Monday, July 25, 2011

அணு அண்டம் அறிவியல் -41

அணு அண்டம் அறிவியல் -41 உங்களை வரவேற்கிறது.

கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக் கிடக்கும்.சின்ன உளி தட்டித் தட்டி எழுப்பும்! -ஒரு திரைப்படப்பாடல்

[ஹலோ, ஸ்டூடண்ட்ஸ்,எப்படி இருக்கீங்க? ஏதோ ஃபிசிக்ஸ் க்ளாஸை தவறாமல் Attend செய்கிறீர்கள் சந்தோஷம் . இயற்பியல் உங்களுக்கு புரிகிறது என்று நம்புகிறேன்..இப்போ புரியற மாதிரி நடித்து விட்டு கடைசியில் ஃபெயில் ஆனால் அப்புறம் நடப்பதே வேறு ஆமாம்]


இடம் : டி லா வார் ஆய்வகம், ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி

வி
ஞ்ஞானிகள் ஒரு மிகத் துல்லியமான உயர் தொழில் நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு கேமிராவை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது அதில் தற்செயலாக ஒரு பூவின் மொட்டு பதிவானது. அந்த ஃபிலிமை டெவலப் செய்து பார்த்த போது அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அதில் ஓர் அழகிய மலர்ந்த பூவின் படம் பதிவாகி இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட பூ எதுவும் லாபில் இல்லை.கேமிராவில் ஏதோ கோளாறு இருக்கலாம் என்று அவர்கள் அதை மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்த்தனர்.ஆனால் கேமிராவில் எந்த குறைபாடும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த
கேமிரா மொட்டின் எதிர்கால இமேஜைக் காட்டியிருப்பது தெரிந்தது. அந்த மொட்டு மலரும் வரை காத்திருந்து பார்த்த விஞ்ஞானிகளுக்கு இன்னொரு ஆச்சரியம். அது போட்டோவில் இருந்தது போலவே அச்சு அசலாக இருந்தது.எவ்வளவுதான் துல்லியமான கேமிராவாக இருந்தாலும் அது ஒரு பொருளின் எதிர்கால உருவத்தை எப்படி காட்டும்? இதிலிருந்து பார்க்கும் போது நமக்கு எதிர்காலமாக தோன்றும் சில விஷயங்கள் எங்கோ ஒரு சூட்சுமமான தளத்தில் இப்போதே நடந்து கொண்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. சிற்பம் ஒன்று கல்லில் மறைந்திருக்கவே செய்கிறது. எதிர்காலம் நமக்குள் எங்கோ சூட்சுமமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது! மேலோட்டமாகப் பார்க்கும் ஒருவருக்கு காலம் நகர்வது போலத் தோன்றுகிறது. நதி ஒன்றின் மேல்தளத்தில் அதன் ஓட்டம் அதிகமாக இருப்பது போல. ஆனால் உள்ளே மூழ்க மூழ்க ஓட்டம் குறைந்து நதி அமைதியாகிறது. ஞானத்தில் மூழ்கிய ஒருவருக்கு காலம் நகர்வதில்லை. ஆம்..காதலில் மட்டும் அல்ல...தியானத்திலும் காலம் நின்று போகிறது.

Extra Sensory Perception (ESP ) எனப்படும் அதீத புலன் ஆற்றல் உள்ளவர்களைப் பற்றி நீங்கள் கேட்டிருக்கலாம். அவர்களால் வருங்காலத்தை சுலபமாகப் பார்க்க முடியும். விமான விபத்துகளையும், கப்பல் விபத்துகளையும் அவை நடப்பதற்கு முன்னரே கணித்து சொன்னவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.தென் ஆப்பிரிக்காவில் இ.எஸ்.பி பவர் இருந்த ஒரு சிறுமியிடம் எப்படி உன்னால் எதிர்காலத்தை கணிக்க முடிகிறது என்று கேட்டபோது அவள் 'எனக்கு அது கண் முன்னே நேரடியாக நடப்பது போல தோன்றுகிறது ' என்றாளாம். சரி எதிர்காலத்தை மட்டும் அல்ல இறந்த காலத்தையும் நம்மால் பார்க்க முடியும். இதற்கு ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்.மேலே அண்ணாந்து வானத்தைப் பார்த்தாலே போதும். சூரியனின் எட்டு நிமிடங்கள் பழமையான பிம்பம், சந்திரனின் ஒரு நிமிடம் பழமையான பிம்பம், நட்சத்திரங்களின் வருடக்கணக்கில் பழமையான பிம்பம் என்று ஒரு கடந்த கால இமேஜ்களை நாம் பார்க்க முடியும். நாம் ஒருவரைப் பார்க்கும் போது கூட அவற்றின் கடந்த கால இமேஜைத் தான் பார்க்கிறோம். 'இப்போது' 'Present ' என்பது ஒரு மாயை போல மிக மிக மெல்லியதாக இருக்கிறது.



















மனிதன்
என்ற பிராணிக்கு சாதாரணமாக ஐந்து புலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நம்மால் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு சைட் அடிக்க முடியும். பீட்சாவை ருசிக்க முடியும். சாக்கடை நாற்றம் வீசினால் கர்சீப் எடுத்து மூக்கை மூடிக் கொள்ள முடியும். எப்.எம்.இல் வரும் ஒரு குத்துப் பாடலை கேட்க முடியும். காதலி/காதலனின் முத்தத்தை உணர முடியும். சரி இந்த ஐந்து தான் இறுதியான புலன் எல்லையா என்றால் இல்லை. எட்டு புலன்கள், பத்து புலன்கள் இருக்கும் சில உயிரினங்கள் கூட பிரபஞ்சத்தில் இருக்கலாம். பூமியில் இருக்கும் மனுஷப் பயலுக்கு ஐந்தே அதிகம் என்று இயற்கை நினைத்திருக்கலாம். (ஐந்தை வைத்தே இந்த ஆட்டம் போடுகிறானே? !)

எனவே ஐந்து புலன்களுக்கு எதுவும் எட்டவில்லை என்றால் அது இல்லை என்று அர்த்தம் இல்லை. ஏன் இந்த ஐந்து புலன்களுக்கு
ம் கூட சில வரம்புகள் இருக்கின்றன. நம் ரெட்டினாவில் BLIND SPOT எனப்படும் காண இயலாத ஒரு பகுதி இருப்பதாக சொல்கிறார்கள்.மேலே உள்ள படத்தைப் பார்க்கவும். இடது கண்ணை இறுக்க கையால் மூடிக் கொண்டு வலது கண் வழியாக கூட்டல் குறியைப் பார்க்கவும். உங்கள் தலையை ஸ்க்ரீனில் இருந்து சுமாராக ஒரு அடி தொலைவில் வைக்கவும். இப்போது அந்த சிறிய புள்ளி உங்கள் பார்வையில் இருந்து மறைந்து போவதை பார்க்க முடியும். அது ரொம்ப சின்னது என்று நினைத்தால் இதே மாதிரி இடது கண்ணை மூடிக் கொண்டு கீழே உள்ள கூட்டல் குறியைப் பார்க்கவும். ஒரு குறிப்பிட்ட தொலைவில் (தலையை முன்னும் பின்னும் நகர்த்தி FOCUS செய்க) அந்த சிவப்பு பெருக்கல் குறி மறைந்து விடுவதை உணரலாம். இப்படி ஒரு குருட்டுக் கண்ணை வைத்துக் கொண்டே நாம் 'இந்த வயசிலும் நான் ஊசிக்கு நூல் கோர்ப்பேன்' என்றெல்லாம் வசனம் பேசுகிறோம்!

வினாடிக்கு இருபதாயிரம் தடவைக்கு மேல் அதிரும் அதிர்வுகளை நம் காது வடிகட்டி விடுகிறது. அதே போல வினாடிக்கு இருபது முறைக்கும் கீழ் அதிரும் அதிர்வுகளையும்! வௌவால்கள் ஏதோ மெளனமாக பறப்பது போல நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அவை ஒவ்வொரு நொடியும் அதீத மீயொலிகளை எழுப்பியவண்ணம் உள்ளன. அவற்றை நாம் கடந்து சென்றால் 'சரியான செவிடன் போறான் பாரு, ரெண்டு ஸ்பீக்கரும் டோட்டலா அவுட்டு போல இருக்கு ' என்று நினைத்தாலும் நினைக்கும். வாசனைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். மிருகங்களுடன் ஒப்பிடும் போது நாம் வாசனையில் ஜீரோ. கதவின் கைப்பிடியில் உள்ள வாசத்தை வைத்துக் கொண்டு மைல் கணக்கில்ஓடும் துப்பறியும் நாய்களைப் பார்த்து என்றாவது நாம்
வியந்திருக்கிறோமா? ? இல்லை நாமெல்லாம் ஹீரோயின்களைப்பார்த்து மட்டுமே வியந்து கொண்டிருக்கிறோம்.

சரி மனிதனை ரொம்ப கேவலப்படுத்த வேண்டாம். தொடு உணர்வைப் பொறுத்த வரை நமக்கு தோல் கொஞ்சம் sensitive . மற்ற விலங்குகளுக்கு HARD ! ஒட்டகம் முட்களை முறுக்கு சாப்பிடுவது போல மென்று நிதானமாக அனுபவித்து (?) சாப்பிடுகிறது. அதன் நாக்கு மிகவும் தடிப்பானது,insensitive ! . எருமையை எத்தனை அடித்தாலும் அது அசைந்து கொடுப்பதில்லை. ஆனால் நமக்கோ ரேசர் சற்றே கன்னத்தில் கீறினாலும் கம்பத்தின் பின்னே காத்துக் கொண்டிருந்த நரசிம்ம சுவாமி போல 'டான்' என்று ரத்தம் எட்டிப் பார்த்து விடுகிறது. பகுத்தறிவு அற்ற மிருகங்களுக்கு தொடு உணர்வு அதிகம் தேவையில்லை என்று இயற்கை நினைத்திருக்கலாம்.மனிதனுக்கு தான் 'தீண்டாய் மெய் தீண்டாய் , தீண்டித் தீண்டித் தீயை
மூட்டுகிறாய் ! 'பேரின்பம் மெய்யிலா , நீ தீண்டும் கையிலா' என்று ரொமான்ஸ் செய்வதற்கு தொடு உணர்வு அதிகம் தேவைப்படுகிறது. வாசனையை வைத்துக் கொண்டு விலங்குகள் ஆளை அடையாளம் காண்பது போல தொடு உணர்வை வைத்துக் கொண்டே நம்மால் மனிதர்களை அடையாளம் காண முடியும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நாம் நம் கண்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்!


இந்த LIMITATION களின் காரணமாக தான் சில அரைவேக்காடுகள் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றன. [என்ன தான் அறிவியல் தொடர் எழுதினாலும் என்னால் கடவுள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை] கடவுளை அறிவதற்கு நம் புலன்கள் போதுமானதாக இல்லை என்று வேண்டுமானாலும் சொல்லலாம். உதாரணமாக நம்மை சுற்றியும் கணக்கில்லாத அலைகள் திரிந்து கொண்டுள்ளன. ஆனால் நம் கண்கள் ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தை (VISIBLE SPECTRUM ) மட்டுமே கிரகித்து உள்ளே அனுப்பும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன. எல்லா அலைநீளத்தையும் கிரகிக்கும் படி இயற்கை வைத்திருந்தால் உங்களால் உங்கள் காதலி முகத்தைக் கூட பார்க்க முடியாமல் ரெயின்போ FM , சூரியன் FM , சன் டி.வி , ராஜ்
டி.வி, ஜெயா டி.வி ஒளிபரப்பும் அலைகள் தொந்தரவு செய்யும். THANK GOD ! ஒரு ரேடியோ ரிசீவர் இருந்தால் மட்டுமே அதை கிரகிக்க முடியும். அதே போல கடவுளை கிரகிக்கவும் வேறு ஒரு புலன் நமக்குத் தேவைப்படுகிறது. சமஸ்கிருதத்தில் 'கோசர' (Gocara) என்றால் புலன்களால் கிரகிக்கக் கூடியது என்று பொருள் . சமஸ்கிருதம் கடவுளை அகோசர என்கிறது. அதாவது புலன்களுக்கு அப்பாற்பட்டவன்! Beyond Senses ! (God is beyond sense..not non -sense !!!) இது வரை அறிவியல் கண்டுபிடித்த எந்த கருவியிலும் கடவுள் இருப்பதற்கான சான்று பதிவாகவில்லை என்கிறார் ஒருவர். சரிதான்..எப்படி பதிவாகும்? அல்வாவை காதுக்குள் வைத்தால் அதன் சுவை நமக்குத் தெரியுமா? மிக்சியை ஆன் செய்து விட்டு பாட்டு கேட்கவில்லை என்றால் கேட்குமா ?

ஏழு என்ற எண் ஹிந்து மதத்தில் முக்கியமான ஒரு எண். இது ஓர் எண் என்பதை விட ஒரு குறியீடு. ஏழு உலகங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. ஏழு ஜன்மங்கள் என்கிறார்கள். ஏழு ஸ்வரங்கள், ஏழு நாட்கள் !பாலாஜி ஏழு மலைகள் மீது வீற்றிருக்கிறார். இது எதைக் குறிக்கிறது என்றால் மனிதனின் ஆறு புலன்களை கடந்து ஏழாவதாக ஒரு புலனின் மூலமாகத் தான் கடவுளை உணர முடியும் என்பதை. ஏழாவது நாளான சனிக்கிழமை தான் பாலாஜிக்கும் உகந்த நாளாக இருப்பதை கவனியுங்கள்.
சப்த ரிஷி, சப்த கன்யா என்று ஏழு ஒரு ஸ்பெஷல் நம்பர் தான் போங்கள்..(சரி அந்த ஏழாவது புலன் என்ன ?? ஹ்ம்ம்...மிகப் பெரிய விஷயங்களைக் கேட்கிறீர்கள் பாஸ்! )

இயற்பியல் வகுப்பில் எப்படியோ 'பயாலஜி' 'ஆன்மிகம்' எல்லாம் வந்து விட்டது. சாரி...

நாம் நம் உலகத்தை அல்லது பிரபஞ்சத்தை மூன்று பரிமாணமாகப் பார்க்கிறோம். சரியாக சொல்வதென்றால் வெளியின் மூன்று பரிமாணங்கள் மற்றும் காலத்தின் ஒரு பரிமாணம். நாம் இயற்பியலின் கணக்குகளை எல்லாம் இந்த நான்கு பரிமாணங்களை வைத்து தான் போடுகிறோம். E =MC2 என்பதும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த மூன்று பரிமாணங்கள் தேவையான பரிமாணங்கள்..ஆனால் போதுமானவை அல்ல. (Necessary but not sufficient) காலத்தையும் சேர்த்து நம் பிரபஞ்சம் பதினொரு பரிமாணங்கள் கொண்டதாக இருக்கலாம் என்கிறார்கள். நம் மூளை மூன்று பரிமாணங்களை மட்டுமே கிரகிக்கக் கூடியது. (நீளம், அகலம், உயரம்) வெளியின் நான்காவது பரிமாணம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. நான்காவது பரிமாணத்தை ஓரளவு உணர்ந்து கொள்ள விக்கிபீடியா ஒரு படம் போட்டுள்ளது . அதைக் கீழே பாருங்கள். இது ஒரு நான்கு பரிமாண CUBE !



நாம் ஏன் இந்த பிரபஞ்சத்தை மூன்று பரிமாணம் உள்ளதாகப் பார்க்கிறோம் என்றால் இதற்கு மீண்டும் 'ஆன்த்ரோபிக்' தத்துவத்திடம் சரணடைய வேண்டும். குறைந்த பட்சம் (அல்லது அதிக பட்சம்!) மூன்று பரிமாணங்கள் உள்ள ஒரு உலகில் தான் நம்மைப் போன்ற அறிவு ஜீவிகள் தோன்றி
நாம் ஏன் இந்த பிரபஞ்சத்தை மூன்று பரிமாணம் உள்ளதாகப் பார்க்கிறோம்?? என்று (அதிகப்ரசங்கித்தனமாக) கேள்வி எழுப்ப முடியும். சரி இந்த பிரபஞ்சம் ஒரு பரிமாணம் உள்ளதாக இருந்தால் எப்படி இருக்கும்? இரண்டு பரிமாணம் உள்ளதாக இருந்தால் எப்படி இருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம்.



ஒரு பரிமாண உலகில் நமக்கு நீளம் மட்டுமே இருக்கும். அகலம் உயரம் எதுவும் இல்லை. படத்தில் A என்பவர் B யை கடந்து அப்பால் செல்லவே முடியாது. A எப்போதும் B இக்கு இடது பக்கத்திலேயே இருக்க வேண்டி வரும். எனவே A யும் C யும் ஒருபோதும் கைகுலுக்கி ஹலோ சொல்லவே முடியாது. (பார்க்கவே முடியாது !) ஒவ்வொருவரும் தமக்கு பக்கத்தில் இருப்பவரை (மட்டுமே) கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். என்ன ஒருவர் அதிக பட்சமாக இரண்டு பொண்டாட்டி வைத்துக் கொள்ளலாம் . ஆனால் ஒரு ஆணுக்கு இடம் வலம் இரண்டும் ஆணாக இருந்து தொலைத்து விட்டால் பிரச்சனை (ஹி ஹி குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் !) மொத்தத்தில் ஒரு பரிமாண உலகில் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாக இருக்கும்.

இரண்டு பரிமாண உலகில்(நீளம்,உயரம்) கொஞ்சம் மேம்பட்ட வாழ்க்கை இருக்கும். படத்தில் இருக்கும் A என்பவர் தம் வீட்டு கொல்லைப்புரத்தை அடைய வீட்டின் கூரை மீது ஏறி இறங்க வேண்டி இருக்கும். இருபரிமாண உலகில் செய்தித்தாள் ஒரு பரிமாணமாக இருக்கும் (புள்ளிகள் கோடுகள்) மேலும் இருபரிமாண வெளியில் வழியில் வரும் தடைகளைக் கடந்து செல்ல நாம் அதன் மீது ஏறி மேலே பறந்து செல்ல வேண்டியிருக்கும். (அகலம் இல்லை என்பதால் ) இன்னொரு முக்கியமான விஷயம். இருபரிமாண உயிரினங்களுக்கு உணவு செல்லும் வழி , கழிவு வெளியேறும் வழி என்று தனித்தனியாக இருக்காது. அப்படி இருந்தால் அந்த உணவுக்குழல் பிராணியை இரண்டாக வெட்டி விடும். எனவே நமக்கு இரண்டும் ஒரே வாயிலின் மூலம் நடக்கும். உணவு உண்டு முடித்ததும் நாம் கழிவை வாந்தியாக வெளித்தள்ள வேண்டியிருக்கும். அதே வாய் வழியாக. நல்ல வேளை கடவுள் இந்த மாதிரி
அருவருக்கத்தக்க சங்கடங்களை நமக்கு கொடுக்கவில்லை. Fortunately we live in a Three-dimensional Universe!!!!


சரி... ஏன் நான்கு (3 +)பரிமாணங்கள் இருக்கக் கூடாது? என்று கேட்கிறீர்களா...I like your approach ! நல்ல கேள்வி..நான்கு பரிமாண உலகில் we will have an enriched life!!! ஆனால் நான்கு பரிமாண வெளியில் கோள்களை அவற்றின் ஓடுபாதையில் நிறுத்துவது கடினம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இது எப்படி என்றால் உங்களால் ஒரு கோட்டை (1D ) சுலபமாக காகிதத்தில் வரைய முடியும். (கை நடுங்காமல்) அதே ஒரு செவ்வகம் வரையச் சொன்னால் (2D ) கொஞ்சம் கஷ்டம். கை கொஞ்சம் அங்கே இங்கே போய் வரும். PERFECT RECTANGLE வரைவது கொஞ்சம் கஷ்டம். இதே செவ்வகத்தை காகிதத்திற்கு பதில் வெளியில் (SPACE ,3D ) வரைய சொன்னால் உங்கள் கை இன்னும் குழம்பும். தொடங்கின இடத்தில் தான் முடிக்கிறோமா என்று தெரியாது. அதாவது பரிமாணங்கள் அதிகமாக அதிகமாக சுதந்திரம் அதிகரிக்கும்.ஆனால் பொருட்களை கச்சிதமாக வடிவமைக்கும் வாய்ப்பு குறைகிறது. கடவுள் அல்லது இயற்கை அல்லது ஏதோ நமக்கு மேம்பட்ட ஒன்று Nameless ! அது (அவன் , அவள், அவர்) எத்தனை கைதேர்ந்த ஒரு ஆர்க்கிடெக்ட் என்று இப்போது புரிகிறதா ?

யார் அங்கே? டவுட் கேட்பது? ஹ்ம்ம் கேளுங்கள் சந்தோஷம்...என்னது மொத்தம் பதினொரு பரிமாணங்கள் இருந்தால் மற்ற ஏழும் எங்கே போச்சா? ஐயோ ஆளை விடுங்கள் என்னை STRING THEORY வரை இழுத்து விட்டு விடுவீர்கள் போலிருக்கிறதே?


சமுத்ரா ...










22 comments:

  1. அருமை நண்பரே,.ஸ்ரிரிங் தியரிக்குள் காலடி எடுத்தாயிற்று அல்லவா!!!!!!!!!.தவிர்க்க முடியாது!!!!!!!!!!!!தமிழில் மிக எளிமையாக விளக்கமாக,சொல்கிறீர்கள்.தொடருங்கள் நன்றி.

    ReplyDelete
  2. arumaiyana vilakkam... arumaiyana pathivu.

    ReplyDelete
  3. Very Good Informative . Puthiya parimanangal


    Paul

    ReplyDelete
  4. தமிழில் மிக எளிமையாக சொல்கிறீர்கள் நன்றி நண்பரே

    ReplyDelete
  5. மனிதர்களுக்கு பல விஷயங்கள் சிந்தனையில் இருந்தாலும் அவைகளை ஒன்றுபோல் கோர்வையாக சரியான எடுத்துக்காட்டுகளுடன் எழுதுவது என்பது ஒரு சிரமமான ஒன்று. அந்த திறமையை சரியான வகையில் வளர்த்து வைத்துள்ளீர்.

    சில அறியப்படாத விசயங்களும் தெரிந்து கொண்டேன். தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. Request personal Q-s through mail please.

    ReplyDelete
  7. அன்புள்ள சகோதர்/சகோதரி,

    மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

    பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

    தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

    நன்றி.

    அன்புடன்,
    அதிரைக்காரன்
    adiraiwala@gmail.com

    ReplyDelete
  8. நல்ல பதிவு நன்பரே...

    நீங்க கட்டாயம் இந்த லின்க்`ஐ கேட்கனும்`னு விரும்புறேன். முடிந்தால் முயற்ச்சிக்கவும். மதங்கள், வேதங்கள், உங்கள் கடவுள் பற்றிய பார்வை சரியாகவே இருக்கிறது. இந்த வீடியோ இன்னும் விளக்கம் அளிக்கும் என நம்புகிறேன்.

    http://video.google.com/videoplay?docid=5619946571510310036

    ReplyDelete
  9. மருத்துவ படிப்பு உதவி பற்றி என்னுடைய ( நானும் ஒரு மருத்துவர் என்ற வகையில் ) கருத்து ...
    இது போன்ற படிப்புகளுக்கு ( எதிர் காலத்தில் வருமான வாய்ப்புடைய ) முற்றிலும் இலவசமாக எந்த உதவிகளையும் திணிக்க வேண்டாம் .... எனக்கு தெரிந்து பலர் முதலில் இது போன்று பல இடங்களில் குவியும் உதவிகளினால் தவறான வழிகளில் செல்கின்றனர் .... அதற்ற்கு பதிலாக பல வங்கிகளில் கல்வி கடனிற்கு ஏற்பாடு செய்யலாம் .... அல்லது நீங்களே வட்டி இல்லாமல் கடனுதவி செய்யுங்கள் ... அவருக்கு வருமான வாய்ப்பு வரும்போது அதை திருப்பி செலுத்தி அந்த பணத்தில் மற்றொரு மானவரிர்க்கு இதேபோல் உதவி செய்யுங்கள் ... இது போன்ற இடங்களில் (எதிர் காலத்தில் வருமான வாய்ப்புடைய) முற்றிலும் இலவசமான உதவி என்பது தேவையற்றது ..

    ReplyDelete
  10. //இப்போ புரியற மாதிரி நடித்து விட்டு கடைசியில் ஃபெயில் ஆனால் அப்புறம் நடப்பதே வேறு ஆமாம்//ஐயோ அப்ப test வெப்பீங்களா???!!!!
    பதிவு interesting'a இருந்துது...ஆனா seriousness கொஞ்சம் குறைஞ்சது மாதிரி இருந்துது...:-)

    ReplyDelete
  11. //இந்த LIMITATION களின் காரணமாக தான் சில அரைவேக்காடுகள் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றன.// நச் நறுக் :)

    ஆசானே, நேற்றைய வகுப்பிலிருந்து ஒரு டவுட்டு (டவுட்டு வருகிறதென்றால் பாடம் புரிகிறது என்றுதானே அர்த்தம் :). மரத்தின் கீழே ஒருவன், மரத்தின் மேலே ஒருவன். மரத்தின் மேலே உள்ளவனுக்கு தூரத்தில் வரும் சிங்கத்தைக் காண்பது நிகழ்காலம் என்றாலும் அந்த சிங்கம் மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவனைச் சாப்பிடுமா அல்லது போனாப் போவுது என்று விட்டு விடுமா என்று எப்படித் தெரியும். இங்கேதான் கடவுளும் எதிர்காலம் பற்றிய அறிவு பெற்ற ஞானிகளும் வேறுபடுகிறார்கள் என நினைக்கிறேன். இது பற்றி தங்களின் கருத்தென்ன.

    ReplyDelete
  12. அரபுத்தமிழன், சிங்கம் அவனை கொல்கிறதா இல்லையா என்பது காலத்தின் ஒரு WATCH TOWER - இன்
    மீது நின்று பார்க்கும் போது தெரியும். மரத்தின் மீது இருப்பவரும் கீழே இருப்பவரும் still ஒரே காலத்தில் தான் இருக்கிறார்கள். இது சும்மா ஒரு உதராணம் தான்.

    ReplyDelete
  13. 6D

    http://www.youtube.com/watch?v=Bn7HDBj9ZQQ&feature=related

    ReplyDelete
  14. என்ன சொல்வது என்றே தெரியவில்லை! பிரமித்து நிற்கிறேன்!

    ReplyDelete
  15. சமஸ்கிருதத்தில் 'கோசர' (Gocara) என்றால் புலன்களால் கிரகிக்கக் கூடியது என்று பொருள் . சமஸ்கிருதம் கடவுளை அகோசர என்கிறது. அதாவது புலன்களுக்கு அப்பாற்பட்டவன்! Beyond Senses ! (God is beyond sense..not non -sense !!!) //

    அழகான சிந்தனையைத்தூண்டும் வரிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. So, parallel universes are possible...

    //இது ஒரு நான்கு பரிமாண CUBE//

    ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட பல மேதைகள் தங்களாலேயே 4D யை கற்பனை பண்ணிப்பார்க்க முடியவில்லை என்கிறார்களே.. (limitations.. once again)

    //11 dimensions, String theory, m theory//

    இதைப்பற்றி ஒரு பிபிசி வீடியோ பார்த்தேன்.. ஒன்றையும் ஒழுங்காக விளக்கவில்லை... ஒரு மண்ணும் புரியல...

    //எத்தனை கைதேர்ந்த ஒரு ஆர்க்கிடெக்ட் என்று இப்போது புரிகிறதா ?//

    இது ஒரு பிடி மணலை கீழே கொட்டிவிட்டு உருவாகும் வடிவம் எத்தனை அழகானது என வியப்பதற்குச் சமன்...

    //STRING THEORY//

    expecting to read from ur style.. wanna understand... please explain in later on posts...

    ReplyDelete
  17. //இந்த LIMITATION களின் காரணமாக தான் சில அரைவேக்காடுகள் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றன.//

    அடடா என்னை அரைவேக்காடு என்று சொல்லிவிட்டீர்களே.... (உண்மைதான் கடவுள் என்ற ஒன்று இருந்தால் அது மட்டுமே அனைத்தும் அறிந்ததாக இருக்க முடியும்)

    நான், கடவுள் இல்லை என நினைப்பது limitation களால் அல்ல, Logical reasoning இல் பார்த்தாலும் கடவுள் இருப்பதற்கான சாத்தியம் மிகக்குறைவு.. (physics இல் logic ஐ மூட்டை கட்டி விட்டுத்தான் வரவேண்டும் என்பதும் புரிகிறது.. ஆனால்)

    // (God is beyond sense..not non -sense !!!)//

    nonsense..?? சில பதங்களை அவற்றின் அர்த்தம் புரியாமலே நாம் பயன்படுத்துகின்றோம். உ+ம் (கடவுள்) (-சமுத்ரா), ஒன்றின் அர்த்தம் புரியாமலே அதை நம்புவது அபத்தம்.. (ஒருவேளை நான் இல்லை என நினைக்கும் கடவுளும் நீங்கள் இருக்கிறது எனும் கடவுளும் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம்..)

    ReplyDelete
  18. //எத்தனை கைதேர்ந்த ஒரு ஆர்க்கிடெக்ட் என்று இப்போது புரிகிறதா ?//

    இது ஒரு பிடி மணலை கீழே கொட்டிவிட்டு உருவாகும் வடிவம் எத்தனை அழகானது என வியப்பதற்குச் சமன்...

    ReplyDelete
  19. //நாமெல்லாம் ஹீரோயின்களைப்பார்த்து மட்டுமே வியந்து கொண்டிருக்கிறோம்.//

    நெத்தி அடி :)

    ReplyDelete
  20. //மனிதர்களுக்கு பல விஷயங்கள் சிந்தனையில் இருந்தாலும் அவைகளை ஒன்றுபோல் கோர்வையாக சரியான எடுத்துக்காட்டுகளுடன் எழுதுவது என்பது ஒரு சிரமமான ஒன்று. அந்த திறமையை சரியான வகையில் வளர்த்து வைத்துள்ளீர். //

    சரியான கூற்று!

    ReplyDelete
  21. //சூரியனின் எட்டு நிமிடங்கள் பழமையான பிம்பம், சந்திரனின் ஒரு நிமிடம் பழமையான பிம்பம், நட்சத்திரங்களின் வருடக்கணக்கில் பழமையான பிம்பம் என்று ஒரு கடந்த கால இமேஜ்களை நாம் பார்க்க முடியும்//

    சந்திரனின் ஒரு நிமிட பழமையான பிம்பம் அல்ல ஒரு நொடி பழமையான பிம்பம்தானே வரும்வரும்!

    ReplyDelete
  22. நம்மால் உணரமுடியாத அதிர்வெண் கொண்ட அலைகளை (Below 20hz above 20k hz) எப்படி இப்போது கருவிகள் மூலமா பயன்படுத்துறான்!
    மின்காந்த அலைகளை எப்படி உணரும் கருவியை பயன்படுத்தி கட்டுபடுத்துகிறான்!
    மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடையும் முன்னர் இருந்த senceகளும் தற்போது senceகளும் ஒன்றா?

    பல நூறு கோடி வருடங்கள் கழித்தே புவியில் மனிதன் பரிணமிக்கிறான் தொடர்ந்து நெருப்பு உலோகங்கள் வானியல் பௌதிகம் வேதியல் பயாலஜி என முன்னேறுகிறான் ஆனால் பிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுள்களுக்கு மனித உருவங்களையும் அவர்களுக்கு மனிதன் கண்டுபிணித்து வடிவமைத்த ஆபரணங்களையும் போட்டு கொண்டும் இசை ஆட்டம் என பொழுது போக்கி கொண்டும் இருப்பார்கள் என்பது வேடிக்கையா இல்லையே!




    சமஸ்கிருதமும் தமிழும் உருவானதெப்போது ஆனால் கடவுளுக்கு மொழியை சமஸ்கிருதத்தை மட்டும் முன்னிறுத்தியது ஏன்?

    பகவத்கீதை என்றால் வர்ணசாஸ்திரத்தை ஏற்றுகொண்டே ஆக வேண்டுமா?


    தமிழ் மூலம் அறிவியல் கட்டுரைகளை எளிய முறையில் விளக்கி சமூக பங்காற்றும் நீங்கள் சமூக நிகழ்வுகளோடு கடவுளை ஒப்பிட்டு பார்த்தால் உண்மை எதுவென புரியலாம்!

    ReplyDelete