மூக்கு வேண்டும்' என்று நூறுமுறை கேட்டு விட்டானாம்.
உடனே அவன் உடலெல்லாம் ஏராளமான மூக்குகள் தோன்றி விட்டன.
இதைக் கண்டு அதிர்ந்த அவன் உடனே' ஐயோ இந்த மூக்கை எல்லாம் உடனே போகச் செய்' என்று கேட்டுக் கொண்டானாம்.
இப்போது எல்லா மூக்குகளும் மறைந்து மூக்கே இல்லாமல் அசிங்கமாக மாறி விட்டானாம்.
இப்போது அவன் மூன்றாவது விருப்பமாக 'எதுக்கு வம்பு,பழைய மூக்கையே கொடுத்துருப்பா' என்றானாம்.

[[[]]]

* நண்பர் ஒருவர் பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். இரவு நடுஜாமத்தில் கேமராவுடன் வெளியே கிளம்பி விடுவார். வீட்டை ஒருநாள் இரவு முழுவதும் பூட்டி வைத்து விட்டு உள்ளே கேமராவில் ரெகார்டிங்கை இரவு முழுவதும் ஒட விட்டு காலையில் பேய் எதாவது நடமாடி இருக்கிறதா, சத்தம் போட்டிருக்கிறதா என்று போட்டுப் பார்ப்பார்.இதுவரை எந்தப் பேயும் பிடிபடவில்லை என்று அலுத்துக் கொண்டார். எனவே உங்கள் வீட்டில் ஏதாவது பேய் நடமாட்டம் இருப்பதாக சந்தேகப்பட்டால் நண்பரின் போன் நம்பர் தருகிறேன்.:) பேசிப் பாருங்கள்.

பேயைப் பார்த்திருக்கிறீர்களா? என்ன பார்த்திருக்கிறேனா ? அதோடுதான் பத்து வருசமா குடும்பம் நடத்துகிறேன் என்று ஒரு ஆள் சொல்வது மிக மிக மிக சிக் ஜோக். இந்த மாதிரி ஜோக்குகளை தடை செய்ய வேண்டும்.

** தமிழ்மணம் திரட்டி இந்த வார நட்சத்திரமாக என்னை அறிவித்து உள்ளது. தமிழ் மணத்திற்கு நன்றிகள்.

[[[[]]]]

உங்கள் அப்பா எல்லாரிடமும் கை நீட்டுபவர். யாரைப் பார்த்தாலும் அஞ்சு இருக்கா பத்து இருக்கா? கைமாத்தா கொடுங்களேன் என்று வாய்கூசாமல் கேட்பவர். அம்மாவோ ஊட்டி கொடைக்கானல் என்று மலை மலையாகப் பார்த்து அவ்வப்போது டூர் போய் ஹாயாக உட்கார்ந்து கொள்கிறவள்; அம்மாவுடன் பிறந்த தாய்மாமன் ஒரு திருடன். வெட்கமே இல்லாமல் பெண்களிடமெல்லாம் திருடுபவன்.சரி.கூடப் பிறந்த அண்ணன் எப்படி என்றால் அவனுக்கு கால்சப்பை. இங்கேயும் அங்கேயும் நகராமல் இருந்த இடத்திலேயே உட்கார்ந்து நன்றாகத் தின்று தொப்பையை வளர்த்து வைத்திருக்கிறான்.இப்படி எல்லாம் சொந்தம் வந்து வாய்த்தால் உங்களால் எப்படி அய்யா சந்தோஷமாக இருக்க முடியும்? ஆனாலும் இவர் சந்தோஷமாக இருக்கிறார் பாருங்கள். முருகப்பெருமான் படங்களில் என்னமாக புன்னகை புரிகிறார்? முருகனுக்கு வாய்த்த ஒன்றாவது உருப்படியா பாருங்கள்:

அப்பன் இரந்து உண்ணி; ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி; சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ;ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணும் பெருமை இவை.

-காளமேகப் புலவர்.

[[[[[]]]]]

ஒருவரிடம் பேசும்போது எத்தனை டெசிபல் சத்தத்தில் பேசவேண்டும் என்று ஏதாவது வரைமுறை இருக்கிறதா என்று தெரியவில்லை. சில பேர் இருக்கிறார்கள். பிறந்த போதே மைக்கை எடுத்து முளுங்கியவர்கள். பேசினால் பக்கத்து ஊருக்கே கேட்கும். இன்னும் சில பேர் இருக்கிறார்கள். போர்வையை போர்த்திக் கொண்டு உள்ளே காதலியுடன் செல்போனில்
ஹஸ்கி வாய்சில் பேசும் லெவலிலேயே எல்லாரிடமும் பேசுவார்கள். சரி.சமீபத்தில் வந்திருந்த ஒரு இ-மெயில் இப்படி சொல்கிறது:

நாம் யாருடனாவது சண்டை போடும் போது சத்தமாக பேசுகிறோம் அல்லவா? அப்படியென்றால் நம் இருவருக்குமிடையே இடைவெளி அதிகரித்து விட்டது என்று அர்த்தம்.நம்மை விட்டு தொலைவில் நின்று கொண்டிருக்கும் ஒருவருடன் பேசவேண்டும் என்றால் சத்தமாக இரைகிறோம் அல்லவா? நம்மிடையே உள்ள இடைவெளி குறையக் குறைய
சத்தமாக பேசுவதை விட்டு விட்டு மெதுவாகப் பேசுகிறோம். காதலர்கள் 'குசுகுசு' என்று பேசுவதைப் பார்த்தால் அவர்கள் இருவரும் மிகவும் (மனதளவில்) நெருங்கி வந்து விட்டதை உணரலாம். இருவருக்கும் இடையே இடைவெளியே இல்லை என்றால் மௌனம் மட்டுமே நம் மொழியாக இருக்கும்.

[[[[[[]]]]]]

மௌனம்

திரியின் நுனியிலிருக்கும் சுடருக்கும்
வெடிமருந்துக்கும் நடுவே
இருக்கிறது
ஒரு மௌனம்
ஏதோ கடக்கவே முடியாத
ஒன்றைப்போல
அது
எவ்வளவு நீண்டதாக இருக்கிறது
என்னமாய் கனத்துப் போகிறது

-மனுஷ்ய புத்திரன்



[[[[[[[]]]]]]]

ஓஷோ ஜோக்.

ஹெர்னி மிக விரைவாக காரை ஓட்டிக் கொண்டுசென்றான். பின்னால் தொடர்ந்த ட்ராபிக் போலீஸ் ஒருவர் அவனை மறித்து 'சார், இப்படியா வேகமா ஓட்டுவீங்க உங்க மனைவி இரண்டு மைல்களுக்கு முன்னால காரில் இருந்து விழுந்துட்டாங்க' என்றார்.

ஹெர்னி 'ஒ அப்படியா, நான் கூட எங்கே என் காதுதான் செவிடாயிருச்சோன்னு பயந்து போயிட்டேன்' என்றான்.

சமுத்ரா

35 comments:

  1. Munusamy said...
    Average-தான்..........

    மிக்க நன்றி

    ReplyDelete
  2. சமுத்ரா,

    நல்ல கலவை!

    வயதாக ஆக ஆக வாழ்கை எல்லாருக்குமே ஒரு கட்டத்தில் போர் அடிக்கவே செய்துவிடும்,(அதிக வயது அதிக போர்) சின்னப்பசங்களுக்கு மட்டும் கிளர்ச்சியாக இருக்கும்,எல்லாமே புதுசா இருக்கும்,காரணம் அறியாமை,எல்லாம் சீக்கிரமா தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்,சின்ன வயசில் பொன் வண்டு நிஜமான தங்கம் என நினைத்து புடிச்சு தீப்பெட்டியில் வைப்பதுண்டு(ஹி..ஹி தங்க வேட்டை) அது பொன் அல்ல என தெரியும் வயசு வந்தவுடன் பொசுக்குனு போயிடுச்சு, அறியாமையே போர் அடிக்காம வைத்திருக்கும் :-))

    ----

    காளமேகம் நச், பாரதியார் கவிதை எழுத காளமேகம் ஒரு காரணம்னு படிச்சேன்,அவரைப்போல கவிதை எழுத முடியுமானு சவால் விடப்பட்டதாம்.
    ----
    //இப்படியா வேகமா ஓட்டுவீங்க உங்க மனைவி இரண்டு மைல்களுக்கு முன்னால காரில் இருந்து விழுந்துட்டாங்க' என்றார்.//

    கதவு இல்லாதா காரா? அப்படினா ஜீப் என்று சொல்லனும் :-))
    ஹி..ஹி லாஜிக்ல புலி ஆச்சே!

    ReplyDelete
  3. அருமையான கலைடாஸ்கோப்
    உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பகிர்வதன் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.

    ReplyDelete
  4. வாவ்... தமிழ் மணம் நட்சத்திரம் ஆனதுக்கு முதல்ல நன்றிங்க.,., அப்புறம் படிச்சிட்டு வர்றேன் :))

    ReplyDelete
  5. தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதற்கு முதலில் வாழ்த்துக்கள். பதிவும் அருமை.

    ReplyDelete
  6. தமிழ் மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள் ! இந்த வாரம் இரண்டு பதிவுகளுடன் நிறுத்தாமல் நிறைய எழுதுவீர்கள் என நம்புகிறேன் !

    ReplyDelete
  7. சுவாரசியமான கலவை. ரசித்து படித்தேன். அந்த பேய் ஜோக் எஸ்‌விசேகர் நாடகத்தில் சொன்னது. நட்சத்திர எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. எத்தனை வண்ணங்கள்!எத்தனை கோலங்கள்!அருமை.

    ReplyDelete
  9. நம் முன்னே ஒரு ஜீனி தோன்றி என்ன வேண்டும் எஜமானே என்று கேட்டால் நாம் எதுவும்
    வேண்டாம் இருப்பதே போதும் என்று சொல்வோம் என்பது சந்தேகம்தான்.better job, better house, better car (better wife) என்று எதையாவது கேட்கவே செய்வோம்./

    கலைடாஸ்கோப்பின் வண்ணக்கோலங்கள் எண்ணத்தில் நிறைந்தது.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  10. தமிழ்மண நட்சத்திரத்திற்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  11. \\நாம் யாருடனாவது சண்டை போடும் போது சத்தமாக பேசுகிறோம் அல்லவா? அப்படியென்றால் நம் இருவருக்குமிடையே இடைவெளி அதிகரித்து விட்டது என்று அர்த்தம்.நம்மை விட்டு தொலைவில் நின்று கொண்டிருக்கும் ஒருவருடன் பேசவேண்டும் என்றால் சத்தமாக இரைகிறோம் அல்லவா? நம்மிடையே உள்ள இடைவெளி குறையக் குறைய
    சத்தமாக பேசுவதை விட்டு விட்டு மெதுவாகப் பேசுகிறோம். காதலர்கள் 'குசுகுசு' என்று பேசுவதைப் பார்த்தால் அவர்கள் இருவரும் மிகவும் (மனதளவில்) நெருங்கி வந்து விட்டதை உணரலாம். இருவருக்கும் இடையே இடைவெளியே இல்லை என்றால் மௌனம் மட்டுமே நம் மொழியாக இருக்கும்.\\

    இது நல்லாயிருக்கே!! எப்படியெல்லாம் யோசிக்கிறாய் ங்கப்பா....

    ReplyDelete
  12. இந்த வார தமிழ்மண நட்சத்திரத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்க கலைடாஸ்கோப் அருமை. தொடர்கிறேன்.

    ReplyDelete
  13. \\எனவே உங்கள் வீட்டில் ஏதாவது பேய் நடமாட்டம் இருப்பதாக சந்தேகப்பட்டால் நண்பரின் போன் நம்பர் தருகிறேன்.:) பேசிப் பாருங்கள்.\\ உயிர்= நமது புலன்களால் உணரக்கூடிய பஞ்ச பூதங்களால் [நீர்,நெருப்பு, வாயு,நிலம், space ] ஆன ஸ்தூல சரீரம் + புலன்களால் உணர முடியாத சூட்சும சரீரம் [மனம், புத்தி, அஹங்காரம்] ஆகியவற்றாலும் சிறைபடுத்தப் பட்ட ஆன்மா. பேய்= சூட்சும சரீரம்+ ஆன்மா. [Waiting for the allotment of next suitable gross body]. By very definition பேய் என்ற ஒன்றை கண்ணால் பார்க்க முடியாது, வேறு எந்த கருவியாலும் பதிவு செய்ய முடியாது.

    ReplyDelete
  14. \\எனவே உங்கள் வீட்டில் ஏதாவது பேய் நடமாட்டம் இருப்பதாக சந்தேகப்பட்டால் நண்பரின் போன் நம்பர் தருகிறேன்.:) பேசிப் பாருங்கள்.\\ உயிர்= நமது புலன்களால் உணரக்கூடிய பஞ்ச பூதங்களால் [நீர்,நெருப்பு, வாயு,நிலம், space ] ஆன ஸ்தூல சரீரம் + புலன்களால் உணர முடியாத சூட்சும சரீரம் [மனம், புத்தி, அஹங்காரம்] ஆகியவற்றாலும் சிறைபடுத்தப் பட்ட ஆன்மா. பேய்= சூட்சும சரீரம்+ ஆன்மா. [Waiting for the allotment of next suitable gross body]. By very definition பேய் என்ற ஒன்றை கண்ணால் பார்க்க முடியாது, வேறு எந்த கருவியாலும் பதிவு செய்ய முடியாது.

    ReplyDelete
  15. \\எனவே உங்கள் வீட்டில் ஏதாவது பேய் நடமாட்டம் இருப்பதாக சந்தேகப்பட்டால் நண்பரின் போன் நம்பர் தருகிறேன்.:) பேசிப் பாருங்கள்.\\ உயிர்= நமது புலன்களால் உணரக்கூடிய பஞ்ச பூதங்களால் [நீர்,நெருப்பு, வாயு,நிலம், space ] ஆன ஸ்தூல சரீரம் + புலன்களால் உணர முடியாத சூட்சும சரீரம் [மனம், புத்தி, அஹங்காரம்] ஆகியவற்றாலும் சிறைபடுத்தப் பட்ட ஆன்மா. பேய்= சூட்சும சரீரம்+ ஆன்மா. [Waiting for the allotment of next suitable gross body]. By very definition பேய் என்ற ஒன்றை கண்ணால் பார்க்க முடியாது, வேறு எந்த கருவியாலும் பதிவு செய்ய முடியாது.

    ReplyDelete
  16. இடைவெளி விஷயம் நன்றாக இருக்கிறது. இந்த வாரம்(மாவது!) அதிகம் எழுதுங்கள்!

    ReplyDelete
  17. தமிழ் மண நட்சத்திர வாழ்த்துகள்....

    வர்ண கலவை அருமை...

    ReplyDelete
  18. தமிழ் மண நட்சத்திர வாழ்த்துகள்....

    வர்ண கலவை அருமை...

    ReplyDelete
  19. அப்பன் இரந்து உண்ணி; ஆத்தாள் மலைநீலி
    ஒப்பரிய மாமன் உறிதிருடி; சப்பைக்கால்
    அண்ணன் பெருவயிறன் ;ஆறுமுகத்தானுக்கு இங்கு
    எண்ணும் பெருமை இவை
    >>>>
    இந்த விஷயம் புதுசா இருக்கே. முருகனுக்கு இப்பேற்பட்ட தொல்லைகள் இருக்கா?! பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  20. வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  21. நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள்!

    //'நீங்கள் ஏதோ சொல்ல விரும்புகிறீர்கள் என்று தோன்றுகிறது, தயவு செய்து சொல்லுங்கள்' என்றாள் அவள்
    அந்த உருவம் ' அம்மையாரே, தயவு செய்து நான் உங்கள் டாய்லெட்டை உபயோகிக்கலாமா' என்றது...///

    ஹஹ்ஹா அப்படியே சுஜாதாவின் வாரிசு!!

    கவிதை(மனுஷ்யபுத்திரன்) காளமேகப்புலவர் ஓஷோ என்று கலைடாஸ்கோப் கண்ணையும் மனதையும்கவர்கிறது!

    ReplyDelete
  22. தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்...தொடர்ந்து கலக்குங்கள் சகோதரி....

    ReplyDelete
  23. @ரெவெரி, சகோதரியா?:):)

    ReplyDelete
  24. அண்டப் பயணத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைத்திருக்கிறீர்கள்?
    ‘இந்த வார நட்சத்திரம் ஆனதற்குப் பாராட்டுகள்.
    உங்கள் எதிர்காலமும் நட்சத்திரம் போல ஒளிவிடட்டும்.
    வாழ்க.

    ReplyDelete
  25. மனம் நிறைந்த வாழ்த்துகள் சமுத்ரா !

    ReplyDelete
  26. விளம்பரங்கள், மூக்கு , காதல் மௌனம் எல்லாமே அசத்தல்.ஓஹோ ஜோக் சூப்பர் !

    ReplyDelete
  27. அந்த மூக்கு ஜோக்கை மிகவும் ரசித்தேன். கடைசியாக நீங்கள் சொல்லியிருக்கும் விஷயத்தில் அனுபவபூர்வமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவன் நான். ஏன்தான் சிலர் இப்படி மைக்கை முழுங்கிய குரலில் கத்திப் பேசித் தொலைக்கிறார்களோ என்று நொந்து கொள்வதுண்டு. காளமேகப் புலவரின் பாடல் புதியது எனககு! பேய் விஷயம்... நோ கமெண்ட்ஸ்! அந்த ஸயன்ஸ் பிக்ஷனில் வருவது போன்ற உங்கள் விபரீத ஆசை(!)யும், அதைத் தொடர்ந்து வந்த விஞ்ஞான ஜோக்கும் பிரமாதம்! தமிழ்மண நட்சத்திரமாய் ஜொலிப்பதற்கு (சற்றே தாமதமாய்) இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. Samudra sir... reponse'lam kudukkuringa... enna sir achu??.... :-)

    ReplyDelete
  29. தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதற்கு முதலில் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. # பேய் ஆராய்ச்சி..

    உடம்புக்கு வெளியே அலையும் ஆத்மாதான் பேய் என்பவர்கள் யாராவது நாய், பூனை, நுளம்பு, செடி கோடி இவற்றின் பேய்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்களா என அறிய விரும்புகின்றேன்.

    எனது கருத்துப்படி உடல்களான ஹாட்வேரை இயக்கும் சாப்ட்வேர் தான் மனம். வெவ்வேறு உடல்களிடையே சாப்ட்வேர் மாற்றிக் கொள்வதற்கு system requirements ஒத்துக் கொள்ளாது. (ஐன்ஸ்டீன் ஆத்மாவுக்கு கரப்பானின் கால்களை இயக்கத் தெரிந்திருக்காது)

    # தமிழ்மணம் நட்சத்திரம்

    வாழ்த்துக்கள்...

    # காளமேகப் புலவர்

    அந்தக் காலத்தில் இப்படியான ஒரு லேட்டரல் திங்கர் இருந்திருப்பது ஆச்சரியம்தான்.

    # மௌனம்

    கலக்கல்

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் சமுத்ரா.

    ReplyDelete
  33. தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள். பதிவும் அருமை

    ReplyDelete